Sunday, February 19, 2012

விளைகள நீரும் விண்புல நீரும்






நிறமிகள் குறுகி
இதழ் வறண்ட
வெளிர் ரோஜாவொன்று
பச்சையம் வேண்டி
இலையிடம் முறையிட

அடுப்பிலுறங்கும் பூனையை
விரட்டியடிக்கும் முகமாய்
ஒளிச்சேர்க்கை வேண்டி,
சூரியக் கோட்டினைப்
பற்றிக் கொண்டு
சர சரவென்று கீழிறங்கிய
இலையின் நரம்புகளுக்குச்
செவிமடுத்து

விளைகள வெளியில்
நீர் தேடித்
திசையெங்கும்
அஞ்ஞான வேர்கள்
படர்ந்து பரவிய
அதே வேளை..

விண்புல நிலவில்
நீர் தேடிச்
சீறிப் பாய்கின்றதொரு
விஞ்ஞான எறிகணை.

நிறமிகள் - pigments
பச்சையம் - chlorophyll
ஒளிச்சேர்க்கை - photosynthesis
எறிகணை - rocket

7 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை மலர்.

ஜீவி said...

'இதழ் வறண்ட வெளிர் ரோஜா' -- படப்பிடிப்பாய் என்னமாய் ஒரு வரி!

சீறிப்பாயும் எரிகணைப் பின்னணியில்
சொன்னது தான் சொன்னவற்றிற்கு சிறப்புச் சேர்த்திருப்பதாகத் தோணிற்று எனக்கு.

கோபிநாத் said...

சூப்பரு அக்கா ;-))

karthik said...
This comment has been removed by the author.
பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி, கோபி..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி..

//சீறிப்பாயும் எரிகணைப் பின்னணியில்
சொன்னது தான் சொன்னவற்றிற்கு சிறப்புச் சேர்த்திருப்பதாகத் தோணிற்று எனக்கு//

கருவே அங்கேயிருந்துதான் ஆரம்பமாயிற்று..

பாச மலர் / Paasa Malar said...

வருகைக்கு நன்றி கார்த்திக்...

ஆனால் இந்த டெக்னிகல் சமாச்சாரம் எல்லாம் நமக்கு ரொம்ப தூரம்....விபரம் தெரிந்தவர்கள் யாராவது உதவுவார்கள்...