Wednesday, January 9, 2008

எது கலாசாரம்?

சமீபத்திய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சில கலவரங்களில் முடிந்தன. சில நிகழ்வுகள் சில கேள்விகள் கேட்க வைத்தன. இன்றைய காலகட்டத்தில் கலாசாரம் என்பதற்குச் சரியான விளக்கமோ, அளவுகோலோ தனியாக விதிக்க முடியாத நிலைமைதான்.அவரவர்க்கு எது சௌகரியமோ,எது பிடிக்குமோ அதுவே கலாசாரம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு விளக்கம் சொன்னாலும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது இதன் விளக்கம்.

கலாசாரம் அவரவர் பார்வையில், புத்தாண்டு சம்பந்தமாக..

சில ஆண்கள்: கேளிக்கைகள் என்ற பெயரில் அத்துமீறல் என்பது எங்கள் கலாசாரம்.

சில பெண்கள்: யாரை எப்படிப் பாதித்தாலும் சரி, நாங்களே பாதிப்புக்குள்ளானாலும் சரி..
எங்கள் விருப்பத்திற்கேற்ப, விருந்துக்கேற்ப ஆடை அணிந்து கலாசாரம் காப்போம்.

சில பெற்றோர்: புது வருடக் கேளிக்கைக்குப் போக வேண்டும் என்று மகள்/மகன் சொன்னால் அனுப்பி வைப்பதும்,அசம்பாவிதம் நடக்கும் போது விடுதி நிர்வாகத்தை மட்டுமே சாடுவதும் எங்கள் கலாசாரம்.

சில வாரிசுகள்: விருந்துக்குப் போவதற்குக் கணக்கில்லாமல் பொய் சொல்லிச் சென்று அப்பாவிப் பெற்றோரை முட்டாளாக்குவது எங்கள் கலாசாரம்.

சில மனைவிகள்: கணவனே கண்கண்ட தெய்வம்..அவர்கள் கூப்பிட்டால் விருந்து என்றாலும் மருந்து என்றாலும் சரியென்று சொல்வதுதான் எங்கள் கலாசாரம்.

சில கணவன்கள்: கோவிலோ, திரையரங்கோ.. எங்கே போனாலும் பெண்களுக்குப் ப்ரச்னைதான்..அதற்குப் பயந்து விருந்துகளைப் புறக்கணிக்க முடியுமா? எதற்கும் துணிந்து நிற்பதுதான் எங்கள் கலாசாரம்.

மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்: மக்கள் கூட்டம் புத்தாண்டிற்கு அலை மோதியது. அவர்களுக்காகவே நடைசாத்தாமல் தொடர்ந்து திறந்து வைத்திருந்து காலம் காலமாகப் பாவித்து வந்த நடைமுறைகளைச் சற்றே மீறியது எங்கள் கலாசாரம். தேவைப்படின் இந்தச் சேவை கூட்ட நாட்கள் அனைத்திலும் தொடரும். ஏன், 24 மணி நேர தரிசனத்துக்கும், ஷிப்ட் முறையில் பணியாளர்கள் நியமிப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். காசு பண்ணுவதற்காக அல்ல. கலாசாரம் காப்பதற்காக!!!

இன்னும் சில கோவில்கள்: வழக்கமாகச் செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யாமல் காசு கொடுத்தால் கடவுள் தரிசனம் என்று புதுமையிலும் புதுமை செய்து, சிறப்பு வழிபாடுக்குச் சிறப்பு ஏற்பாடு செய்வது எங்கள் புதிய கலாசாரம்.

சில பக்தர்கள்: காசும் காலமும் விரயம் செய்தாவது புத்தாண்டில் கடவுள் தரிசனத்தில் புண்ணியம் தேடுவது எங்கள் கலாசாரம். தமிழ்ப்புத்தாண்டு, சைனீஸ் புத்தாண்டு எல்லாமே சமமாகப் பாவித்துக் கொண்டாடுவது இன்னும் புண்ணியம்.

சொல்லிக் கொண்டே போகலாம்..காலத்தினால், அவரவர் வசதிக்காய் மாறுவதுதான், மாற்றப்படுவதுதான் கலாசாரம். அடுத்தவர்களையோ ஏன் தங்களையே பாதிக்காத கலாசாரத்தைப் பின்பற்றுவது பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

(பி.கு: கலாசாரம்? கலாச்சாரம்? எது சரியென்று ஒரு விவாதம் வந்து கலாசாரம் என்று சில நண்பர்கள் திருத்தினார்கள். எது சரியென்று சரிவர விளக்கம் யாரேனும் தருவீர்களா?)

13 comments:

seethag said...

மலர் உங்களுடய பல எண்ணங்களில் நான் வேறுபட்டாலும், கோவில் சம்பண்தப்பட்ட உங்கள் எண்ணத்தை ஆமோதிக்கிறேன்.


மற்றபடி, என்னால் கலாசாரம் என்ற பெயரில் நடக்கும் தனிமனித உரிமை மீறல்களைக்கூஉட தலை எழுத்தே என்று பொறுத்துகோள்வேன், ..ஆனால் கலாச்சாரம் என்ற வழ வழா கொழ கொழா விஷயத்தை வைத்து எல்லாரும் கொடுக்கும் ப்ரசங்களும் பல்வேறு பாதிப்பிகளும் மனதை வறுத்தும்.

எனக்கு தெரிண்து ஒரு நண்பர் கூறினார், மதுரை அடுத்த உள்ள சில ஊர்களில் ஒரு குறிப்பைட்ட சமூகத்தினரிடம் விதவை என்றொரு கான்ஸெப்ட் கிடையாதாம். மறுதாலி என்பது வழக்கமாம்.எனக்கு கேட்கவே சண்தோஷமாக இருண்தது. இவர்களும் இந்தியர்கள் /இண்துக்கள் தானே ,அப்புறம் அவர்களுக்கு மட்டும் உள்ள சுதண்திரம் மற்ற சமூகத்தினருக்கு ஏன் இல்லை.மற்ற சமூகத்து பெண்கள் எல்லாம் மட்டும் விதவை ஏன்றால் என்னென்விதமாக சீரழிய வேண்டிஉள்ளது?
ஒரு முறை என் தொழில் ச்மபண்தமாக எனக்கு தெரிண்த் முதியவரை பற்றி சொல்கிறேன். அவர் திண்டிவனமருகில் குக்ராமத்தை சேர்ன்தவர். சாதீய சமுதாயத்தை கடினமாக பின்பற்றும் வழக்கம் உள்ள க்ராமத்திலிருண்து வருபவர். அவரிடம் ,அவருடய புது மருமகள் எப்படி உள்ளார்கள் என்று கேட்ட போது, அவர் கூறினார்"அது எம் பையன புடிக்கலன்னு பஞ்சாயத்துல தாலிய கழட்டிட்டு அதுக்கு புடிச்சவங்கூட போயிடிச்சு'.

இவ்வளவெல்லாம் பெண்ணீயம் பித்தாளை பேசும் எனக்கு அப்படி செய்ய தைரியம் கிடையாது.

இதைத்தான் நான் middle class morality என்பேன். அடுத்தவனுக்கு பயன்து வாழ்வது. மனசாட்ச்சிக்கு இல்லை.
ராமாயணம் நடண்ததோ இல்லையோ , ஆனால் அதில் கூஊறப்பட்டுள்ளது போல் சுயம்வரம நடன்த நம் சமுதாயம் இன்று மட்டும் கூட்டமாக பெண்ணை வன்து பார்ப்பது ஏன்.?
இப்படி எத்தனையோ..கேரளத்தில் நாயர் சமுதாயத்தில் பெண்கள் முதன்மை வகித்தார்கள்.ஒன்றுக்கு மேல்ப்பட்ட ஆணை தேர்ந்தெடுக்கும் உரிமை முறை இருண்தது.(நம்பூதிரிகள் போல இல்லை)..இப்படி நம் சமூகத்தில் எத்தனியோ வித்யாசங்கள் இருப்பினும் பெருவாரியாக என்ன செய்வதாக கருத்தப்படுவதலையே சில பழக்கங்கள் சரி என்று கருதப்பட்டு திணிக்கப் படும்போது தான் ப்ரச்சினைகள்.........அவற்றிலிருப்து யார் மீறினாலும் அவர்களுக்கு வறை முறை இல்லை .........

எனக்கு மேலும் கோபம் வருவதெல்லாம்,கடவுள் இல்லை, நாஙள் பெரியாரின் நேரிடை வாரிசுகள், என்று கூறுபவர்கள் முதல், சங்க்பரிவார் வரை, பெண்ணுக்கான வறை முறை கூறவேண்டுமா இதோ நாங்கள் தயார் என்று கூடுவது தான். மலர் 'ஆணுக்கு அறிவைப்படைத்த கடவுள் நமக்கும் அறிவைகொடுத்துள்ளார்,..னமக்கு எது சரி என்று நிர்ணயிக்ககூட முடியவில்லை என்றால் நம்மில் சிலர் பல பெரிய பொறுப்புகளை வகிப்பது எப்படி. அதர்க்காக ஆண்களை கலண்தாலோசிக்ககூடாது என்றோ அவர்களை வெறுக்க வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை. ' நீ பெண் உனக்கு நான் சொல்லித் தான் தெரியவேண்டும்
' என்று சொல்வதைத்தான் மிகவும் கடுமையாக எதிர்க்கிறேன்.

மலர்,நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்..என்னால் இதைவிட அழகாக எழுத முடியவில்லை..இன்னும் பல எண்ணங்கள் வேறு...

பாச மலர் / Paasa Malar said...

அடா அடா அடா சீதா ..வெல்கம் வெல்கம்...ரொம்பவும் பொங்கி விட்டீர்கள்...பின்னூட்டத்துக்கு நன்றி..
ஒரு பதிவே என்று எடுத்துக் கொள்கிறேன்....

நல்ல கருத்துக்கள்..பெண், ஆண் பேதம் பார்ப்பது எழுதாத சட்டம் என்று ஆகிவிட்ட நிலை...அது இன்னும் கொஞ்ச காலத்துக்கேனும் மாறுவதற்கான சாத்தியமில்லை...
நானும் இதில் உங்கள் கட்சிதான்..

மற்றபடி நான் கலாசாரம் என்று இங்கு கூறியிருப்பது சூழலுக்கேற்றவாறு நடக்காது தங்கள் பாதுகாப்புக்குத் தாங்களே ஊறு தேடிக்கொள்ளும் தனிமனித பழக்கங்கள் பற்றிதான்..

//ஆண்களை கலண்தாலோசிக்ககூடாது என்றோ அவர்களை வெறுக்க வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை. ' நீ பெண் உனக்கு நான் சொல்லித் தான் தெரியவேண்டும்
' என்று சொல்வதைத்தான் மிகவும் கடுமையாக எதிர்க்கிறேன்//

இதேதான் என் கருத்தும்..

நன்றி சீதா...

பாச மலர் / Paasa Malar said...

//ஆனால் கலாச்சாரம் என்ற வழ வழா கொழ கொழா விஷயத்தை வைத்து எல்லாரும் கொடுக்கும் ப்ரசங்களும் பல்வேறு பாதிப்பிகளும் மனதை வறுத்தும்.//

என்னைப் பொறுத்தவரை கலாசாரம் என்பது சமூக ஒழுக்கம்...விருந்துகளும் கொண்டாட்டங்களும் இருந்துவிட்டுப் போகட்டும்...தமக்கு அறிமுகமான நண்பர்கள், குடும்பங்கள்..இவற்றுடன் கேளிக்கைகள் இருக்கட்டுமே...

இந்த எல்லைகளைத் தாண்டினால் ப்ரச்னை என்றால் ஏன் தாண்டுவானேன்?


//இவ்வளவெல்லாம் பெண்ணீயம் பித்தாளை பேசும் எனக்கு அப்படி செய்ய தைரியம் கிடையாது.//

நீங்கள் பேசுவது அர்த்தமற்ற பெண்ணியம் அல்லவே...பெண்களை அடிமைப்படுத்துவதைச் சாடுகிறீர்கள்..

//அடுத்தவனுக்கு பயன்து வாழ்வது. மனசாட்ச்சிக்கு இல்லை//

சில சமயம் சமூகத்துக்குப் பயந்து கட்டுப்பட்டு வாழத்தான் வேண்டியுள்ளது..atleast பாதுகாப்பு கருதியாவது..


//பெண்ணுக்கான வறை முறை கூறவேண்டுமா இதோ நாங்கள் தயார் என்று கூடுவது தான்.//

இது காலம் காலமாகத் தொடர்கிறது சீதா..குறைகூறிப் பழக்கப் பட்டவர்கள்..நாமும் குறை கூறத் தொடங்கினால் ...ஏன் இந்த விஷயத்தில் பெண்ணே பெண்ணுக்கு எதிரிதானே...

சரியான விலக்கம் தந்தேனா என்று தெரியவில்லை..ஆனாலும் உங்கள் கோபத்தின் நியாயம் எனக்குப் புரிகிறது..

இப்னு ஹம்துன் said...

கலாசாரம், கலாச்சாரம் - எது சரி ன்னு கேட்டிங்கன்னா, கலாசாரம் தான் சரின்னு சொல்றாய்ங்க.
ஆனா, தமிழ்லயே அத பண்பாடு என்றோ பண்புநிலை என்றோ எழுதுனா இன்னுஞ்சரி.

பண்பா டெனப்படுவ பாரில் மனிதருக்கு
தன்பாட்டை யொத்த உலகு.

மங்களூர் சிவா said...

எது கலாச்சாரம்
சத்தியமா புரியலை.

சீதா அவர்களின் கமெண்ட்டுக்கு ஒத்தை வரி பதில்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

cheena (சீனா) said...

மலர், நல்லதொரு பதிவு - கலாச்சாரம் என்றாலென்ன - யாருக்குத் தெரியும் - இதில் யாரும் அத்தாரெட்டி கிடையாது. அவரவர் மனதுக்குப் பிடித்ததை - தெரிந்ததை கலாச்சாரமென்று சொல்கின்றனர்.

காட்டாறு said...

கலாசாரம் என்ற கடினமான, கணமான தலைப்பை எடுத்து பேசியிருக்கீங்க. கலாசாரம் இடத்துக்கு இடம் மாறுபடக்கூடியது. சீதா சொன்னதை பாருங்க.. இதே இந்தியாவில் தான் நேர் எதிர் முறைகள் வழக்கில் உள்ளது. அப்படியிருக்கும் போது கலாசாரம் ஒன்று உண்டென... நாமே உருவாக்கிக் கொண்ட வரைமுறைகளை நாமே மீறும் போது, ஏன் வலிக்கிறது? ஏன் வலிக்க வேண்டும்?

காட்டாறு said...

// பாச மலர் said...
என்னைப் பொறுத்தவரை கலாசாரம் என்பது சமூக ஒழுக்கம்...விருந்துகளும் கொண்டாட்டங்களும் இருந்துவிட்டுப் போகட்டும்...தமக்கு அறிமுகமான நண்பர்கள், குடும்பங்கள்..இவற்றுடன் கேளிக்கைகள் இருக்கட்டுமே...

இந்த எல்லைகளைத் தாண்டினால் ப்ரச்னை என்றால் ஏன் தாண்டுவானேன்?
//

சமூக ஒழுக்கம் என்பதும் மனிதனால் உருவாக்கப் பட்டது தானே.

எல்லை என நீங்கள் எண்ணுவது எனக்கும் எல்லையாக தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லையே....

கலாசாரம் என்ற போர்வையின் கீழ் பேசாமல், தனிமனித ஒழுக்கத்தின் கீழ் பேசியிருந்தால், நன்றாக இருந்திருக்கும். ம்ம்ம்...

பாச மலர் / Paasa Malar said...

இம்னு ஹம்துன், சிவா, சீனா சார், காட்டாறு,

வருகைக்கு நன்றி...

//கலாசாரம் என்ற போர்வையின் கீழ் பேசாமல், தனிமனித ஒழுக்கத்தின் கீழ் பேசியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்//

இம்னு ஹம்துனின் "பண்பு நிலை" என்ற விளக்கம் இங்கே பொருந்தும் என் நினைக்கிறேன். காட்டாறு. தனி மனிதப் பண்பு நிலை, அல்லது தனி மனித ஒழுக்கம் என்ற வார்த்தையை கலாசாரம் என்பதை நீக்கி விட்டுப் பொருத்திப் பாருங்கள்...சரியாகவே வரும்.

//எல்லை என நீங்கள் எண்ணுவது எனக்கும் எல்லையாக தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லையே//

முற்றிலும் சரி...தனி மனிதனுக்கு..தனி மனித வாழ்வில்.பொது இடங்களிலும் அந்த எல்லை வித்தியாசப்படும் என்றாலும் சில நேரங்களில் அடக்கித்தானே வாசிக்க வேண்டியுள்ளது தத்தம் நன்மை கருதி..

யாராக இருந்தாலும் வீட்டில், பழகிய சூழலில், தனிமைக்கென்று ஒரு எல்லை..பொதுவில் கூட்டத்தின் முன் ஒரு எல்லை...இல்லை என்கிறீர்களா?

Sanjai Gandhi said...

அட இன்னாக்க சாமி இது? பதிவை விட பின்னூட்டம் பெரிசு பெரிசா கீது. அட போங்கப்பா .. கண்ணக் கட்டுது.. :(
-- கும்மி ரசிகர் மன்றம்
கோவை தலைமையகம்.

பாச மலர் / Paasa Malar said...

பேசிய விஷயம் அப்படி.கண்ணைக் கட்டாம என்ன செய்யும்..

பாச மலர் / Paasa Malar said...

அதேன சஞ்சய் 23ந்தேதிப் பினோட்டம் இபோதுதான் வருகிறது?

Sanjai Gandhi said...

//பாச மலர் said...

அதேன சஞ்சய் 23ந்தேதிப் பினோட்டம் இபோதுதான் வருகிறது?//

எனக்கு எப்படி தெரியும்? யார் செய்த சதியோ? :(