Thursday, October 6, 2011

அரசியல் மங்காத்தா!!

என்ன ஒரு பரிமாண வளர்ச்சி! டார்வின் கோட்பாடு கூறுவது உடற்கூறு தொடர்பான 'survival of the fittest'...ஆனால் நம் தற்கால..ஏன், வருங்கால அரசியலைக் கருத்தில் கொண்டால், டார்வின் கோட்பாடு உடற்கூற்றைத் தாண்டிய உளவியல் தொடர்பானதாக இருப்பது என்ன பெரிய கொடுமை.... யாரை மிதித்து யார் முன்னேறுவது..இதுவும் உளவியல் தொடர்பான survival of the fittest...

எந்த ஒரு கட்சி மீதும் நம்பிக்கையில்லை...எந்த ஒரு தலைவனுக்கும் / தலைவிக்கும் கொள்கைகளும் இல்லை..கொள்கை பெயரளவில் இருந்தாலும் அதைப் பின்பற்றுவதாக இல்லை...எதில் வேறுபட்டாலும் இதில் மட்டும் அரசியல்வாதிகளுக்குத்தான் என்ன ஒற்றுமை!

உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவது கொஞ்சம் மக்களுக்காக ஏதோ செய்து வந்தார்கள்..இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அதிசயங்களைப் பார்த்தால், உள்ளூர்த் திட்டங்கள் 10 சதவிகிதமாவது நிறைவேற்றப்படுமா என்று சந்தேகிக்க வைக்கின்றன...

  • வாக்காளர்கள் எண்ணிக்கையோ என்று மலைக்குமளவு வேட்பாளர் எண்ணிக்கை...
  • தேர்தல் அதிகாரி யார் என்று தெரியாத கட்சித் தலைவர்..
  • கூட்டணியை அவ்வப்போது கழற்றி, மீண்டும் சேர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதம்...
  • காசு வாங்கிக்கொண்டு வேட்புமனு திரும்பப் பெறும் வாங்கும் வேட்பாளர்..
  • தன்னையறியாமலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு வேட்பாளர்..
  • அதிக வேட்பாளர்கள் உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை சரியானதுதானா என்று நீதிமன்றத்தில் வரப்போகும் வழக்குகள்...
  • இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..

தொலைக்காட்சிச் செய்திகள் பார்ப்பாவர்கள் தொடர்கள் பார்ப்பவர்களைத் தூற்ற...

தொடர்கள் பார்ப்பவர்கள் செய்திகள் பார்ப்பவர்களைத் தூற்ற..

ஆட்சி அரசியலும் சரி..குடும்ப அரசியலும் சரி...

எதுதான் சரியாக இருக்கிறது?

சரிதான்...inky pinky ponky  முறையில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் என்னதான் ஆகப்போகிறது..

அரசியல் மங்காத்தா ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் இழப்பது மக்கள் மட்டுமே...

8 comments:

ராமலக்ஷ்மி said...

//அரசியல் மங்காத்தா ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் இழப்பது மக்கள் மட்டுமே...//

நூறு சதவிகிதம் உண்மை மலர்:(!

கோபிநாத் said...

\\எதுதான் சரியாக இருக்கிறது?\\

அரசியலில் எப்போதும் சரி என்பதே இல்லை...அப்படி இருந்தால் அது அரசியலே இல்லை ;-)

இழப்பது மக்கள் மட்டுமேன்னு இன்னும் சொல்லிக்கிட்டு இருக்க முடியாதுக்கா..இந்த அரசியல் மங்காத்தாவுல எப்போதும் அவுங்க தான் ராஜா ;-) ஆனா என்ன தான் ராஜான்னு நமக்கே இன்னும் புரியல !

ஹுஸைனம்மா said...

//அரசியல் மங்காத்தாவுல எப்போதும் அவுங்க தான் ராஜா//

நாம்தான் ராஜா என்பதை அறியாமலேயே சில மக்கள்! அறிந்தாலும், செய்ய வழியில்லாமல் பலர்!! :-((((

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி..ஹுஸைனம்மா...

என்னமோ கோபி...ஒண்ணும் புரியலை....

கோபிநாத் said...

\\என்னமோ கோபி...ஒண்ணும் புரியலை....\\

:-))))))) யக்கா 10 நாள் கழித்து அதுவும் தேர்தல் நாள் அன்னிக்கு வந்து பார்த்தா எப்படி புரியும் ;-))

பாச மலர் / Paasa Malar said...

கோபி,

தாமதாக வந்தது தப்புதான் அதை ஒத்துக்கிறேன்....ஆனால் தேர்தலே முடிந்திருந்தாலும்..முடிவே வந்து விட்டாலும்...எது நடக்குமோ அது நடக்கும்...நன்றாக நடக்கிறதோ இல்லையோ... நடக்கும்...

selva said...

தலை சிறந்த சர்வாதிகாரியின் ஆட்சியை விட மோசமான ஜனநாயகவாதிகளே மேல் என்று எப்போதோ படித்த ஞாபகம்..இவ்வாறு கூறிய மேதை நிச்சயமாக நம் தேர்தல்களை பார்த்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்...ஊழல் மயமாயிருப்பவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல...நம் மக்களே..

பாச மலர் / Paasa Malar said...

ஆம்..குற்றவாளிகளால் ஆளப்படுகிற குற்றவாளிகள் நாம்....வருகைக்கு நன்றி புதுகை செல்வா..