Sunday, March 4, 2012

திடமான பெண்ணும் வலிமையான பெண்ணும் - 'வல்லமை'யில்

வல்லமை மகளிர் வாரச் சிறப்பிதழில்...

ஓர் ஆங்கிலக் கவிதையின் தமிழாக்க முயற்சி..தமிழின் தன்மைக்கேற்ப, சில மாறுதல்களுடன்..

திடமான பெண்ணும் வலிமையான பெண்ணும்

திடமான பெண்
கட்டுடலை வடிவமைக்க
வளைந்து நெளிந்து
உடற்பயிற்சிகள் செய்வாள்;பலமான பெண்
ஆழமான தன் உள்நோக்குடன்
ஆன்மாவை வடிவமைப்பாள்.திடமான பெண்
எந்தவொன்றுக்கும்
அஞ்சுவதேயில்லை.வலிமையான பெண்
பயம் சூழும் தருணங்களில்
மனவுறுதியில் நிலைத்திருக்கத்
தவறுவதேயில்லை.திடமான பெண்
தன்னுள் சிறந்த
எந்தவொன்றையும்
பிறர் கொள்ள விடுவதில்லை;வலிமையான பெண்
தன்னுள் சிறந்தவற்றை
அனைவருக்கும்
கொடுக்காமல் இருப்பதில்லை.திடமான பெண்
தவறுகள் செய்வாள்;
வருங்காலத்தில்
அத்தவறுகள் தவிர்ப்பாள்.வலிமையான பெண்
நேரும் தவறுகளையும்
வரங்களாய் உணர்ந்து
அவற்றின் பலங்களைச் சுவீகரிப்பாள்.திடமான பெண்
உறுதியான

தன் கால்களால்
தானே அடியெடுத்து வைப்பாள்;வலிமையான பெண்
உதவி கோரும் தருணங்களை
நன்கு உணர்ந்திருப்பாள்.திடமான பெண்
தன் முகத்தில்
நம்பிக்கையின் சாயல்
அணிந்திருப்பாள்.வலிமையான பெண்
தன் முகத்தில்
கருணையருளின் சாயல்
அணிந்திருப்பாள்:திடமான பெண்
தன் பயணத்துக்கான பலம்
தன்னில் உள்ளதென
நன்னம்பிக்கை கொண்டிருப்பாள்.வலிமையான பெண்
தன் பயணத்தில்தான்
தனக்கான பலம் கிடைக்கிறதென்று
நன்னம்பிக்கை கொண்டிருப்பாள்.


ஆங்கிலக் கவிதை:

A strong Woman Versus A Woman of Strength

A strong woman works out every day
to keep her body in shape
but a woman of strength looks deep inside
to keep her soul in shape

A strong woman isn't  afraid
of anything
but a woman of strength shows courage
in the midst  of her fear

A strong woman won't  let anyone
get the best of her
but a woman of strength gives the  best
of her to everyone

A strong woman makes  mistakes
and avoids the same in the future
but a woman of strength realizes life's mistakes
can also be blessings and capitalizes on them

A strong woman walks
sure footedly
but a woman of strength knows
when to ask for  help

A strong woman wears  the look
of confidence on her face
but a woman of strength
wears  grace

A strong woman has  faith
that she is strong enough for the journey
but a woman of strength  has faith
that it is in the journey that she will become  strong

7 comments:

கோபிநாத் said...

நல்லாயிருக்குக்கா ;-)

ஹுஸைனம்மா said...

அருமையா இருக்குங்க. சாதாரண வாக்கியத்தை மொழிபெயர்க்கவே முழிபிதுங்கும். நீங்க, ஒரு கவிதையை, கவிதையாகவே...

சிறப்பு!! வாழ்த்துகள்.

ஜீவி said...

'strong'க்கும் 'strength' -க்கும் வித்தியாசம் காட்ட, 'திடம்', 'வலிமை' இந்த இரண்டு வார்த்தைகள் தேர்வுக்கு நிரம்ப யோசித்திருப்பீர்களே!

'கல்வி'யா, 'செல்வமா', 'வீரமா' என்கிற மாதிரி 'திடமா','வலிமை'யா என்று யோசிக்க்க வைத்து விட்டது கவிதை.

இன்னொன்று.

ஏன் பெண்ணை மட்டும் குறித்துச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆணுக்கும் தான் சரிப்பட்டு வருவதாகத் தெரிகிறதே! இல்லை, உலகத்தின் எதிர்பார்ப்பே பெண்களிடம் மட்டும் தானா?..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஹுஸைனம்மா.....மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடினம்தான்...அதே அழகுடன் தராவிட்டால் மூலக் கவிதைக்கும் அதை எழுதியவருக்கும் துரோகம் செய்தது போலாகிவிடும்...

இதிலேயே கருத்துகளை வலியுறுத்த ஓரிரு இடங்களில் சிறு மாறுதல்கள் தேவையாய் இருந்தது...

பாச மலர் / Paasa Malar said...

ஆமாம் ஜீவி...திடமும் வலிமையும் ரொம்பவும்தான் யோசிக்க வைத்தன..அதிலும் அதே அர்த்த தொனியில் இன்னும் பல வார்த்தைகளும் வந்து குழப்பின....

கடைசியாய் திடம் வலிமை தேர்வு செய்யப்பட்டன...

ஆண்களுக்குப் பொருந்தும்தான்...இன்னுமொரு கோணமும் அவர்களுக்காய்ச் சேர்ந்து விடுமே...உடல்பலம்...

பெண்களை ஆராய முற்பட கவிஞருக்கு இந்த இரு கோணங்கள் தோன்றியிருக்க வேண்டும்...

//உலகத்தின் எதிர்பார்ப்பே பெண்களிடம் மட்டும் தானா?..//

ஒருவேளை எதிர்பார்ப்பதை ஓரளவேனும் நிறைவேற்றும் பொறுப்புணர்ச்சி பெண்களுக்கு உண்டு என்று நம்பியதால்தானோ என்ன்வோ...

ராமலக்ஷ்மி said...

மகளிர்தின வாரத்துக்கு ஏற்ற கவிதையைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். அருமையான மொழி பெயர்ப்பு. தொடருங்கள் மலர்.