விளையாட
துணை தேட
பாசநேசம் பழக
காதல் பேச
ஊடலாட
உணர்வுகளுக்கு வடிகால்
இங்கு உயிர்களல்ல.
உயிரற்ற
உணர்வற்ற
பெட்டிகளாய்ப் பொருட்கள்.
தகவல் தொடர்புகள்
கூடத்
தமக்குத் தாமே.
இறைவனை தரிசிக்கவும்
இயற்கையை ரசிக்கவும்
இரவல் கண்களை
இறைஞ்சுகின்ற
இலகுவான தேடல்கள்.
தொழில்நுட்பங்கள்
மனநுட்பங்களை
மென்று தின்று
ஏப்பம் விட்டுப் போகின்றன.
வாழ்க்கைச் சூட்சுமங்கள்
வளைந்து கொடுத்துக் கொடுத்து
வலையில் வீழ்ந்து போகின்றன.
16 comments:
வடிகால் இரவல்கள் மிக அருமையாக இருக்கிறது.
இறைவனை தரிசிக்கவும்
இயற்கையை ரசிக்கவும்
இரவல் கண்களை
இறைஞ்சுகின்ற
இலகுவான தேடல்கள்.//
இலகுவான தேடல்கள் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கே மலர்.
உணர்வுகளுக்கு வடிகால்
இங்கு உயிர்களல்ல.
உயிரற்ற
உணர்வற்ற
பெட்டிகளாய்ப் பொருட்கள்.
உண்ர்வு உள்ள உயிர்களுடன் உறவாட உண்ர்வற்ற பெட்டி தேவையாக இருக்கே மலர்.
கவிதை அருமை.
உண்மைதான் கோமதி மேடம்....தேடல்களின் தேவையாவது இன்னும் இருக்கிறதே என்று மகிழ வேன்டியதுதான்..
சூப்பர் ;-))
\\தொழில்நுட்பங்கள்
மனநுட்பங்களை
மென்று தின்று
ஏப்பம் விட்டுப் போகின்றன\\
ம்ம் ;-)
அடி பின்னிட்டீங்களே..
:)
/இறைவனை தரிசிக்கவும்
இயற்கையை ரசிக்கவும்
இரவல் கண்களை
இறைஞ்சுகின்ற
இலகுவான தேடல்கள்./
ரொம்ப அருமையாய் சொல்லியிருக்கீங்க மலர்.
//இறைவனை தரிசிக்கவும்
இயற்கையை ரசிக்கவும்
இரவல் கண்களை
இறைஞ்சுகின்ற
இலகுவான தேடல்கள்.//
இந்த வரிகளைப் படித்ததும், கால்மணி நேரத்திற்கும் மேலாக பெருத்த யோசனையாகப் போய்விட்டது. தத்துவ விசாரங்கள் போல நிறைய விஷயங்களை உள்ளடக்கிக் கொண்டு, அதே நேரத்தில் வெகு எளிமையாக வெளியே காட்டிக் கொண்டு பொருள் பொதிந்த மெளனத்துடன் இருப்பதாகத் தோன்றியது.
'இரவல் கண்கள்' 'இலகுவான தேடல்கள்' -- இந்த இரண்டு வார்த்தைகளில் விரியும் உண்மைச் சுடல் அற்புதம்! இந்த இரண்டையும் தவிர்ந்திருந்தால், உணர்வுகளுக்கு உண்மையான வடிகால் கிடைத்திருக்குமோ?..
வலையில் வீழ்ந்து போன வாழ்க்கைச் சூட்சுமங்கள்!
ப்ளஸ் ல பழகிப்பழகி.. எனக்கு இப்ப ஜீவி யின் கமெண்ட்டை லைக் செய்யப்ளாக்கர் பட்டன் வைக்கலையேன்னு ஆகிடுச்சே..:)
நன்றி கோபி..வருத்தப்படவேண்டிய விஷயம்தான்..
நன்றி கயல்
நன்றி ராமலக்ஷ்மி..
நன்றி ஜீவி..
எளிமைச் சொல்லாடல் எனக்கு மிகவும் பிடித்த, எளிதில் வருகின்ற ஒன்று..
ஓரிரு கோயில்கள், ஓரிரு சுற்றுலாத்தலங்களுக்கு நேரில் சென்று சொந்தக் கண்களால் ரசிக்க தரிசிக்கப் பழகிவந்த நாம், இன்று இரவல் கண்களால் அனைத்தையும் ரசிக்கிறேன் பேர்வழியென்று..ஓரிரு இடங்களுக்குச் செல்வதைக்கூடத் தவிர்த்து வருகிறோம்...
இன்னும் எளிமையாகச் சொல்லப் போனால், அடுத்த தெருவில் இருக்கும் கோவிலுக்குப் போவதை விட அமெரிக்க, ஐரோப்பிய கோவில்களை ஊடகங்களில் காண்பதில் திருப்திப்படுகிறோம்..
உண்மையான வடிகால் தேடுவது குறைந்துதான் போய்வ்ட்டது..
இரவல் கண்களைப் படிக்கப் பயன்படும் கண் கண்ணாடி போலப் பயன்படுத்திக் கொள்ளலாம்...
தேவைப்படும்போது மட்டும்..
//'இரவல் கண்கள்' 'இலகுவான தேடல்கள்' -- இந்த இரண்டு வார்த்தைகளில் விரியும் உண்மைச் சுடல் அற்புதம்! இந்த இரண்டையும் தவிர்ந்திருந்தால், உணர்வுகளுக்கு உண்மையான வடிகால் கிடைத்திருக்குமோ?..//
தவிர்க்க வேண்டிய் இடங்களில் தவிர்த்து விட்டால் உண்மையான வடிகால்கள் 25 சதமாவது கிட்டாதா...
கோமதிமேடம் சொல்வது போல் இவையெல்லாம் தேவைப்படுகிறது..
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் வலையில் chatting தேவைப்படுகிறது..
ஆனால் பக்கத்து வீட்டுக்குத் தேவையா? (காதலர்கள் மட்டும் விதிவிலக்கு...)
யாரங்கே....கயல் சொல்வதைச் சீக்கிரம் செய்யுங்கள்...
வயதானவர்கள், நோயுற்றவர்கள் இவர்கள் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு கூட போக முடியாது அவர்களுக்கு என்றே இறைவன் திருவிழா காலங்களில் வீதி வழியாக வந்து காட்சி கொடுப்பார்.
அது போல் எல்லோரும் எல்லா இடங்களுக்கும் போக முடியாது அவர்கள் ஊடகங்களில் பார்த்து திருப்தி பட வேண்டியது தான் நீங்கள் சொல்வது போல்.
விஞ்ஞான வளர்ச்சியால் இணையம் நன்மையும் செய்கிறது. தீமையும் செய்கிறது.
பக்கத்துவீட்டுக்கு சாடிங் தேவையில்லை.
என் பெண்ணும், என் மகனும் இணையத்தில் இருக்கும் போது என்னுடன் பேசவில்லை என்றாலும் அருகில் இருப்பது போல் உண்ர்வேன்.
இரவல் கண்களைப் படிக்கப் பயன்படும் கண் கண்ணாடி போலப் பயன்படுத்திக் கொள்ளலாம்...
தேவைப்படும்போது மட்டும்..//
நீங்கள் சொல்வது போல் தேவை படும் போது மட்டும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
இணையமே வடிகாலாய் இருக்கும் பலரை சிந்திக்க வைத்த கவிதை.
வாழ்த்துக்கள் மலர்.
கோமதி மேடம்,
எனக்கே ஒரு வடிகால் இணையமும் இது போன்ற கருவிகளும்தான்....நாணயத்தின் மறுபக்கமான கருத்துக்கு மிக்க நன்றி.
Post a Comment