Thursday, January 10, 2008

நந்து f/o நிலாவின் விருப்பத்துக்காக - மாண்டிஸோரி கல்வி முறை

(என் http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_5731.html பதிவில் மாண்டிஸோரி பள்ளி நினைவுகளைத் தொகுத்திருந்தேன். அதைப் படித்து நந்து வைத்த கோரிக்கைக்கான பதிவு இது.)

இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருத்தமானதாக, குழந்தைகளின் ஆரம்ப காலக் கல்வித் தேவைகளுக்கேற்ப இந்தக் கல்வி முறை அமைந்துள்ளது என்பது என் கருத்து. இத்தகைய ஒரு அமைப்பை சுமார் 35 வருடங்களுக்கு முன்பே கொண்ட ஒரு பள்ளியில் நான் படித்தது இன்றைக்கும் நான் நினைத்து மகிழும் ஒரு விஷயம். அப்பள்ளியில் படித்த காலத்தில் அந்த அருமை பெருமையெல்லாம் புரியாத வயது. பின் கல்வித்துறையில் பட்டப்படிப்பில் இம்முறை பற்றி அறிந்த போது, இம்முறையைச் சரியான முறையில் பயன்படுத்தும் பள்ளிகளைக் கண்ட போது இதன் அருமை புரிந்தது.

நான் படித்த பள்ளியில் (அமலா..திருநகர், மதுரை) ஆரம்ப நிலையில் இக்கல்விமுறை இருந்தது. அப்போது LKG, UKG இல்லை. மூன்றரை வயதில் பள்ளியில் சேர்த்தார்கள். I class, II class, III class என்றும், பின் III std - V std வரை என்றும் இரு பிரிவுகளாக இருந்தன. (இரண்டு வருஷம் 3வது வகுப்பில் என்று தப்புக் கணக்குப்போட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிப் பள்ளி மாறியவர்கள் சிலர்.) இப்போதைய LKG, UKG அமைப்பில் இது போன்ற குளறுபடிகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில பள்ளிகளில்(K.G. காலம் 2 வருடமென்றாலும்) K.G.யே நான்கு நிலைகளில் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

மாண்டிஸோரி கல்வி அமைப்பு: முழுக்க முழுக்க ஆரம்ப காலக் கல்விக்குப் பொருத்தமானது. குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுக் கற்றுக் கொடுக்கும் முறை கொண்டது. கற்றல் முக்கியம் எனினும் குழந்தைகளின் சுதந்திரத்துக்கும், உரிமைக்கும் உரிய இடம் வழங்க வேண்டும் என்பதும் இதன் சிறப்பம்சம். தானாகவே இயல்பான சூழலில், தனக்கே உரிய வேகத்தில் கற்றுக் கொள்ளும் திறன், குழந்தையில் பலவகைப்பட்ட முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் பயிற்சி முறைகள் இதன் சிறப்பு. நான் படித்த காலகட்டத்தில், மாண்டிஸோரி முறை முழுமையாக அமைத்துத் தரப்படவில்லை. ஆனால் இன்றைய சூழல் அப்படியல்ல.

வகுப்பறையே வித்தியாசமாக இருக்கும். பலதரப்பட்ட விளக்கப் படங்கள், குட்டி நாற்காலி, மேசைகள்..வித்தியாசமான பயிற்சி முறைகள்..எதையும் வாய்வழியோடு மட்டுமல்லாமல் செயல்முறை விளக்கமாகவும் போதிக்கும் கூடங்கள் இந்த வகுப்பறைகள்.இம்முறைக்கென்றே ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்ட கருவிகள் இதன் பிரதான அம்சம். சதா சத்தம் போடும் ஆசிரியர்களை இங்கே காண முடியாது. ஆசிரியரின் பணி ஒரு மேற்பார்வையாளர் என்ற அளவில் மட்டுமே. மொழிப் பயிற்சியில் எழுத்துக்களை விட ஒலிகளுக்கு முக்கியத்துவம் அதிகம். ஒலிகளைப் புரிந்து கொண்டால் எழுத்துக்களைச் சுலபமாகப் படிக்க முடியும் என்ற அடிப்படைதான் இது. எல்லாவகையான கல்வி முறைகளையும் போலவே..தெரிந்ததை முதலில் விளக்கித் தெரியாததை நோக்கி இட்டுச் செல்லல்(From known to unkown, from near to far) என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.

வழக்கமான தேர்வின் மூலம் மாணவர்களை மதிப்பிடும் முறை இதில் இல்லை. என்றாலும் ஓர் ஆசிரியர் மாணவர்களின் செயல்பாட்டை வைத்து அவர்களை மதிப்பிடுவர்.

குறைபாடுகள்:

1.நம் நாட்டைப் பொறுத்த வரை ஆரம்ப காலக் கல்விக்கு மட்டுமே பொருந்தும் இம்முறை.

2.செயல்பாட்டு முறைக் கல்வி பல நேரங்களில் முழுமை பெறுவது இல்லை.

3.சரிவர இந்தச் சூழல் அமையாத பள்ளியாக இருந்தால் குழந்தைகள் எதையும் கற்றுக் கொல்ளாமல் போகும் அபாயமுண்டு. எனவே பள்ளியை ஆய்வு செய்து சேர்ப்பது முக்கியம்.

4.ஆசிரியர்களுக்கு மதிப்பிடும் முறை சுலபம் என்றாலும் பெற்றோருக்குத் தன் குழந்தை எந்த அளவு கற்றுள்ளது என்பதைப் பல நேரங்களில் சரிவரப் புரிந்து கொள்ள முடியாமல் போவது இயல்பு.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இம்முறை 2ம் வகுப்பு வரை சரிவரும். அதன் பின் மாற்றங்கள் அவசியம் நம் கல்வி அமைப்பைப் பொருத்தவரை.

புதுகைத்தென்றல் இதை விளக்கமான தொடராகப் பதிவிடுகிறார்.

37 comments:

இம்சை said...

அக்கா எங்க பல பேர் வீட்டில அறுந்த வாலுங்க நிறைய பேர் இருக்காங்க (1-3வயது), அவங்கள சமாளிக்க முடியல, கொஞ்சம் எப்படி அவங்கள பாத்துகரதுன்னு ஒரு தொடர் பதிவு போட வேண்டுகிரேன்...முடியல வழிக்குது ஹெல்ப் பிளிஸ்.
If required you could use kutties corner blog for this purpose

இம்சை said...

முடியல வலிக்குது ஹெல்ப் பிளிஸ்.

Baby Pavan said...

ஆமாங்க ஆன்ட்டி இவங்க இம்சை தாங்க முடியல எப்ப பாரு தண்ணில விளையாடாதெ, ஓடாதே, அத எடுக்காதெ, இத பண்ணாதெ, சுவத்தில கிறுக்காதெ, பேப்பர் கிழிக்காதே, சீக்கிரம் தூங்கு, பால் சாப்பிடு, சாப்பாடு நிறைய நிறைய சாப்பிடு, காரம் சாப்பிடாதே, இனிப்பு சாப்பிடாதே, டூத் பேஸ்ட் சாப்பிடாதெ, சாக்லேட் சாப்பிடாதே, ஜ்ச்கிரீம் சாப்பிடாதே ....இன்னும் நிறையா இருக்கு எங்கனாலயும் முடியல... இவங்கள சமாளிக்கரது எப்படின்னு ஒரு பதிவு சீக்கிரம் போடுங்க பிளீஸ்...

Baby Pavan said...

நிலா உங்க வீட்டில எப்படி நந்து இம்சையை எப்படி சமாளிக்கர...

பாச மலர் / Paasa Malar said...

பேபி பவன்,
உன்ன, உன் கூட்டத்தை இம்சை சமாளிப்பார்...

இம்சை,
உங்களை குட்டீஸ் சமாளிக்கும்..

நீங்க என்ன செய்வீங்கன்னா கேட்டீங்க?
அப்பப்ப வந்து உங்க ஆட்டத்த வேடிக்கை பாப்போம்...

மங்களூர் சிவா said...

//
Baby Pavan said...
ஆமாங்க ஆன்ட்டி இவங்க இம்சை தாங்க முடியல எப்ப பாரு தண்ணில விளையாடாதெ, ஓடாதே, அத எடுக்காதெ, இத பண்ணாதெ, சுவத்தில கிறுக்காதெ, பேப்பர் கிழிக்காதே, சீக்கிரம் தூங்கு, பால் சாப்பிடு, சாப்பாடு நிறைய நிறைய சாப்பிடு, காரம் சாப்பிடாதே, இனிப்பு சாப்பிடாதே, டூத் பேஸ்ட் சாப்பிடாதெ, சாக்லேட் சாப்பிடாதே, ஜ்ச்கிரீம் சாப்பிடாதே ....
//

யூ லைக் டூத் பேஸ்ட்
வாவ்!!

மங்களூர் சிவா said...

இம்சை புள்ளைங்கள பாத்துக்கறது வலிக்கிதா!!

வேணாம் நான் எதாவது சொல்லபோய் எதாவது நீங்க எல்லாம் புரிஞ்சிப்பீங்க!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

அப்ப இந்த மாண்டிஸேரில நான் படிக்கிலியே இப்ப வேணா போய் ஒரு ரெண்டு வருசம் படிச்சிட்டு வந்திரட்டா??

மங்களூர் சிவா said...

மாண்டிஸேரில மிஸ்ஸுங்க எல்லாம் அழகா இருப்பாங்களா நல்லா கத்துகுடுப்பாங்களா???
















பாடம்
பாடம்


அவ்வ்வ்வ்

Sanjai Gandhi said...

மாண்டிஸோரி கல்வி மறை பற்றி அழகாக விளக்கி இருக்கிறீர்கள். பரவலாக ப்ளே ஸ்கூல்ஸ் வந்த பிறகு தான் மாண்டிஸோரி கல்வி முறை பயிற்சி பள்ளிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த விளையாட்டு, மற்றும் செய்முறைப் படங்களுடன் கூடிய கல்வி முறை அமல்படுத்தப் பட்டுவிட்டது. அரசு பள்ளிகளுக்குத் தான் மாண்டிஸோரி கல்வி முறை பயிற்சி பெற்றவர்கள் தேவை உள்ளது.

இதை காரணம் காட்டி புற்றீசல் போல் மாண்டிஸோரி பயிற்சி மையங்கள் முளைத்துவிட்டது. எந்த அடிப்படையில் அரசாங்கம் இவ்வளவு பயிற்சி மையங்களுக்கு அனுமதி அளிக்கிறது என்று புரியவில்லை.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், அரசு அனுமதி அளித்துள்ளதால் அரசாங்க பள்ளிகளில் வேலை கிடைக்கும் என்று நம்பி ரூ.50000 க்கு மேல் நன்கொடை அளித்து படிக்கிறார்கள். ஆனாலும் பயிற்சி அளிப்பவர்களுக்கு போதுமான அல்லது முழுமையான பயிற்சி இல்லை. கையேடுகளை வைத்து கற்றுக் கொடுக்கிறார்கள்.

pudugaithendral said...

montiessory system is perfect

It helps the child gain the knowledge in all the aspects and makes him/her the perfect child.

Gives firm foundation.

I have experience this personally while i was working as a montessory teacher.

The apparatus are really amazing.

maria montessory has designed those appratus for mentally challanged people where the normal child can also benifited

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

I have experience this personally while i was working as a montessory teacher.
//
ஓ நீங்க Ex. டீச்சரா நெனச்சேன்

அவ்வ்வ்வ்வ்

நந்து f/o நிலா said...

நன்றி பாசமலர். இவ்வளவு சீக்கிரமா பதிவு போட்டு விளக்கம் சொன்னதுக்கு இன்னொரு நன்றி.

நந்து f/o நிலா said...

அட நீங்க மாண்டிசோரி டீச்சரா? அப்போ இன்னொரு கேள்வி. மாண்டிசோரி டீச்சர்க்கான ட்ரைனிங் ஒன்னு இருக்குன்னு சொன்னாங்க.

எனக்கு என் மனைவியை அதில் சேர்த்துவிடலாம்ன்னு ஒரு யோசனை.

மாண்டிசோரி டீச்சர்க்கான ட்ரைனிங் என்னன்னு கொஞ்ச்சம் சொல்லுங்க.

அப்புறம் அந்த அந்த ட்ரெய்னிங் எடுத்துக்கறதால நம்ம பர்சனாலிட்டி இம்ப்ரூவ் ஆகுமா? அல்லது வீட்டில் குழந்தையை வளர்க்கும் விதத்தில் வித்தியாசம் வருமா?

வேலைக்காக இல்லை. மேலே சொன்னவை கிடைக்கும்மென்ற ஆவலில்தான் அந்த ட்ரெய்னிங் ஆசை.

முடிந்தால் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

Unknown said...

You said it very nicely. Also consider that Montessori is sensorial education - you put two "things" of equal length together to understand 1 + 1 = 2. Similarly feel the letters (possibly sanded) to understand cursorial writing. I put both my kids thru Montessori & I love it! The emotional/social learning ("I learn from older kids", "I teach younger kids") and self-paced learning - just awwwwwwesome!!!

Sorry for English - my fave subject, but no kalappai here & no time for cut/paste;-)

நிலா said...

//Baby Pavan said...
நிலா உங்க வீட்டில எப்படி நந்து இம்சையை எப்படி சமாளிக்கர...//

இதெல்லாம் ஒரு மேட்டரா? எதையாச்சும் ஒடச்சுட்டா நான் முந்திகிட்டு உதட்ட லேசா பிதுக்குவேன். அது போதும் அப்பாவுக்கு.உடைஞ்சத பாக்காம என்ன சமாதானப்படுத்த வந்துடுவாரு.

அது சென்டிமெண்ட் பார்ட்டி ஈசியா சமாளிச்சுடுவேண்டா பவன்.

Geetha Sambasivam said...

அருமையான அலசல், நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க, என்றாலும் நம் கல்வி முறையில் இன்னும் பல மாற்றங்கள் தேவை, எழுத ஆரம்பிச்சால், அப்புறம் பெரிசாப் போயிடும், வரேன்! :)))

cheena (சீனா) said...

மலர், மாண்டிசேரிலே படிச்ச அடித்தளம் தான்,லேடி டோக் கல்லூரியிலே ஆங்கிலத் துறையில் வேலை கிடைக்கவும், இப்ப பதிவுகள்ளே பூந்து வெள்ளாடவும் உதவுகிறது. இல்லையா

நல் வாழ்த்துகள்,

cheena (சீனா) said...

//மாண்டிஸேரில மிஸ்ஸுங்க எல்லாம் அழகா இருப்பாங்களா நல்லா கத்துகுடுப்பாங்களா???//

சிவா - வந்தோமா போனாமான்னு இருக்கணும் - அப்புறம் மிஸ்சூங்க நல்லா கவனிச்சுடுவாங்க.

பாச மலர் / Paasa Malar said...

சிவா எப்பவுமே சிவாதான்...

சஞ்சய், சீனா சார், கீதா, கெக்கேபிக்குணி எல்லாருக்கும் நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

புதுகை,

மாண்டிஸோரி அனுபவங்கள் உங்களுக்கு
அதிகமிருக்கும். கருத்துக்கு நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

புதுகை,

மாண்டிஸோரி அனுபவங்கள் உங்களுக்கு
அதிகமிருக்கும். கருத்துக்கு நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

நந்து,

புதுகைதான் இந்த முறையில் பயிற்றுவித்த டீச்சர். நான் B.Ed., இல் இதை ஒரு பகுதியாகத்தான் படித்தேன்.

என்றாலும் வீட்டில் இருந்து குழந்தை வளர்க்கவும் சரி, கற்பிக்கும் முறைகளை அறிந்து கொள்ளவும் சரி...கல்வி நிலையத்தில் பயிற்சி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து.

சஞ்சய் கூறுவது போல் உயர் வகுப்புகளுக்கு B.Ed., என்பது போல் ஆரம்ப வகுப்புகளுக்கு மாண்டிஸோரி என்றாகிவிட்டது இப்போது..

இணையத்தில் கூகிளைக் க்ளிக் செய்தால், விக்கிபீடியா மற்றும் ஏனைய தளங்களில் உள்ள விளக்கங்கள் போதும். பயிற்சி நிலையத்தில் சேர்ந்துதான் படிக்க வேண்டும் என்பதில்லை சான்றிதழ் பெறும் நோக்கமில்லாவிட்டால்..என்ன ஒன்று முறையான பயிற்சி நிலையமாக இருப்பின் வேறு பள்ளிகளில் சில வாரங்கள் ஆசிரியயையாக இருந்து கற்பிக்கும் அனுபவம் கிடைக்கும்...

மற்றபடி இதைப் பற்றிய தகவல்களே போதுமானது.

பாச மலர் / Paasa Malar said...

நந்து,

ட்ரெய்னிங் பத்திக் கேட்டீங்க..

Mentally challenged குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறையில் சில பயிற்சிகள், அப்புறம் மாண்டிஸோரி சாதனங்கள்..apparatus..பற்றிய பயிற்சிகள், அது சம்பந்தப்பட்ட விளக்கங்கள்..மரியா மாண்டிஸோரி விளக்கிய teaching Methodology..இதெல்லாம் theory...

Practical...teaching practice மற்றும் சில பள்ளிகளில் தற்காலிமாக ஆசிரியர் வேலை பார்க்கும் அனுபவம்...

இது போக சில chart, teaching aids
என்று தயாரிக்கும் வேலை.

seethag said...

malar it is nice you wrote about kontessori. maria montessori was an italian doctor.she was teh first woman to srudy medicine in italy..so had to face few difficulties(!!!)..
she studied children from poorer quarters of italy and formulated montessori education. in my view it is a wonderful system. it is amazing to see how she comes to some of the conclusions..everytime i see a under two doing the same thing over and over agin i am reminded of whaa i read as her observation."the child keeps doing the same thing again and again until its curiosity comes down"so it is basically exploration...
i am not a teacher so i do not exactly know if it is suited to everyone. however education per se has had lots of inputs. for e.g holt, steiner are some interesting people.
there ar esoem nice books on deschooling parents!!!!

நந்து f/o நிலா said...

தகவல்களுக்கு மனமார்ந்த நன்றி பாசமலர். எனக்கு இவை கண்டிப்பாக பயன்படும்

மங்களூர் சிவா said...

//
நந்து f/o நிலா said...

அப்புறம் அந்த அந்த ட்ரெய்னிங் எடுத்துக்கறதால நம்ம பர்சனாலிட்டி இம்ப்ரூவ் ஆகுமா? அல்லது வீட்டில் குழந்தையை வளர்க்கும் விதத்தில் வித்தியாசம் வருமா?
//

அண்ணே ஒரு ரெண்டு வருசம் வெயிட் பண்ணுங்க குழந்தை வளர்க்கிறது எப்படின்னு நான் என் அனுபவங்களை பதிவா போடறேன். 'நிலா தம்பிய' வளர்க்க யூஸ்புல்லா இருக்கும் உங்களுக்கு!!!

மங்களூர் சிவா said...

//
பாச மலர் said...
சிவா எப்பவுமே சிவாதான்...

//
ஆமாங்க டீச்சர்

பாச மலர் / Paasa Malar said...

சீதாவுக்கு நன்றி..

இந்த சிவாவுக்கு தமிழ்மண வஸந்த் என்று புதுப்பெயர் கொடுத்தாலென்ன?

Sanjai Gandhi said...

//பாச மலர் said...

சீதாவுக்கு நன்றி..

இந்த சிவாவுக்கு தமிழ்மண வஸந்த் என்று புதுப்பெயர் கொடுத்தாலென்ன?//

நாங்களும் இது மாதிரி பெயர் வைக்கலாம்னு இருக்கோம். அனானி மற்றும் அதர் ஆப்ஷனை ஒளித்து வைத்துள்ள பாசமலர் அக்காவை வன்மையாக கண்டிக்கிறேன். :((

மங்களூர் சிவா said...

//
பாச மலர் said...
சீதாவுக்கு நன்றி..

இந்த சிவாவுக்கு தமிழ்மண வஸந்த் என்று புதுப்பெயர் கொடுத்தாலென்ன?

//
எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். என்னைய தீத்துகட்டீட்டு பேசலாம்னு முடிவெடுத்துறாதீங்க!!!

நான் சின்ன பையன்!!
அவ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
SanJai said...

நாங்களும் இது மாதிரி பெயர் வைக்கலாம்னு இருக்கோம்.
//

பாசமலர் டீச்சருக்கா!?!?!!?
அவ்வ்வ்வ்

உன் பாசத்த நெனச்சா துக்கம் தொண்டைய அடைக்குதுய்யா

மங்களூர் சிவா said...

//
SanJai said...

அனானி மற்றும் அதர் ஆப்ஷனை ஒளித்து வைத்துள்ள பாசமலர் அக்காவை வன்மையாக கண்டிக்கிறேன். :((
//
இதுக்கு ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்

பாச மலர் / Paasa Malar said...

//அனானி மற்றும் அதர் ஆப்ஷனை ஒளித்து வைத்துள்ள பாசமலர் அக்காவை வன்மையாக கண்டிக்கிறேன்//

ஏம்ப்பா தம்பிங்களா..நான் நல்லாருக்கது புடிக்கலியா?

Sanjai Gandhi said...

//பாச மலர் ..

ஏம்ப்பா தம்பிங்களா..நான் நல்லாருக்கது புடிக்கலியா?//

நீங்க மட்டும் நல்லா இருஅந்தா போதுமா? ப்ளாக் மக்கள் சந்தோஷமா இருக்க வேணாமா? :P

எங்க ரகசிய ஆயுதமே அது தான? எப்டி விட்டு தர முடியும்? :P

பேரன்ட்ஸ் கிளப் said...

மான்டிசோரி முறை கல்வி நல்லது,

ஆனால் நம் நாட்டில் தற்போது இயங்கிவ்ரும "மெக்காலே" கல்வி முறை, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. (எல்லோரும் கிளார்க்குகலாக மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்தார்கள்)

இந்த முறை மாறினால், மான்டிசோரி முறை கல்வியில் அழகான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தால், அவர்கள் நல்ல உயர் கல்வியை அடைய முடியும்.

ஏனெனில் இந்த முறை கல்வியில் 5 புலன்களினாலும் கற்பிக்கிறோம்.

இது பெரிய டாபிக். எங்க புது பிளாக் ஆன www.parentsclub08.blogspot.com இல் இது பற்றி விரிவா வரும். பாருங்க.

நான் இந்தியா வ்ந்த பிறகு முழு மான்டிசோரி முறை கல்வி திட்டத்தில் பள்ளி ஆரம்பிக்க போகிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் கலா..வரவேற்கிறோம் உங்கள் பள்ளியை.