Monday, March 5, 2012

ராட்சதப் பூ








ராட்சதப் பூ

உன்னுடனான
என்
பிணக்குகளினால்
ராட்சதப் பூவாய்
மலர்ந்தெழுந்த
கோப மணம்தான்
என்னமாய்க் கமழ்கிறது!


10 comments:

கோபிநாத் said...

படங்கள் கலக்கல் ;-))))

ராமலக்ஷ்மி said...

அருமை. கோபம் கூட நமக்கெல்லாம் பூவாகதான் மலர்கிறது பாருங்க:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதையும் ராமலக்‌ஷ்மி கமெண்ட்டுமா சேர்ந்து இன்னும் மணக்குது போங்க.:))

ஜீவி said...

கோபம் வந்தால் முகம், முகத்தின் மூக்கு நுனி சிவக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது மணக்கக் கூடச் செய்யுமா?.. மனத்திற்குப் பிடித்த எல்லாமே மலரத்தான் செய்யும்.. மலர்ந்தால் மணம் தானே?.. கரெக்ட் தான்!

Asiya Omar said...

ராட்சதப்பூ அப்ப அப்ப மலர வேண்டும் போல,ராமலஷ்மி,முத்துலெட்சுமி கருத்துகளோடு நறுமணமாகி விட்டது.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி..எல்லாம் Google images உபயம்

பாச மலர் / Paasa Malar said...

ஆமாம் ராமலக்ஷ்மி...அப்படி மலர்வதால்தான் அதற்கு ஆயுள் குறைவாகவும் இருக்கிறது..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கயல் முத்து....
மணக்கட்டும்..எல்லாம் மணந்தால் போதும்..இனிமை தன்னால் வரும்..வருகைக்கு நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

கரெக்ட்தான் ஜீவி...

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஆசியா...அது அப்ப் அப்ப தானா மலரத்தான் செய்யும்....நறுமணம் நன்கு கமழட்டும்..