Wednesday, April 4, 2012

தனித்த ஓர் இதயத்தின் கதவருகே...

1

நான் தனித்திருக்கவில்லை;
தனிமையை
என் நட்பாக்கிக் கொண்டிருக்கிறேன்.

2

அவன்
திருப்தியாகி விட்டிருந்தான்..

அன்றாட உணவிலிட்ட
சிட்டிகை உப்பினில்;

குறுகிய
இரவதனில்;
குறுகிய பொழுதேனும்
நீ உடனிருக்கும் இரவதனில்;

குறுகிய கனவதனில்;
கனவின் தோள்களில்
ஆள்துயில் கொண்ட உன்னில்;

குறுகிய
உறக்கமதனில்;
உறக்கத்தின் கரைதனில்
நடைபயிலும் உன்னில்;

குழலதன்
கூரிய ஓசைக்கும்
ஆடுமாடுகள் கழுத்து மணியின்
கரகரப்பான ஓசைக்கும்
இடையே ஊஞ்சலாடியபடி..

அவன்
திருப்தியாகி விட்டிருந்தான்.

3

நான் மட்டும்
ஒரே ஒருவனாய்
நின் ஒளிர்வைக்
கவனித்து வருகிறேன்.

சூரியனுக்காகவென
வாராந்திர விடுமுறையைக்
கடவுள் மட்டும் கொடுத்திருந்தால்..

அனைவரும்கூட
அறிந்திருப்பார்கள்
நீ எவ்வளவு ஒளிர்கிறாய் என்று.

4

வெற்றுச் சுவர்,
பழைய சுவர்,
வறட்சியாலும் களிமண்ணாலும்
கனமாக்கப்பட்ட இதயச்சுவர்.

இங்கே
உன் பெயரை
நீ எழுதிக் கொள்ளலாம்.

ஆனால்,
நகங்களால் மட்டும்
கீறி விடாதே.

5

அவன் அங்கங்களில்
கவனமாய் இருந்திடு.

உயர்தர நூல்வகையால்
அவனைத் தைத்திடு.

மடித்துத் தைத்திட்ட
விளிம்புப் பகுதிகளைக்
கிழிக்காமல் இருந்திடு.

அலைந்து திரியும்
அவன் நூல் இழைகளைச்
சேகரித்து வைத்திடு.

நீர் அவனைச்
சூழ்ந்திடும் போது
கொஞ்சம் நெருக்கிப் பிழிந்திடு.

வெறுமனே
ஒரு சட்டை
போலத் தோன்றினாலும்,
உண்மையில்
அவன் ஓர் இதயம் தானே.

6

சுதந்திர நாடுகளில்
பறந்திடும் கொடியது போல்
என் மனதுள் நீ
அசைந்தாடுகின்றாய்.

7

யாருடைய நெஞ்சில்
யார் சாய்ந்து அழுதாரோ?
நனைந்திட்ட சட்டை மட்டுமே
அறிந்திடும் விடைதன்னை.

At the Door of a Lonely Heart -  Arabic poem by: Abboud al Jabiri 
                                                       Translated by: Worod Musawi
1
I am not alone -
the truth is
I befriended my loneliness

2
He's satisfied with a pinch of salt on his daily bread
with a little of you at night
with a short night
with you asleep on dream's shoulder
with a brief dream
with you walking on sleep's shore
with a light sleep
that sways between the keening of the naiand the clanging of goat bells

3
If God gave the sun the weekend off
people would know how you shine all the time
even though I am the only one who notices

4
It is a blank wall,
an old wall -
a heart burdened by drought and clay:
write your name here,
but don't pierce it with nails

5
Be careful with his limbs:
mend him with fine yarn
and don't rip his hem,
gather up his stray threads,
and squeeze him gently
when he is wet -
even if he seems like just an old shirt,
really, he is a heart

6
Like a flag
flying in a free country
you are waving in my heart

7
Who wept on the breast of the other?
Only the wet shirt
knows the answer

ஓர் அரபுக்கவிதையின் மொழிபெயர்ப்பு தமிழின் தன்மைக்கேற்ப சிறு மாற்றங்களுடன்..-அதீதம் இதழில் 13.03.12 அன்று வெளியானது..

8 comments:

ராமலக்ஷ்மி said...

கவிதைத் தேர்வும் மொழியாக்கமும் மிக அருமை மலர்.

இராஜராஜேஸ்வரி said...

சுதந்திர நாடுகளில்
பறந்திடும் கொடியது போல்
என் மனதுள் நீ
அசைந்தாடுகின்றாய்.

நேர்த்தியான ப்டைப்பு..

தேவன் மாயம் said...

மிக அருமை!

கோபிநாத் said...

அருமை... கடைசி சட்டை கவிதை மிக அருமை ;-)

ஜீவி said...

வெற்றுச் சுவர்,
//பழைய சுவர்,
வறட்சியாலும் களிமண்ணாலும்
கனமாக்கப்பட்ட இதயச்சுவர்.//

எவ்வளவு கைப்பு!..

//ஆனால்,
நகங்களால் மட்டும்
கீறி விடாதே.//

எவ்வளவு பரிதாபம்!..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி, ராஜராஜேஸ்வரி மேடம், தேவன்மாயம், கோபி, ஜீவி..

கோமதி அரசு said...

சுதந்திர நாடுகளில்
பறந்திடும் கொடியது போல்
என் மனதுள் நீ
அசைந்தாடுகின்றாய்.//

இதயத்தில் பட்டொளி விட்டு பறப்பது போல், அசைந்தாடும் தென்றல் போல்
அருமையாக இருக்கிறது மலர்.

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி கோமதி மேடம்