Midas /மிடாஸ் : The most famous King Midas is popularly remembered in Greek mythology for his ability to turn everything he touched into gold. This came to be called the Golden touch, or the Midas touch.
கற்களை எடுத்து வீசுவாயோ
அமிலத்தை அள்ளித் தெளிப்பாயோ
என்னை உரசிச் செல்லும் அவ்வலித்துளிகள்
சட்டென்று மொட்டவிழ்ந்து மலர்கின்றன
வாசம் வழியும் மலர்களாய்...
பதப்பட்ட கோபத்தை வெளிப்படுத்துவாயோ
நெஞ்சில் நிராகரிப்பை நிறைத்திருப்பாயோ
என்னைக் கடந்து செல்லும் அவ்வுணர்வுகள்
கவரி வீசிச் செல்லும் இதமான தென்றலாய்...
உன் எதிர் நடவடிக்கைகள் கடினமாய் இருக்குமோ
உன் இயல் நடவடிக்கைகள் கொடூரமாய் இருக்குமோ
என்னை வருடிச் செல்லும் அத்தாக்குதல்கள்
உரு மாறுகின்றன இனிமையான முத்தங்களாய்...
நியாயமற்ற தண்டனைகள் உன்னிடமிருந்து கிடைக்குமோ
வார்த்தைகளற்ற உணர்வுகள் என் மனதில் தேங்குமோ
ஒன்றின் மேல் ஒன்றாய் அவை குவிந்து குவிந்து
பொதிந்து வைக்கப்படுகின்றன மதிப்பற்ற பொக்கிஷமாய்...
இதயம் நிறைந்த வெறுப்புதனை வெளிப்படுத்துவாயோ
பழ்வாங்கும் படலமாய் மௌனத்தை அனுசரிப்பாயோ
என்னைக் குத்திச் செல்லும் அவ்வலிகள்
மீண்டும் மீண்டும் மலர்ந்தெழுகின்றன
என்றென்றும் வாழ்ந்திருக்கும்
பசுமையான காதலாய்..
இந்த மாயப் பின்னல்
எங்ஙனம் மீட்டெடுக்கிறது
என் மனதின் தேக்கத்தை?!
மனம் சொருகி லயிக்கவைக்கும்
இந்தக் காதல் தாலாட்டுக்கு
என்னதான் ராகம்?!
உனக்குப் புரியவில்லையா
என் மிடாஸ்!
என்னை இயக்கிச் செல்லும்
என்றும் இயக்கிச் செல்லவிருக்கும்
என் மிடாஸ்!
உன் காதல் தொடுகை என்ற
வரம் வாய்க்கப்பெற்றிருக்கிறேன்!
என்னுடைய Rainbow Wings என்கிற வலைப்பூவில் உள்ள Love Touch of my Midas என்ற கவிதையின் தமிழாக்க முயற்சி
Throw pieces of stone
Pour jars of acid
When they brush me
They bloom as fragrant flowers.
Brew anger
Rear rejection
When they fan me
They blow as gentle breeze..
React hard
Act violent
When they hit me
They turn to sweet kisses..
Unjust punishment I may get
Unspoken feelings I may store
When they pile up and up
They shape themselves as treasurable rewards..
Display heartful hatred
Vengeful silence
When they prick me
They flourish as everfresh eternal love...
What is this magical spell
That lures me out of depression
What is this magical tune
What is this magical tune
That lulls me with a love lullaby?
Don't you know my Midas?
I am blessed with
Love touch of my Midas..
Which keeps me going
Will keep me going..
9 comments:
மூலக் கவிதை, தமிழாக்கம் இரண்டையும் ரசித்தேன் மலர். மிக அருமை.
சூப்பரு...சூப்பரு ;-))
பீட்டரிலும் கவிதையா கலக்குறிங்க அக்கா ;-))
நல்ல கற்பனை. இரண்டு மொழிகளிலும் அழகாக வந்திருக்கிறது என்றாலும், தமிழில் அந்த அழகு நிறைய கூட என்று தான் சொல்ல வேண்டும். திரு.ரஹ்மான் இதற்கு இசை அமைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அந்த நினைப்பே அழகான இசையுடன் மனத்தில் கற்பனையைக் கூட்டியது.
தலைப்பு?.. அது மட்டும் என்னவாம்? அதுவும் இந்தக் கவிதைக்கு மகுடம் சூட்டி தனி அழகு கூட்டுகிறது, பாருங்கள்!
நல்ல முயற்சி. அருமை.
நன்றி ராமலக்ஷ்மி....
நன்றி கோபி....இருந்தாலும் பீட்டரில் இன்னும் கொஞ்சம் நன்றாக வர வேண்டும்...
ஜீவி,
உங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கற்பனை எனக்கும் வர....அவர் குரலிலேயே பாடுவதாக நினைத்துப்பார்த்தேன்...
ஆங்கிலத்தில் இன்னும் கொஞ்சம் நன்றாக வர வேண்டும் என்று எனக்கும் தோன்றுகிறது..
உங்கள் பாராட்டுக்கு நன்றி...
வருகைக்கு நன்றி விச்சு
Post a Comment