அத்துவான அகண்ட வெளியில்
ஆழமான அடர் இருட்டில்
சத்தமான நகரச் சந்தையில்
சலசலக்கும் கிராம ஓடையில்
அண்டம் வாழ்
அனைத்து உயிர்களின்
அளப்பரிய தேடல்கள்
அளவளாவும் வாழ்க்கைகள்..
ஐந்தறிவின் தேடல்
அடிப்படையில் உணவுக்காய்
உறையுளுக்காய்
உற்பத்தி இனத்துக்காய்..
ஆறறிவின் தேடல்
அடிப்படை தொடங்கி
அதிரடியாக இறங்கி
அந்தம் கடந்தும்
மந்தம் அடையாது..
உதிர்பருவம் கடந்தும்
முதிர்ச்சியது அடையாது..
மயங்கும் நேரம் மகிழ்ச்சியில்
மகிழும் நேரம் மலர்ச்சியில்
தாழும் நேரம் உயர்வுக்காய்
உயரும் நேரம் உச்சிக்காய்..
சயன நேரம் நயனத்தில்
சலன நேரம் சரசத்தில்
மௌன நேரம் நினைவில்
மயான நேரம் அமைதியில்
இந்தத் தேடல்
நொடி விட்டு நொடி பாயும்
கூடு விட்டுக் கூடு பாயும்..
தேடல் தந்த ஈடாய்க்
கை நிறையப் புதையல்
அள்ளியணைத்துத்
திரும்பிப் பார்த்தால்
அட!
மீண்டுமொரு தேடலா?
ஆம்..
வாழ்க்கை தொலைந்து போனதாம்!
19 comments:
வெங்காயம் போல. தேடத் தேட ஒன்னுமில்லாமல் ஆகனுமே. அப்படி ஆகலைன்னா, திரும்பிப் பார்க்கும் முன் அடுத்த தேடல் ஆரம்பமாகிவிடும்.
இக்கவிதை அழகான தேடல்!
நல்ல தேடல் தான். வாழ்த்துக்கள்.
காட்டாறு said...
வெங்காயம் போல. தேடத் தேட ஒன்னுமில்லாமல் ஆகனுமே. அப்படி ஆகலைன்னா, திரும்பிப் பார்க்கும் முன் அடுத்த தேடல் ஆரம்பமாகிவிடும்.
எப்படி இப்படி எல்லாம்?!!!
வாங்க பாசமலர்...
பலவித பூக்களால் மலர்ச்சரம் தொடுத்துவிட்டு இப்போதுதான் இளைப்பாறிக் கொண்டிருப்பீர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். இதோ புதிய தேடலோடு புறப்பட்டு விட்டீர்கள்...
வாங்க வாங்க
பேரன்பு நித்யகுமாரன்
இக்கவிதை அழகான தேடல்!
நானும் ரிப்பீட்டு சொல்லிக்கறேன்.
தேடல் நல்லாருக்கு...;))
\\இந்தத் தேடல்நொடி விட்டு நொடி பாயும்கூடு விட்டுக் கூடு பாயும்..
தேடல் தந்த ஈடாய்க்கை நிறையப் புதையல்அள்ளியணைத்துத் திரும்பிப் பார்த்தால்அட!மீண்டுமொரு தேடலா?ஆம்..வாழ்க்கை தொலைந்து போனதாம்!\\
சூப்பர் ;))
ஆமாம் காட்டாறு, நி.ந,
வெங்காயம் உவமை நன்றாகப் பொருந்துகிறது..
நித்யகுமாரன்,
அது போன வாரத் தேடல்..வேற பாதையில் நம்ம தேடல் தொடரத்தானே செய்யும்..
நன்ரி கோபி, பு.தெ.
"தேடல் தந்த ஈடாய்க்
கை நிறையப் புதையல்
அள்ளியணைத்துத்
திரும்பிப் பார்த்தால்
அட!
மீண்டுமொரு தேடலா?
ஆம்..
வாழ்க்கை தொலைந்து போனதாம்! "
கை நிறைய புதையல் அள்ளியபின் வாழ்க்கையில் தொலைப்பதற்கு ஏதுமில்லை மலர், (தொலைத்தல் என்பது நம் மனம் சார்ந்த உணர்வுதானே கிட்டிய புதையல் நம்முள் இப்புரிதலை கொண்டு வராதா???) ஆனால் மீண்டும் தேடல் தான் இலக்குகள் தான் வேறு.. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
கிருத்திகா,
//தொலைத்தல் என்பது நம் மனம் சார்ந்த உணர்வுதானே கிட்டிய புதையல் நம்முள் இப்புரிதலை கொண்டு வராதா//
இந்தக் கேள்விக்கு..உங்களின் இந்த பதில்..
//ஆனால் மீண்டும் தேடல் தான் இலக்குகள் தான் வேறு..//
பொருத்தம்..தேடல்கள் தொடரும்..
தேடலில் வாழ்க்கை தொலைத்த சிலரின் அனுபவம் நினைவில் வந்தது..சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு வளைகுடா அனுபவம்..
விரைவில் குறுந்தொடராக எழுதலாம் என்றிருக்கிறேன்..
//
எப்படி இப்படி எல்லாம்?!!!
//
:))))))))
நல்லா இருந்தது தேடல்!!
சிவா, நன்றி ..
என்ன ரத்னேஷ் சார்,
கமெண்ட் நீக்கி விட்டீர்கள்..
super
thedal illa vaazhvu veen.arumai arumai.....nalla padaipu kanda magizhvudan ...
padma...
சென்ஷி, பத்மா
நன்றி..
பத்மா,
தேடல் இல்லா வாழ்வும் வீண்..(தேவையற்ற) தேடலில் மட்டுமே வாழ்க்கையைத் தொலைப்பதும் வீண்..
//இந்தத் தேடல்நொடி விட்டு நொடி பாயும்கூடு விட்டுக் கூடு பாயும்..
தேடல் தந்த ஈடாய்க்கை நிறையப் புதையல்அள்ளியணைத்துத் திரும்பிப் பார்த்தால்அட!மீண்டுமொரு தேடலா?ஆம்..வாழ்க்கை தொலைந்து போனதாம்//
இந்தத் தேடல் இல்லைன்னா வாழ்க்கை இல்லை பாச மலர்!!
தேடலே ஒரு தவம் மாதிரிதான்.....என்ன சரிதானே?
அன்புடன் அருணா
சரிதான் அருணா..
தவத்தின் பயன் வரமாகச் சிலருக்கு..சாபமாகச் சிலருக்கு..
இருந்தாலும் தவம் தொடரும்..
நல்லாயிருக்குங்க 'தேடல்'........
வாழ்த்துக்கள் பாச மலர்!!
Post a Comment