Tuesday, March 15, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்

சுனாமியாஞ்சலி

அலை அழகு
அமைதி அழகு
மாறும் நிறம் அழகு
உதிக்கும் சூரியன் அழகு
மறையும் சூரியன் அழகு
வேக நடை அழகு
மெது ஓட்டம் அழகு
மணல் கோபுரம் அழகு
தளும்பும் மீன்படகு அழகு.

ஆனால்
சுனாமி...சுனாமி..
அழகை மறக்கவைத்த ஆபத்து.

சீறும் சுனாமியே
சீக்கிரம் அமைதியாகுக!

அணு உலைகள் வெடிப்பு
உலகுக்கு அபாய எச்சரிப்பு..

இயற்கையுடன் பகைக்கின்
வேரோடு கெடும்..

பொன்னியின் செல்வன்

அவ்வப்போது அறிவிப்புகள் மாறி மாறி வந்தாலும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியானதொரு தகவல். விஜய், அனுஷ்கா, ஆரியா மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அனுஷ்கா குந்தவை, விஜய் ஜோடி என்கிறார்கள். அப்படியானால் விஜய்தான் வந்தியத்தேவன்...மிளிர்வார் என்றுதான் நினைக்கிறேன்..அனுஷ்கா வேடத்துக்குப் பொருத்தம்தான்..பாத்திரத்தில் எவ்வளவு தூரம் ஜொலிப்பார்?! குந்தவையின் குறும்பு வருமா? மிடுக்கு வருமா? கம்பீரம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

விஷால், விக்ரம் பேச்சையே காணோம் இப்போது..


மகேஷ் பாபு, ஆதித்த கரிகாலன்...சூர்யா ராஜராஜ சோழன் என்றால்..ஆரியா யார்?

நந்தினி வேடம் யாருக்கு?

எப்போது படம் வரும் எப்போது பார்ப்போம் என்றிருக்கிறது..

வரும்...ஆனா வராது....

மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்காலங்களில் நிலவி வரும் சூழல், சவூதி அரேபியாவிலும் சூடு பிடிக்கக்கூடும் என்ற நிலையில்..மார்ச் 11 கிளர்ச்சி மற்றும் ஊர்வலங்கள் எதிர்பார்க்கப்பட்டன....கண்டிப்பாக இங்கேயும் ப்ரசனை வரும் என்றும், அமைதியை விரும்பும் நாடு என்பதால் அப்படி ஏதும் வராது என்றும் எதிர்பார்க்கப்பட்டது..மார்ச் 11 அமைதியாகவே போனது..

சவூதி இளவரசர் அல் வாலித் சொன்னது போல் இது 'tempest in a tea cup' ... 'Saudi is Saudi ..it is no Egypt, no Tunisia, no Libya'...அமைதி இப்போதைக்கு நிச்சயம்...

எது எப்படியோ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

சின்னதாய் ஓர் இந்தியப் பயணம்

மார்ச் 16-30 இந்தியப்பயணம்...மிகவும் குறுகிய காலம்..பரபரவென்று பறந்து கொண்டேயிருந்தாலும் ஒவ்வொரு நொடியும் ரசித்து அனுபவிக்கப் போகிறேன்..

6 comments:

சுந்தரா said...

//சுனாமி..
அழகை மறக்கவைத்த ஆபத்து.//

அஞ்சிநடுங்க வைத்த ஆபத்தும்கூட.

பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் பாசமலர்!

ஜீவி said...

அழகு மனதிற்கு எல்லாமே அழகு!

//இயற்கையுடன் பகைக்கின்
வேரோடு கெடும்..//

இது அறிவின் அழகு.

இயற்கையோடு இயைந்த வாழ்வு
எல்லாமும் தரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாச மலர், சென்னை வந்தால் மெயிலவும். மறக்கக் கூடாது.
பயணம் சிறக்க வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

//சுனாமி...சுனாமி..
அழகை மறக்கவைத்த ஆபத்து.//

ஆம் பாசமலர். இயற்கை அன்னை சாந்தமுற வேண்டுவோம். அவளுக்குக் கேடு நினைக்காதிருப்போம்.

பயணம் இனிதே அமையட்டும்:)! இயன்றால் பேசுங்கள் சென்ற முறை போல. இங்கு வந்த பிறகு உங்கள் தொலைபேசி எண் மடலில் தந்து வையுங்கள்.// மறக்கக் கூடாது.// நானும் கேட்டுக்கறேன்:)!

கோபிநாத் said...

பொன்னியின் செல்வன் - எப்படி பார்த்தாலும் நிஜத்தை நிழல் நெருங்கவே முடியாது ;)

இராஜராஜேஸ்வரி said...

இயற்கையுடன் பகைக்கின்
வேரோடு கெடும்../
வலிமிகுந்த உண்மை.