Friday, April 20, 2012

நடுநிசிக்குப் பின் மூன்றாம் ஜாமத்தில்...

ஒரு ஹிந்திக் கவிதையின் தமிழாக்கம்

நான் பார்த்திருந்தேன்
என்னிலிருந்து மிகவும் தூரத்தில்
விண்மீன்களை.

நான் அவற்றைப் பார்த்த அந்தக்கணம்
அவற்றிலிருந்து எனக்கும்கூட
அதே தூரம்தான்.

கண்சிமிட்டிக் கடந்து போகும்
அவ்விண்மீன்கள்
கடந்து செல்லும்
காலமது போலவே.

நடு நிசிக்குப் பின்னான
மூன்றாம் ஜாமத்துப் பொழுது
இரவின் ஆழத்தினூடே
வேட்டையாடி விரட்டிச் செல்கிறது
விடியல்தனை.

முழுமையானதொரு தெளிவுக்கு
வரமுடியவில்லை என்னால்.

முதல் முறையாகத்தான்
இந்த வாழ்க்கையை
நான் வாழ்கிறேனா?
இல்லை,
மீண்டுமொருமுறை
திரும்பத்தான் வாழ்கிறேனா?
வாழ்ந்து கொண்டேயிருக்கையில்
சுவாசத்தின் அந்த முதல் கணத்தை
மறந்துதான் போனேனா?

மீனும்கூடத் தண்ணீரைக் குடித்திடுமா?
சூரியனும்கூட வெப்பமது உணர்ந்திடுமா?
ஒளியும்கூட இருளதனைக் கண்டிடுமா?
மழையும்கூட நனைந்துதான் போயிடுமா?
கனவுகளும்கூட நித்திரை குறித்த
வினாக்களைத்தான் வினவிடுமா
என்னைப் போலவே?

நான் நடந்தேன்
நீளமான மிகவும் நீளமான
நடை நடந்தேன்.

அப்போது நான் பார்த்தேன்.
நான் பார்த்த அந்தக்கணம்
எனக்கு மிக அருகில் விண்மீன்கள்.

இன்றைய பொழுது முழுவதும்
மழையது பொழிந்திட
உந்தன் முகத்திலிருந்து
கழுவப்பட்டுப்போயின வார்த்தைகள்.

அதீதம் ஏப்ரல் 09, 2012 இதழில் வெளிவந்தது...

ஹிந்திக் கவிதை

मैंने तारों को देखा बहुत दूर
जितना मैं उनसे
वे दिखे इस पल में
टिमटिमाते अतीत के पल
अँधेरे की असीमता में,
सुबह का पीछा करती रात में
यह तीसरा पहर

और मैं तय नहीं कर पाता
क्या मैं जी रहा हूँ जीवन पहली बार,
या इसे भूलकर जीते हुए दोहराए जा रहा हूँ
सांस के पहले ही पल को हमेशा !

क्या मछली भी पानी पीती होगी
या सूरज को भी लगती होगी गरमी
क्या रोशनी को भी कभी दिखता होगा अँधकार
क्या बारिश भी हमेशा भीग जाती होगी,
मेरी तरह क्या सपने भी करते होंगे सवाल नींद के बारे में

दूर दूर बहुत दूर चला आया मैं
जब मैंने देखा तारों को - देखा बहुत पास,
आज बारिश होती रही दिनभर
और शब्द धुलते रहे तुम्हारे चेहरे से


After Midnight

I saw the stars far off -
as far as I from them:
in this moment I saw them -
in moments of the twinkling past.
In the boundless depths of darkness,
these hours
hunt the morning through the night.

And I can't make up my mind:
am I living this life for the first time?
Or repeating it, forgetting as I live
the first moment of breath every time?

Does the fish too drink water?
Does the sun feel the heat?
Does the light see the dark?
Does the rain too get wet?
Do dreams ask questions about sleep as I do?

I walked a long, long way
and when I saw, I saw the stars close by.
Today it rained all day long and the words were washed away
from your face.


மூலம்: Theesra Pehar   Hindi poem by Mohan Rana
ஆங்கில மொழியாக்கம்: Lucy Rosensteinஆங்கிலக் கவிதையாக்கம்: After Midnight By Bernard O'Donoghue

12 comments:

ஜீவி said...

//Or repeating it, forgetting as I live
the first moment of breath every time?//

//சுவாசத்தின் அந்த முதல் கணத்தை
மறந்துதான் போனேனா? //

மொத்த கவிதையிலும், இந்த இரண்டு வரிகள் நிரம்ப அர்த்தம் கொடுத்து மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது. மூல ஹிந்தி வரிகள் தெரியாத போது, ஆங்கில மொழிபெயர்ப்பே துணை.

இந்த ஜென்மாந்திர தொடர்பு ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கும் தெரிந்து மூலத்தின் அர்த்தத்தையே கொண்ட உணர்ந்த மொழிபெயர்ப்போ தெரியவில்லை.

'ஜென்ம ஜென்மாந்திர' அர்த்தம் தெரிந்தும், சுவாசத்தின் அந்த முதல் கணம் மறந்து போனதில் வியப்பில்லை-- ஒவ்வொரு ஜென்மத்திற்கும் சுவாசம் புதுப்பிக்கப் படுகிறது என்று கொண்டாலும் இந்த ஜென்ம முதல் சுவாசமும் கூட நினைவில் படிந்தால் தானே மறந்து போவதற்கு?.. கடைசி சுவாசமும் கூட முதலிதைப் போலவே தான்.

கோபிநாத் said...

நல்லாயிருக்கு அக்கா ;-)

கோமதி அரசு said...

கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு அருமை மலர்.

ராமலக்ஷ்மி said...

அருமையான மொழியாக்கம் மலர்

//மீனும்கூடத் தண்ணீரைக் குடித்திடுமா?
சூரியனும்கூட வெப்பமது உணர்ந்திடுமா?
ஒளியும்கூட இருளதனைக் கண்டிடுமா?
மழையும்கூட நனைந்துதான் போயிடுமா?//

ரசித்த வரிகள்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி..

ஹிந்திக் கவிதையையும் இணைத்துவிட்டேன்...

என்ன இருந்தாலும், மூலக்கவிதையின் அழகு ஆங்கிலத்திலும் வரவில்லை....தமிழிலும் இன்னும் சற்றே குறைந்துதான் உள்ளது..மொழிபெயர்ப்பதில் சந்தோஷம் இருந்தாலும், சின்னக் குற்ற உணர்வும் இல்லாமல் இல்லை..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோமதி மேடம்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி..எனக்கும் கூட அந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தன...

சசிகலா said...

மிகவும் அழகான வரிகள் .

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சசிகலா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமைப்பா..

அதுவும்
\\முதல் முறையாகத்தான்
இந்த வாழ்க்கையை
நான் வாழ்கிறேனா?
இல்லை,
மீண்டுமொருமுறை
திரும்பத்தான் வாழ்கிறேனா?
வாழ்ந்து கொண்டேயிருக்கையில்
சுவாசத்தின் அந்த முதல் கணத்தை
மறந்துதான் போனேனா?//
ரொம்பவும் பிடிச்சது.. இன்னும் நல்லா செய்யனும்னு நினைக்கிறது சரிதான். ஆனா எங்களுக்கும் இது அறிமுகப்படுத்தனுமே..தொடருங்க..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கயல்....அவசியம் நிறைய எழுதுகிறேன்..