விரக்தியின் விளிம்பில்
விழிகள் நிறைந்து
விழத்துடிக்கும் கண்ணீர்.
கண்ணீரின் விளிம்பில்
கரையத் துடிக்கும்
கல்லாய்ப் போன மனம்.
மனதின் விளிம்பில்
மயங்கி மீண்டும்
மலர்ந்து நிற்கும் நினைவு.
நினைவின் விளிம்பில்
நீந்திச்சென்று மீட்டெடுத்த
நிச்சய நிச்சலன அன்பு.
அன்பின் விளிம்பில்
அகன்ற துயரம்
அலையின் தொடராய் நம்பிக்கை.
நம்பிக்கையின் விளிம்பில்
நலிந்து போய்
நாடி தளர்ந்தது விரக்தி.
Tuesday, January 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ஆஹா, அருமை
பாசமலர்.
கலக்கறீங்க.
"அன்பின் விளிம்பில்
அகன்ற துயரம்
அலையின் தொடராய் நம்பிக்கை"
இதான் இதான் வாழ்க்கை... நல்லா இருக்கு.. அந்த கடைசி வாக்கியங்கள் மீண்டும் தொடங்கும் அந்தாதிக்கு உதவினாலும், வாழ்க்கைக்கு சற்று தள்ளியே வைப்போம்....
விரக்தியில் ஆரம்பித்து விரக்தியில் முடிவதுதான் வாழ்க்கையா?
கஷ்டமாக இருக்குங்க பாசமலர்
அன்புடன் அருணா
நல்லாயிருக்கு..;)
அருணா,
விரக்தியில் ஆரம்பம்..நம்பிக்கையில் முடிவு..அந்ததிக்காக கடைசி வரிகள்.
நல்லாயிருக்கு பாசமலர். ஆனா கவிதையில் கொஞ்சம் விரக்தி தட்டுதே. பாஸிட்டிவ்வா தொடர்ந்திருக்கலாமோன்னு மனசுக்கு தோணுது. சொல்லிட்டேம்பா.. தவறாக எண்ணவேண்டாம்.
சூப்பரான வரிகள்:
//மனதின் விளிம்பில்
மயங்கி மீண்டும்
மலர்ந்து நிற்கும் நினைவு.
நினைவின் விளிம்பில்
நீந்திச்சென்று மீட்டெடுத்த
நிச்சய நிச்சலன அன்பு.
அன்பின் விளிம்பில்
அகன்ற துயரம்
அலையின் தொடராய் நம்பிக்கை.
//
//நல்லாயிருக்கு பாசமலர். ஆனா கவிதையில் கொஞ்சம் விரக்தி தட்டுதே. பாஸிட்டிவ்வா தொடர்ந்திருக்கலாமோன்னு மனசுக்கு தோணுது. சொல்லிட்டேம்பா.. தவறாக எண்ணவேண்டாம்.//
காட்டாறு, இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமே இல்லை..உங்களுக்குத் தோன்றுவதை எழுதுவதுதான் என்னை, என் எழுத்தை வளர்த்துக் கொள்ள உதவும்..
விரக்தி...மீண்டும் நம்பிக்கை..மீண்டும் கவலை..மீண்டும் நம்பிக்கை..இந்த வாழ்க்கைச் சங்கிலித் தொடர் என்பதைக் குறிப்பதாக என் எண்ணம்..
பாசமலர்,
உங்களின் அந்தாதி கவிதை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.
முடித்த சொல்லில் தவறாமல் தொடங்கியதோடு தொடங்கிய சொல்லில் மிகச் சரியாக முடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்
நன்றி..புகாரி
எளிமை இனிமை அருமை
(ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமே. நிச்சயம் பிரசுரமாகும். - குறிப்பாய் தினமலர்-வாரமலர் அல்லது தினத்தந்தி-குடும்பமலர். அதிக ரீடர்ஷிப் கிடைக்குமே)
அருமை மலர்
அந்தாதியாக முயற்சித்து விரக்தியை துரத்தியடிக்கும் நம்பிக்கையை ஆயுதமாக்கிய யுக்தி..கவிதையாக.....
நன்றி ரத்னேஷ் சார், கண்மணி
//
நம்பிக்கையின் விளிம்பில்
நலிந்து போய்
நாடி தளர்ந்தது விரக்தி.
//
இது
மேட்டர்.
பயத்துக்கே பயம் காட்டற மாதிரி விரக்திக்கே விரக்தியடைஞ்சு ஓட வைப்பது நம்பிக்கை.
கருத்துக்கு நன்றி சிவா..
நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.
Post a Comment