பல சமுதாயப் ப்ரச்னைகள் நமக்குச் சவாலாக இருப்பது கால காலமாகத் தொடர்ந்து வருவதுதான். அரசியல், ஊழல், மதம், இனம், பற்றாக்குறை, கல்வி, வேலைவாய்ப்பின்மை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
தனி ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று பிறழ்ந்து காணப்படும் நிலையும் நாம் நன்கறிவோம். ஆனால், சமீப காலமாக இது போன்ற பிறழ்வுகள் பல தம்பதிகள் வாழ்வில் கண்கூடாகப் பார்த்து வருகிறேம்.
நம் சொந்தம், நட்பு வட்டம், தெரிந்தவர்கள் வாயிலாகக் கேட்பது என்பது சமீப காலமாக தம்பதியருக்குள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதாகும்.
ப்ரச்னைகள் யாருக்குத்தான் இல்லை? அதை எதிர்கொள்கிற மனப்பான்மைதான் இன்றைய இளைய தலைமுறையினரிடம் குறைந்து கொண்டே வருவது போல் தோன்றுகிறது.
உண்மையான, தீவிரமான காரணங்களால் சகிப்புத்தன்மை இல்லாமல் பாதுகாப்பு கருதிப் பிரிதல் என்பது அவசியமான ஒன்றுதான்.
ஆனால் இன்று அன்றாட நிகழ்வுகளைக் கூடப் ப்ரச்னை என்று சொல்லி, என் பொம்மையை நீ உடைச்சிட்ட....உன் பொம்மையை நான் உடைக்காம விடமாட்டேன்..என்று குழந்தைத்தனமாக மனமுதிர்ச்சியில்லாமல் பிரிந்து வாழும் இவர்கள்....செய்வதறியாது திகைத்து நிற்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள்....
எல்லா வகையிலும் எதார்த்தவாதிகள், So what? என்று பேசும் தன்மை, பெற்றோரின் அளவுக்கதிகமான செல்லம் அல்லது கண்டிப்பு, நீயா நானா என்கிற அகங்காரம், தனியாக வாழும் பலரை முன்மாதிரியாகக் கொள்ளுதல் என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் காதல் திருமணம் புரிந்தவர்கள்..பல நாள் பேசிப் புரிந்து கொண்டு பின் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற பெயர் வேறு...மாமியார் மாமனார் இல்லாத் தனிக்குடித்தனம் செய்பவர்களுக்கும் ப்ரச்னைதான்...வரதட்சணைத் தொல்லை போன்ற காரணங்கள் கூட இல்லை..
திருமண வாழ்வுக்கு ஆதாரமான, அடித்தளமான சகிப்புத்தன்மை, புரிந்து கொள்ளுதல், நட்பு உணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான காதல் உணர்வு இல்லாமல் போனது....இப்படிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்...
சமீபத்துத் தமிழகப் பயணத்தின் போது திருமணமான தம்பதிகளை வாழ்த்தலாம் என்று அவர்களைப் பற்றி விசாரித்த போது, விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள், தனியாகப் பிரிந்து வாழ்கிறார்கள் என்று கேள்விப்பட அதிர்ச்சியாக இருந்தது...நண்பர்கள், தெரிந்தவர்கள் யார் வழியில் பார்த்தாலும் இந்த ரீதியில் ஏதாவது ஒரு கதை...
பயமாய் இருக்கிறது!!

- பிள்ளை பெத்துக்க வீட்டுக்கு வந்தா...அப்புறம் புருஷன் வீட்டுக்குப் போகவே மாட்டேங்கிறா..
- என்னை என் புருசன் கூட அனுப்பிச்ச உயிரோடவே பாக்க முடியாது.உங்களுக்கு நான் உயிரோட இருக்கணும்னா என்னை அங்கே போகச் சொல்லாதீங்க..
- என் காலில் நிக்க என்னால் முடியும்...எனக்கு அந்த ஆள் தயவு தேவையில்லை.
- என்னை அடிக்கக் கை ஓங்கிட்டு வர்ற அந்த ஆளுகூட நா குப்பை கொட்ட மாட்டேன்..உங்களுக்கு நான் இங்க இருப்பது கஷ்டமா இருந்தாச் சொல்லுங்க..நான் ஹாஸ்டலுக்குப் போறேன்..
- அவளுக்கு என்ன அவ்ள திமிரு..புள்ளய வேணா வச்சுக்கட்டும்...வேணுங்கிறப்போ போய் நா பாத்துக்கிறேன்...
- என்னை விட அதிகம சம்பாதிக்கிற திமிரு அவளுக்கு...அவள இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னா நா என் பிரண்ட் ரூமுக்கு போய்ருவேன்..