Wednesday, February 8, 2012

பின்னோக்கி நகரும் நாட்கள்






சிம்னி விளக்கொளியில்
சிறுவரின் தேர்வுக்கான கல்வி
ஓயாமல் உழைத்த களைப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன
கணினி ஐபேட் இத்யாதிகள்


அம்மிக்கல் ஆட்டுரலில்
சிறப்புச் சமையல்
விசேடச் சலுகையில்
சிலாகிக்கின்றன
நாவின் சுவைமொட்டுகள்

பேட்டரி வானொலியில்
ஐயாக்கள் செய்திச்செவிமடுப்பு
தொடரின் ஓட்டத்துடன்
தொடர்ந்து ஓடிய
அம்மணிகள் பரிதவிப்பு

வறுமையின் வாசங்கள்
பழகிக் கொண்டு
மெல்லப் பின்னோக்கி 
நகர்ந்து செல்கின்றன
நம் நாட்கள்!

14 comments:

ராமலக்ஷ்மி said...

எதார்த்தத்தை எள்ளலுடன் சொல்லுகிற நல்ல கவிதை. வருத்தம் தரும் உண்மை. நன்று மலர்.

rajamelaiyur said...

அழகிய கவிதை
இன்று

யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா ?

MoonramKonam Magazine Group said...

பதிவுக்கு நன்றி!
நட்புடன்
மூன்றாம் கோணம்

கோபிநாத் said...

100% வழிமொழிகிறேன் அக்கா கவிதையை ;-))

Geetha Sambasivam said...

ammi ippovum payanpadutharen. atukallum irukku. thirikkum yanthiram than koduthacchu!

Geetha Sambasivam said...

Naruk Kavithai. :)))

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்குங்க..

பாச மலர் / Paasa Malar said...

என்ன செய்வது ராமலக்ஷ்மி....வருத்தம் தரும் உண்மைகள்....வருங்கால சந்ததியினர்தான் எவ்வளவு பாவம்!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராஜபாட்டை ராஜா

பாச மலர் / Paasa Malar said...

மூன்றாம் கோணம்...வித்தியாசமான பெயர் தேர்வு..வரவுக்கு நன்றி...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி....நம் அனைவரின் அனுபவமும் ஒன்றுதானே...

பாச மலர் / Paasa Malar said...

கீதா..அம்மி சமையல்..குறிப்பாக எந்தச் சட்னியும் அம்மியின் சுவை தனிதான்...அச்சுவை அனுபவிக்கும் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்...

இங்கே ரியாத்தில் அம்மியாவது உரலாவது...இங்கேதான் இப்படி என்று பார்த்தால் அங்கேயும் அனைத்தையும் தூரப்போட்டு விட்டார்கள்..அல்லது ஏறக்கட்டிவிட்டார்கள்...

வருகைக்கு நன்றி கீதா...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சாரல்...

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு