Monday, April 2, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

இரண்டு திரைப்படங்கள்:

காதலில் சொதப்புவது எப்படி? தலைப்பு ஒரு மாதிரி இருக்கிறதே என்று யோசனையுடன் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், இந்தக் காலகட்டத்துக்கு
மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆணாக ஆணும், பெண்ணாகப் பெண்ணும் யோசிப்பதில் உள்ள சிக்கல்கள், ஈகோப் ப்ரச்னைகளால் வரும் பிரிவுகள், மேட் ஃபார் ஈச் அதர் என்று ஒன்றும் விசேஷமாக இல்லை..அப்படி ஆக்கிக் கொள்வதுதான் விசேஷம் என்ற படிப்பினை..நன்றாக இருக்கிறது.

மூணு 3: ஒய் திஸ் கொலவெறி கொலவெறி?

இளையராஜா, சூர்யா, ரோஜர் ஃபெடரர்

இந்த மூன்று பேருக்கும் பொதுவான ஒரு சிறப்பு இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம். இவர்களால் கவரப்படாதவர்கள் இருக்கலாம். ஆனால், இவர்களைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. என்றும் இளமையான இளையராஜா பாடல்கள், ரோஜர் விளையாடும் தளங்களில் விசிறிகளின் ஆரவாரம், சூர்யாவின் திரைமுகம் மட்டுமல்ல..  'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி...என்னுடைய இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தி நிற்கின்றது. 'அய்யய்யோ...எனக்கு இவரைப் பிடிக்கவே பிடிக்காது' என்று யாருமே சொல்லிவிட மாட்டார்கள் என்றொரு எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதாவும் இந்தப் பட்டியலில் இருந்தார்..ஆனால் அவரைப் பிடிக்காது என்னும் சிலரைச் சந்திக்க நேர்ந்தது..

ஒரு தகப்பனா இப்படி?

சமீபத்திய செய்தி ஒன்று...தேர்வில் மதிப்பெண்கள் எதிர்பார்ப்புக்கும் குறைவாக வாங்கிய தன் மகளை, கோவில் வாசல் ஒன்றில் தட்டேந்திப் பிச்சையெடுக்கவைத்தாராம் ஓர் அப்பா...என்னவென்று சொல்வது?

ஆசிரியைகளின் அட்டூழியம்

கொஞ்ச காலம் முன், எல்.கே.ஜி குழந்தையிடம் பாலியல் தொந்தரவுகள் செய்த இரண்டு ஆசிரியைகளைப் பற்றிய செய்திகள்..

கடந்த 2 வாரங்களுக்கு முன், ப்ளஸ் டூ மாணவனிடம் தகாத உறவுகொண்டு, 21 வயதானபின் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளக் காத்திருக்கும் 37 வய்து ஆசிரியை...ஓடிப் போன இவர்களைத் தேடிப்பிடித்த மாணவன் அப்பா...

வக்கிரங்கள் ஆசிரியைகளிடமா? இவர்களை என்ன செய்தால் தகும்?

10 comments:

அமைதிச்சாரல் said...

அந்தத் தகப்பனைப் பத்தி நானும் வாசிச்சேன். நல்லாப் படிக்கலைன்னா கடைசியில் பிச்சைதான் எடுக்க வேண்டியிருக்கும்ன்னு பொண்ணுக்குப் படிப்பினை ஊட்டறதுக்காக அப்படிச் செஞ்சாராம். பொண்ணை கோயில் வாசல்ல விட்டுட்டு இவர் பக்கத்துலயே கார்ல உக்காந்து இருந்துருக்கார். என்னன்னு சொல்றது?.. :-(

இராஜராஜேஸ்வரி said...

"சில நேரங்களில் சில உணர்வுகள்"

கோவி.கண்ணன் said...

சூர்யாவை நடிகனாகப் பிடிக்கும், ஆனால் சின்னத்திரை விளம்பரங்களில் வந்து போகும் போது விற்பனையாகத சரக்குகளின் விளம்பர போர்டு இவர் என்று நினைக்கும் போது வெறுப்பாகத்தான் இருக்கிறது.

அஜித் நினைத்தால் கோடிக்கணக்கில் விளம்பரப்படங்களில் நடித்து வருவாய் பெறமுடியும் ஆனாலும் "நான் பயன்படுத்தாத ஒன்றை விற்பனை செய்வதாக என்னால் ஒப்புக்கு நடிக்க முடியாது தவிர நான் பயன்படுத்தும் பொருள்களை விளம்பரம் செய்து தலையில் கட்டவும் விரும்பவில்லை" என்றார்

சூர்யா செய்யாட்டிலும் வேற நடிகர் செய்வார்களே ன்னு கேட்கலாம், சூர்யா ஏன் அதையும் செய்யனும் என்பதே கேள்வி. அவரிடம் பணத்துக்கு என்ன கொறைச்சல் ? எதற்கு எம் என் சி நிறுவனங்களின் ஏஜெண்டாக இருக்க வேண்டும்.

பாச மலர் / Paasa Malar said...

சாரல், காரில் வேறு உட்கார்ந்திருந்தாரா? அது சரி...

பாச மலர் / Paasa Malar said...

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கோவி....இது உண்மையிலேயே உறுத்தும் விஷயம்தான்...வேறு நடிகர்கள் செய்வார்களே என்று நான் கேட்க மாட்டேன்...ஏனெனில் அது போன்ற விளம்பரங்களில் வரும்பொருட்களை சமயங்களில் உபயோகபப்ப்டுத்துவதால் எனக்குமே உறுத்தலான விஷயம்தான் இது....

அஜீத் பற்றிய கருத்தை வழிமொழிகிறேன்...

ராமலக்ஷ்மி said...

கடைசி இரண்டு தகவல்களும் அதிர்ச்சி அளிப்பவை. முட்டாள்தனமான தண்டனை கொடுத்த தகப்பன் பற்றி நானும் வாசித்திருந்தேன்.

கோபிநாத் said...

\\மூணு 3: ஒய் திஸ் கொலவெறி கொலவெறி?\\\

ஏன்டா 3ன்னு இருக்கு வேற ஒன்னும் காணோமுன்னு பார்த்தேன்...அப்புறம் தான் பல்பு எரிஞ்சது ஒய் திஸ் கொலை.....தான் விமர்சனமுன்னு...சூப்பரு ;-)))

இளையராஜா - உண்மையோ உண்மை ;-)

பாச மலர் / Paasa Malar said...

அவர் தந்தை இப்படி அவரிடம் நடந்து கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? எப்படியெல்லாம் யோச்னை வருகிறது பாருங்கள் ராமலக்ஷ்மி...

பாச மலர் / Paasa Malar said...

இளையராஜா என்றாலே கோபி என்பது தெரிந்ததுதான்...அய்யோ 3 படம் கொலவெறிதான்...