Sunday, December 4, 2011

THE DIRTY PICTURE

எண்பதுகளில் சில்க் புகழின் உச்சகட்டத்தில் இருந்து, பின் 1996 ல்

இறந்த போது ...ஊடக வளர்ச்சி தற்காலம் போல இல்லாத நிலையில், கொலையா தற்கொலையா..தாடிக்காரர் காரணமா என்ற கேள்விகள் எழ விடைகள் கிடைக்கவில்லை. நடிகை என்றாலே தற்கொலை முடிவு என்பதுதானே என்று போய்விட்டது இதுவும் அப்போது.


கவர்ச்சி நடிகை என்றாலும் பெண்களையும் அக்காலத்தில் கவர்ந்தவர் சில்க் என்பதால் என் தோழிகள் முதல் எங்களின் அம்மாக்கள் வரை அப்போது அவர் மரணம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.

இன்று இந்தப் படம் அவர் வாழ்க்கை வரலாறு அல்ல என்றே கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும், இப்படத்தைப் பார்க்கும்போது இவை இவை காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று சில விடைகள் கிடைக்கின்றன.

தோல்வியைத் தாங்க இயலாமை, போட்டி நடிகையின் வரவு, யாருமற்ற தனிமை, கடன் தொல்லை ..பல காரணங்களைத் திரைப்படம் வாயிலாகப் பார்க்கும்போது அவர் மரணம் தற்கொலைதான், கொலையாக இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

வித்யா பாலன் தோற்றத்தில் சில்க் பக்கம் கூட நெருங்க முடியவில்லை..என்ற போதும் நடிப்பில் தன் முழுத்திறமையும் பதித்துள்ளார். 'என்னுடன் பேசுவதற்கு யாருமில்லையா' என்று கதறுகிற போதும், பத்திரிகையாளர் வீட்டின் வெளியே ஆட்டம் போடும் போதும், நசுருதீன் ஷாவின் குதர்க்கமான பேச்சுக்குப் பதிலாகத்  தன்வலியைத் தைரியமாக வெளிப்படுத்தும் மன உறுதியிலும், 'நான் சில்க்' என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் போதும்......மிக நேர்த்தியான, அழுத்தமான முகபாவங்கள்..

மறைந்த சில்க் வாழ்க்கையின் பல தெளிவான கோணங்கள்....சன்னல் வழியாகக் குதித்துத் தப்பிக்கும் துணிச்சல் முதல்...தோல்வியால் துவண்டு கோழைத்தனமாக முடிவெடுக்கும் வரை... மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு சிறப்புப் பாராட்டுகள்...

இந்தப் படம் தந்த பாதிப்பையும் சில்க் என்ற பெண்ணின் பாத்திரத்தையும் மறப்பதற்குச் சில நாட்கள் ஆகும்.

7 comments:

ராமலக்ஷ்மி said...

பெண்ணாக திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் இடர்கள் அல்லல் மிகுந்தது. அதைப் பிரதிபலிப்பதாக இப்படமிருக்கிறதெனத் தோன்றுகிறது.

பாச மலர் / Paasa Malar said...

மிகச் சரி..சில்க் என்ற நடிகையின் கதை என்ற கோணத்தையும் தாண்டி..தொழில்ரீதியாக எந்த ஒரு நடிகையும் படும் பாடு...இன்று ஓரளவு பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன்..

ஜீவி said...

இன்று காலை தான் உங்கள் முந்தைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கை- யில், இணையப் பதிவுகளின் பக்கம் உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இதோ, தொடர்ந்து எழுத வந்து விட்டீர்கள்.

இனி, தொடர் பதிவுகளுக்கு ஏதும் தடையில்லை. வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

ம்ம்ம்..பார்த்துடுவோம் ! ;-)

மங்கையர் உலகம் said...

புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

http://ithu-mangayarulagam.blogspot.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் படம் பாக்கல இன்னும்.. வித்யா சில்க்கா நடிப்பது நினைச்சு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..நல்லா நடிச்சிருக்காங்கன்னு சொல்றீங்க.. அப்ப சரி..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க முத்து....உண்மையில் நல்லா நடிச்சிருக்காங்க...சில்க் போலவே முகபாவமுள்ள ஒருவர் நடித்திருந்தால் இன்னும் நன்றாகத்தான் இருந்திருக்கும்...