தனிக்குடித்தனத்தில் வளரும் ஒரே குழந்தையின் ஆதங்கம் எப்படியிருக்கும்?
மரணத்தனிமை மன நோயில் கொண்டு விட்டுவிடும்.
பாதிக்கப்பட்டவர்களின் நடத்தை எப்படியிருக்கும்?
அதற்காகச் செய்ய வேண்டியது என்ன?
மனனவியின் எதிர்பார்ப்பு என்ன?
கணவன் செய்ய வேண்டியது என்ன?
இத்தனையும் ஒன்றின் மேல் ஒன்றான சம்பவங்களாய் அடுக்கிக்கொண்டு போகிறார் இயக்குநர். ஆழமான கருத்து என்றாலும் சொல்லிய முறையில் செயற்கைப்பூசல்கள் அதிகம் என்பதால் ஏதோ மனோதத்துவ வகுப்பில் உட்கார்ந்து வந்தது போல் ஓர் அனுபவம்.
சம்பவங்களை அதன் போக்கிலேயே விட்டுவிட்டுப் புரிய வைப்பதுதான் இயக்குநருக்கு அழகு. இப்படி ஒவ்வொரு சம்பவத்தின் முடிவிலும் ஓர் ஆசிரியர் போல் புத்திமதிகள் சில நேரம் சினேகா சொல்கிறார், சில நேரம் ஜெயராம் சொல்கிறார். போதுமடா சாமி என்று ஆகிவிடுகிறது.
பார்த்திபன் கனவு இயக்குநரா இப்படி?
உறவுகளின் ஆழம், கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு, கூட்டுக் குடும்ப சந்தோஷம், இப்படி அழகிய இழைகள் உள்ள கதையைத் தன் போக்கில் போக விடாமல் மனோதத்துவ ரீதியாய்க் கொண்டு போனதால், மிதமிஞ்சிய சலிப்புதான் இறுதியில் ஏற்படுகிறது.
"புதிதாய்க் கல்யாணம் செய்து தனிமை சூழ் உலகுக்குப் போகிற பெண்கள் பயப்படப்போகிறார்கள் இந்தப் படம் பார்த்தபின்" என்று என் தோழி சொன்னாள். இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
இப்படி யாராவது இருப்பார்களா இந்தக் காலத்துப் பெண்கள் என்று வியக்கிறது மனம். இந்தப் பாத்திரப் படைப்பு தரும் வியப்பு மட்டுமே இயக்குநர் பெற்ற ஒரே வெற்றி.
இது போன்ற ஒரு மரணத்தனிமையை அனுபவித்தவள் நான் என்றாலும் கூட இது ஏதோ அபத்தத்தின் உச்சகட்டம் என்று தோன்றுகிறது.
பெண்கள் என்றாலே சீரியல் பார்ப்பவர்கள் என்ற வழக்கமான முத்திரை நாயகியின் மீது குத்தப்பட்டுவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு இருக்கிற இயக்குநர், ஏதோ தொலைக்காட்சியில் வேறு நிகழ்ச்சிகளே இல்லாதது போல் காண்பிப்பதை என்னவென்று சொல்வது?
சீரியல் பிடிக்கவில்லை என்பதால் வித்தியாசமான பெண் என்று அனனவரும் நினைக்கவேண்டும் என்பது ஒரு சறுக்கல்.
பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்:
சினேகாவின் நடிப்பு, காரைக்குடி வீடு மற்றும் திருமணம், ஒரு நிமிடம் வந்து போகும் அந்த மதுரை அத்தை, பலருக்குத் தெரியாத அட்டஹட்டி என்ற அழகான ஊரின் அறிமுகம்.
மொத்தத்தில்..
அழகான, ஆழமான கருத்துகளைச் சொல்ல வந்த இயக்குநர், செய்தித்தாள் பாணியில் விறுவிறுப்பாய்ச் சொல்லாமல், அவள் விகடன் பாணியில் மனோதத்துவ ரீதியாகச் சொல்வதுதான் மிகப் பெரிய சறுக்கல்.
(சேரன், ப்ளீஸ் இயக்குநராக மட்டும் இருந்து விடுங்களேன்.)
7 comments:
//சேரன், ப்ளீஸ் இயக்குநராக மட்டும் இருந்து விடுங்களேன்.
நடிக்காமல் இருக்க சொல்ல வர்றீங்கன்னு தெரியுது இருந்தாலும் அவர் படத்தெயெல்லாம் யார் பார்கிறது.
ஹாரி,
//அவர் படத்தெயெல்லாம் யார் பார்கிறது.//
அது என்னவோ உண்மைதான்..மாயக்கண்ணாடி ஒன்று போதாதா?
//சினேகாவின் நடிப்பு, காரைக்குடி வீடு மற்றும் திருமணம், ஒரு நிமிடம் வந்து போகும் அந்த மதுரை அத்தை, பலருக்குத் தெரியாத அட்டஹட்டி என்ற அழகான ஊரின் அறிமுகம்.//
Very Good observation. அதே தான், பாடம் சொல்லாமல் படத்தை நகர்த்தியிருந்தால் இந்தப் படம் பலரைப் பாதிருக்கும். நல்ல கரு, சற்று சறுக்கிவிட்டார் இயக்குநர் கரு.ப.
படத்தை அநியாயத்த்க்கு அனுபவித்து பார்த்திருக்கிறீர்கள்...அதுதான் பிரச்சினை...
ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்
//சேரன், ப்ளீஸ் இயக்குநராக மட்டும் இருந்து விடுங்களேன்.)//
ஹாஹா.. அப்பரம் படத்துல காமெடி யார் செய்வது?
சேரனின் ஆட்டோகிராபிற்கு பிறகு கிராப் சறுக்கல் தான். :-)
//படத்தை அநியாயத்த்க்கு அனுபவித்து பார்த்திருக்கிறீர்கள்...அதுதான் பிரச்சினை...//
அநியாயத்துக்கு எதிர்பார்த்துவிட்டேன்..
//ஹாஹா.. அப்பரம் படத்துல காமெடி யார் செய்வது//
ஹாஹா...
ஆமாம்..காட்டாறு..சறுக்கல்தான்..
Post a Comment