ஆழ அளவறியா
ஆதியினின்று
பொங்கிப் பிரவகித்துப்
பிணங்கிப் பிளிறித்
திமிருடன் திமிறி
ஊழிக் கூத்தாடும்
ஆழியதன் அலை
வெயிற் காய்ந்து
மழை உறிஞ்சி
மோனத் தவமிருந்து
பொறுமை பொதிந்து,
காலத்தேயும்
காலந்தாழ்ந்திடினும்
பரந்து பாய்விரித்துச்
சோராது காத்திருக்கும்
மணல் முன்னே
மண்டியிட்டு மடிகிறது;
மணல் தந்த முத்தத்தில்
மீண்டு உயிர் பெறுகிறது.
கரையின் மணலுக்கு
விலையாகிப் போகிறது
கடலின் அலை.
ஆரவார அரவங்கள்
அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி.
17 comments:
அழகான கவிதை
//ஆரவார அரவங்கள்
அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி.//
அருமையிலும் அருமை.. அன்பினால் ஆகாததும் உண்டோ..
ஆரவார அரவங்கள்
அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி.//
அன்பு! அது எதையும் சாதிக்கும் மந்திரக்கோல் அல்லவா!
அருமையான் கவிதை.
/அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி./
ஆம் மலர். அழகிய நியதியைச் சொல்லும் கவிதையும் அழகு.
அந்த முத்தாய்ப்பு
முத்தான முத்தல்லவோ?..
ஆகா..:)
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html
வாங்க கோவி. மிக்க நன்றி..
நன்றி சாரல்..
அருள்
வாழ்க உங்கள் தொண்டு...தொடர்ந்து நடக்கும் பலவிதப் போராட்டங்களால் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்..
நன்றி கோமதி மேடம்..
நன்றி ராமலக்ஷ்மி..அழகான நியதி அன்பு மட்டுமே..
வாழ்க்கைகும் அதுதானே முத்தாய்ப்பு ஜீவி..மிக்க நன்றி..
வாங்க கயல்...நன்றி..
அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி கீதமஞ்சரி..
அருமைக்கா ;-)
நன்றி கோபி..
Post a Comment