இந்த வருடம்
பொங்கல் புதுமை!
விலைக்குறைப்பு
நகைக்கடைகளில்.
மழை நீரில்
மூழ்கிய பயிர்கள்
சாகுபடிச் சாக்குகள்
சரளமாய்ச் சொல்லி
எசமான் செய்தார்
கூலிக் குறைப்பு!
மூழ்கிப் போயின
மனைவியின் நகைகள்
குட்டி போட்ட
வட்டிகளால்!
தள்ளுபடி விற்பனை
துணிக்கடைகளில்.
கிழிந்த மேல்சட்டையைக்
கிழிந்த கால்சராயுள்
தள்ளியபடி
உழவன் மகன்...
நிவாரணமற்ற
நிலையில்
(அரை)நிர்வாணமே
நிதர்சனம்!
ஜல்லிக்கட்டு
உயிர் வதையாம்
குரல் கொடுக்க
ஆயிரம் பேர்..
உசிதத் தீர்ப்பு
துரிதம் எழுதும்
உச்ச நீதி மன்றம்!
உரத்தெழும்
உழவனின் பசிக்குரல்
காலம் காலமாய்..
செவிடாய்ப் போன
சமுதாயம்.
வழக்கு வாதம்
வழக்கொழிய
தீர்ப்புகள் யார் தருவார்?
இந்த வருடம்
பொங்கல் புதுமை!
உழவனுக்குத் திருநாள்
இல்லையல்லவா?
தமிழ்ப் புத்தாண்டு!
மாற்றுப் பெயர்
பொதுவாய்ச் சொல்லிப்
பொத்தல்கள் மறைப்பது
பொருத்தமல்லவா?
Sunday, January 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
நிதர்சனமான உண்மைகள், கவிதைவரிகளாய். வாழ்த்துக்கள்.
யதார்த்தமான வரிகள்..;)
வாருங்கள் கலை அரசன், கோபி,
எதார்த்த வலிகள்தான்..
பொங்கல் வாழ்த்துக்கள் மலர்
பொங்கல் புத்தாண்டு!
பொங்கட்டும் பொங்கல்!
போகட்டும் குறைகள்!
புதுப் பொலிவு கொண்டு
புத்துணர்வு கண்டு
பழையன் கழித்து
புதிதாகக் கொள்வோம்
ஓர் உறுதிப் பாடு!
ஆம்!புதிதாகச் செய்வோம்
சிறு துளிப் பெருவெள்ளமாம்!
குறைகள் நீக்குவோம்!
நாமே முதலடி எடுப்போம்!
நான் இன்று ஒரு நல்லது செய்வேன்!
ஒருவ்ரின் குறை தீர்ப்பேன்!
ஒரு வரியோர்க்கு உணவளிப்பேன்!
ஒரு சிறு உள்ளத்திற்கு
நம்பிக்கை அளிப்பேன்!
பொங்கட்டும் பொங்கல்
ஒரு திருக்குறள் போட்டி
நடத்திட முடியாதா?
நல்ல தமிழில் நயம்படப்
பேசி நம்மால் செய்திட
எத்துனை முடியும்!
பேச்சே போய் விடு!
செயலில் செய்திட
பொங்கலே பொங்கு!
உள்ளதை உள்ளபடி சொல்லும் கவிதை.
மூழ்கி போயின மனைவியின் நகைகள்.
அபாரமான வரிகள்
பொங்கல் வாழ்த்துக்கள் பாசமலர்! கவிதையின் நிதர்சனம் தினம் தினம் நாம் சந்திக்கும் காட்சிகளே. பொங்கல் நன்னாளும் மற்றுமொரு நாள் ஆகிப் போனது.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
//நான் இன்று ஒரு நல்லது செய்வேன்!
ஒருவ்ரின் குறை தீர்ப்பேன்!//
நல்ல பொங்கல் சங்கல்பம்...செய்யலாம்..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள
கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடன் தான் பொங்கல் கொண்டாட முடியும் என்று நினைக்கிறேன்.....
அருணா
உண்மைதான் அருணா..ஒவ்வொரு பண்டிகையும் இப்படி நினைவுகள் வரும்..
அருணா,திகழ்மிளிர்..வாழ்த்துகள் உங்களுக்கும்தான்
"தமிழ்ப் புத்தாண்டு!
மாற்றுப் பெயர்
பொதுவாய்ச் சொல்லிப்
பொத்தல்கள் மறைப்பது
பொருத்தமல்லவா"
வெகு ஆக்ரோஷமான வரிகள்.. இப்போதெல்லாம் ஒத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வரிகளை காணும் போது உண்டாகும் மகிழ்ச்சி அளவில்லாதது..
வாழ்த்துக்களுடன்..
ஆமாம் கிருத்திகா..வாழ்த்துகள் உங்களுக்கும்.
அருமையான நிதரிசனத்தைச் சொல்லும் வரிகள். உண்மை வலிக்கத் தான் செய்கிறது.
மனதில் வேதனையுடன்,
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் கீதா..
mmmm - கவிதை அருமை. எளிமையான சொற்கள். வலிமையான கருத்துகள். நிதர்சனமான நிகழ்வுகள். பாராட்டுகள். யார் பூனைக்கு மணி கட்டுவது ? ஒரு தனி மனிதனால் ஏதெனும் செய்ய முடியுமா ? அரசு கவனிக்க வேண்டும்.
நன்றி சீனா சார்..அரசாவது...
செய்வதாவது..செய்தாலும் சேர வேண்டியவர்க்குச் சேராது..
Post a Comment