Monday, August 1, 2011

கல்மலைச் சுவடுகள்



இல்லறக் கனவுகள்
உன்னோடு மரிக்க
வீட்டு உறவுகள்
என்னோடு வசிக்க

பெண்பிள்ளையை உன் பெயரில் விளிக்க
கொண்டவளுடன் வாழ்க்கையது நடக்க

நம் காதல் பேசிய இடங்களுக்கு
என் குடும்பத்துடன் போகையில்

சோலைகள் கதை சொல்லிட
கோவில்தூண்கள் கோபம் கொண்டிட
பேருந்து இருக்கைகள் இழப்பை இகழ்ந்திட
திரையரங்குகள் தீண்டல்கள் பேசிட...

அலைமணல் சுவடுகளாய்
அழிந்தே போயின
என்றெண்ணிய நினைவுகள்

மீண்டு வந்தன
மீண்டும் வந்தன
காலத்தால் அழியாத
கல்மலைச் சுவடுகளாய்..

'நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்'
என்றவளே!

இச்சுவடுகள்
மீட்டெடுத்த சுமைகள்
யாரிடம் பேசுவேன்?

உனக்கென்று ஒரு கணவன்
எனக்கென்று ஒரு மனைவி
என்றான பின்..

நீ அன்று
பேச நினைத்ததைப்
பேச முடியாதவன்..
நீ இன்று
பேசாதது கூடப்
பேசுகின்றேன்..

எங்கேயோ இருக்கும்
நீயும் கூட
நான் பேசுவதைத்தான்
நினைக்கின்றாயோ?

8 comments:

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப ரொம்ப அழகான கவிதை..

ராமலக்ஷ்மி said...

ஓங்கி அடித்த ஒரு காற்றில் சுழற்றிவிடப் பட்ட வாழ்க்கை சிலருக்கு. அதிலிருந்து மீள இயலா ஒரு ஆன்மாவின் துயரை அழகாகச் சொல்லியுள்ளீர்கள் மலர்.

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;-)

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சாரல், கோபி, ராமலக்ஷ்மி...

விண்ணைத் தாண்டி வருவாயா மிகவும் தாமதமாக இப்போதுதான் பார்த்தேன்..அதன் விளைவுதான் இது...

Anonymous said...

நீ அன்று
பேச நினைத்ததைப்
பேச முடியாதவன்..
நீ இன்று
பேசாதது கூடப்
பேசுகின்றேன்..

எங்கேயோ இருக்கும்
நீயும் கூட
நான் பேசுவதைத்தான்
நினைக்கின்றாயோ?////


ரசித்த வரிகள் நண்பரே

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஷீ-நிசி..

ரசிகன் said...

நம்பி மனைவி வந்த பின் இழந்த காதலியைப் பற்றி உருகுவது, மனைவிக்கு செய்யும் துரோகம்ன்னு நினைக்கிறேன்.

கவிதை நடை அருமை:)

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ரசிகன் வருகைக்கு....

உண்மைதான்..துரோகம் இழைப்பவருக்கும், துரோகத்தை அனுபவிப்பவருக்கும் வலி தரும் துரோகம்..