Sunday, January 6, 2008

மொக்கை tag - முடிவுகள் பலவிதம்

சீனா சார் ரசிகனின் மொக்கை tag ல் என்னை இணைத்திருக்கிறார். நன்றி அவருக்கு.

இது திரைப்பட மொக்கை..ரொம்ப நாளாவே சில தமிழ்த் திரைப்படங்களோட முடிவுகள் பத்தி எழுத நினைப்பு..இப்போ எழுதலாம்..

மூன்றாம் பிறை: இன்றும் கூடப் பாதிக்கும் முடிவு..அந்தப் பாடல்களைப் பார்க்கும்போதே இன்னும் கூட முடிவுதான் நினைவுக்கு வரும்.

சிந்து பைரவி: அபத்தமான முடிவு...சிந்து சொல்வார்...இரண்டு கல்யாணம் செய்து கொண்டால் கே.பி. செஞ்சுக்கிட்டார்..நாங்களும் செஞ்சுக்குவோம் 2 கல்யாணம்னு ரசிகர்கள்
சொல்வார்கள்...ஏன்...கல்யாணம் செய்யாமல் குழந்தை பெத்துக்கிட்டதை ரசிகர்கள் பின்பற்ற மாட்டார்களா என்று தோன்றியது இந்த அபத்த முடிவைப் பார்க்கும்போது...இதே முடிவுக்கு வேறு காரணம் சொல்லியிருக்கலாம்.

சம்சாரம் அது மின்சாரம்: நச் முடிவு.

வசந்த மாளிகை, கிரீடம், முகவரி: சோகமயமான முடிவை என் போல் சந்தோஷ முடிவை விரும்பும் ரசிகர்களுக்காக மாற்றியமைத்தார்கள்.

விதி: இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றவைத்த முடிவு.

காதல்: இப்படியும் நடக்குமா என்று நெகிழ வைத்த முடிவு..

கல்லூரி: இது தேவையா என்று சலிக்க வைத்த முடிவு.

நூறாவது நாள்: எதிர்பார்க்காத முடிவு.

தாமரை நெஞ்சம்: கதாசிரியாரான நாயகி தன் முடிவையும், தன் கதை நாயகியின் முடிவையும் ஒருசேரத் தேடும்..மனம் கனக்க வைக்கும் முடிவு.

வெயில்: தம்பி உயிரோடு இருப்பதையாவது தெரிந்து கொண்டு நாயகன் இறந்திருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுத்திய முடிவு.(இதே போல்தான் கஜினி: அசின் சஞ்சய் ராமசாமி
யாரென்று அறிந்தபின் இறந்திருக்கலாம் என்று தோன்றியது.)

அவள் ஒரு தொடர்கதை, அவர்கள்: சோக முடிவுதான் என்றாலும், எதார்த்தம் என்பதால் படத்துக்கே வெற்றி தந்தது இந்த முடிவு.

சிறை: சமூகத்தையே அந்த காலத்தில் ஒரு கலக்கு கலக்கிய புரட்சிகரமான முடிவு.

புதுமைப்பெண்: வீட்டை விட்டு வெளியேறுவது புதுமை என்று காட்டிய அபத்த முடிவு.

பருத்திவீரன்: என்னவென்று விவரிக்க இயலாத உணர்வை ஏற்படுத்திய முடிவு.

சேது: வாய்க்குள் கையைவிட்டு இதயத்தைத் தொட்ட முடிவு.

யப்பாடி..இன்னும் நிறைய இருந்தாலும் இப்போதைக்குப் போதும்னு நினைக்கிறேன். அடுத்து நான் இணைப்பவர்கள்:

1. கோவி.கண்ணன்
2. வவ்வால்
3. கண்மணி (மதுரைக்காரவங்களுக்கு யாருமே எதிர்க்கட்சி கிடையாது.)
4. காட்டாறு

20 comments:

கண்மணி said...

ஆத்தா உன் பாசத்தை இப்படி காட்டிட்டியே மலர்!
மதுரைக்கு எதிர் கட்சி உண்டு அம்மணி .நடனக்காரரைக் கேட்டுப் பாருங்க தெரியும்.

பாச மலர் said...

ஓ..நீங்க அங்கன வாரீகளா? அப்ப நானும் உங்க கட்சிதானே...

cheena (சீனா) said...

பாசமலர் - என்ன கண்மணியோடு சேந்து கச்சிக்கு ஆள் சேக்குறீங்களா - ஆட்டொ வரும் சாக்கிரதை

பாச மலர் said...

சீனா சார்,

சில நேரங்களில் கூட்டணி மாறிரணும்..இதுக்கெலாம் ஆட்டோ அனுப்புனா எப்படி?

SanJai said...

ஆஹா.. பாசமலர் அக்கா.. நல்லா மொக்கை போட்டிருக்கிங்க..

....உங்கள் பாஷையில் கமெண்ட்....
வருடத்தின் ஆரம்பத்தில் முடிவை பற்றி சொல்லாமல் ஆரம்பத்தை பற்றி சொல்லி இருக்கலாம். :)
...ச்சும்மா டமாசுக்கு.. :P

ஜெஸிலா said...

மற்றுமொரு பெண் பதிவர் கண்ட உற்சாகம் எனக்கு. மொக்கைன்னு ஆரம்பிச்சு பட முடிவுகளை தந்து இருக்கீங்க. நிறைய எழுதுங்க.

ரசிகன் said...

ஆஹா... ரெண்டே வரில திருக்குறள் மாதிரி நச்சுன்னு திரைப்பட விமர்சனம்.. கலக்கிட்டிங்க...
சூப்பரேய்ய்ய். :)

ரசிகன் said...

பதிவு சங்கிலியை உடைக்காமல் மேலதிக டேக் குடுத்ததற்க்கு நன்றிகள்.

ரசிகன் said...

ஆமாம்.. அதுல டேக்கோட லிங்க் அட்டாச் செய்யவே இல்லையே?.. செய்துடுங்களேன்..

ரசிகன் said...

உங்க மூலமா உங்க நண்பர்கள் நாலைஞ்சு பேரை தெரிஞ்சுக்குவோம்ல்ல... :)

பாச மலர் said...

sanjai,ஜெஸிலா, ரசிகன்,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

பாச மலர் said...

//ஆமாம்.. அதுல டேக்கோட லிங்க் அட்டாச் செய்யவே இல்லையே?.. செய்துடுங்களேன்.//

அது எப்படி செய்யுறது ரசிகன்...கொஞ்சம் உதவுங்களேன்...technical சமாச்சாரத்தில் நான் கொஞ்சம் வீக்...

கோவி.கண்ணன் said...

//யப்பாடி..இன்னும் நிறைய இருந்தாலும் இப்போதைக்குப் போதும்னு நினைக்கிறேன். அடுத்து நான் இணைப்பவர்கள்:

1. கோவி.கண்ணன்
2. வவ்வால்
3. கண்மணி (மதுரைக்காரவங்களுக்கு யாருமே எதிர்க்கட்சி கிடையாது.)
4. காட்டாறு//

பாச மலர்,

அழைப்புக்கு நன்றி ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனை மேய்ந்துவிட்டு எழுத முயற்சிப்பண்ணுறேன்

பாச மலர் said...

நன்றி கோவி.கண்ணன்..

வவ்வால் said...

பாசமலர்,

இப்படி மோச மலராக இருப்பிங்கனு நினைத்து கூட பார்க்கவில்லை, என்னைப்போல ஒரு அப்பிராணியைப்பிடித்து வந்து மொக்கை டாக்(tag) போட வேண்டும் என்றால் என்ன செய்வேன், எங்கே போவேன்? அதான் மொக்கை மகா ராசக்கள், ராணிகள் எல்லாம் கீறாங்களே அவங்களை பிடிக்காம என்னைப்பிடித்தா என்ன செய்வேன் சொக்கா... சொக்கானு மண்டபத்துக்கு தான் போகனும்!

இது என்ன வகையான சூதாட்டம்னு ஒருக்கா சொல்லிட்டா நானும் சூதனமா இருந்துப்பேனே? எங்கே போய் இதன் ஆட்ட விதிகளைப்படிப்பது? எச்சூஸ்மீ ...கொஞ்சம் வழி காட்டுங்களேன்!

காட்டாறு said...

யக்கோவ்.. என்ன இப்படி சொல்லிட்டீங்க... நான் எழுதுறதே மொக்கை தானே... இதுல உங்களுக்குன்னு தனியா ஒன்னு எழுதிட்டா போச்சி. :-)

மங்களூர் சிவா said...

ஓ. உங்களை சீனா சார் TAG பண்ணியிருந்தாரா???

என்னது பதிவை பத்தியா??

அப்பாலிக்கா படிச்சிட்டு வரேன்!! வர்ட்டா

கிருத்திகா said...

மொக்கைதான்னாலும் நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்

பாச மலர் said...

சிவா,

படிக்கவில்லையா?

கிருத்திகா,

நன்றி..

மங்களூர் சிவா said...

//
பாச மலர் said...
சிவா,

படிக்கவில்லையா?
//
என்னாது படிக்கனுமா???
அவ்வ்வ்வ்வ்

இப்பிடிதான் ச்சும்மா கலாய்ப்போம் கண்டுகிடாதீங்க!!