Friday, January 4, 2008

தகப்பன் சாமிகள்

உறங்கும் மனங்களைத்
தட்டியெழுப்பும் பிஞ்சுக்கரங்கள்..

பிள்ளையார் சுழிகள்
பிள்ளைகள் இட்டு நிற்க
அடியொற்றும் பெரியவர்கள்...

காரியத்தின் வீரியத்தில்
காரிருள் களைந்து
கார்த்திகை தீபம்
ஏற்றி நிற்கும்
சாதனைச் சிறார்கள்.

பள்ளிப் பாடத்தில்
பரீட்சைகள் பாக்கி
என்றாலும்
வாழ்க்கைப் பாடத்தில்
பட்டங்கள் வென்றவர்கள்.

பூக்களின் சுவடுகளைப்
பின்பற்றும் புயல்கள்
இது
சத்தமின்றிப்
பூக்கள் செய்த புரட்சி!

Child is the Father of Man
Wordsworth இன் மொழியை
மெய்ப்பித்த‌
தகப்பன் சாமிகள்!

வருங்காலத் தூண்களின்
அஸ்திவாரம் ஆழத்தில்..
எதிர்கால இந்தியாவுக்கான‌
நமது நம்பிக்கைகள்
இமயத்தின் சிகரத்தில்.

(கோபிநாத்தின் வலையில் தரப்பட்ட காட்சிப்பதிவுக்கான கவிதை இது..
http://gopinath-walker.blogspot.com/2007/12/blog-post_19.html
சாலையின் குறுக்கே விழுந்து கிட‌க்கும் ம‌ர‌த்தை அல‌ட்சிய‌ம் செய்து போக்குவ‌ர‌த்து நெரிச‌லிலும் பெரிய‌வ‌ர்க‌ள் காத்திருக்க, சில‌ சிறுவ‌ர்க‌ள் அம்ம‌ர‌த்தைப் பிஞ்சுக்க‌ர‌ங்க‌ளால்
அப்புற‌ப‌டுத்துவ‌து க‌ண்டு பெரிய‌வ‌ர்க‌ளும் தொட‌ரும் காட்சி.)

14 comments:

சென்ஷி said...

//பிள்ளையார் சுழிகள்
பிள்ளைகள் இட்டு நிற்க
அடியொற்றும் பெரியவர்கள்...//

நச் கவித... கலக்கீட்டிங்க‌ பாசமலர் :))

சென்ஷி

கோபிநாத் said...

கவிதையின் வரிகளில் அட்டாகாசம் செய்திருக்கிங்க பாசமலர்;))

\\பள்ளிப் பாடத்தில்
பரீட்சைகள் பாக்கி
என்றாலும்
வாழ்க்கைப் பாடத்தில்
பட்டங்கள் வென்றவர்கள்.\\

கலக்கல் வரிகள் :))

பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள் ;))

CVR said...

Nice one! :-)

காட்டாறு said...

பாசமலர்ன்னு பேருக்கு ஏத்தார்போல்...ம்ம்ம்.. நல்லாயிருக்குது

ராம்குமார் - அமுதன் said...

நானும் அதே வீடியோவ பாத்து அச்ந்துட்டேன்...

அருமையான கவிதைப்பதிவு.....

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

cheena (சீனா) said...

அருமையான எளிமையான சொற்களால் புனையப்பட்ட கவிதை. கருத்தாழமிக்க ஒன்று. பாராட்டுகள்.

உங்களே மாட்டி விட்டுட்டேன் - பாருங்க

http://pathivu.madurainagar.com

Mangai said...

Good poem.
I first could not understand the line,
//
பூக்களின் சுவடுகளைப்
பின்பற்றும் புயல்கள்
இது
சத்தமின்றிப்
பூக்கள் செய்த புரட்சி!//

After seeing the video I could understand.

BTW, was it a short film or ???

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ம்ம்ம்ம்ம்ம்ம்,
நல்லா எழுதியிருக்கீங்க..
அந்த ஒளிப்படக்காட்சி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் தலைமைத்துவத்தை-Leadership- விளக்க வெளியிட்ட ஒரு பதிவு...

பாச மலர் / Paasa Malar said...

சீனா சார்,

மாட்டி விட்டுட்டீங்களே..நன்றி.

மங்கை,

உங்கள் கேள்விக்கு அறிவன் பதில் சொல்லியிருக்கிறார்.

மங்கை, அறிவன்,
நன்றி.

இப்னு ஹம்துன் said...

...ம்.

வயதால் பெரியவர்கள்
வாழ்க்கையை கடக்கிறார்கள்
இடையூறு அகற்ற
எவரையேனும்
எதிர்பார்த்தபடி!

மனதால் பெரியவர்கள்
குழந்தைகளாக இருக்கிறார்கள்
உலகை இயக்கிட
உவந்தொருகை
உண்மையாய் கொடுத்தபடி!

(கோபிநாத் அவர்களின் பதிவுக்கும் இப் பின்னூட்டமிட்டுள்ளேன்)

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கவிதை இப்னு ஹம்துன்..வாழ்த்துகள்

ஜீவி said...

//வருங்காலத் தூண்களின்
அஸ்திவாரம் ஆழத்தில்..
எதிர்கால இந்தியாவுக்கான‌
நமது நம்பிக்கைகள்
இமயத்தின் சிகரத்தில்.//

அருமையான வரிகள்.
கவிதை பொருள்செறிந்து தனக்கான ஒரு உருவம் கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி சார்.