பள்ளிக்கூடப் பாட்டுப் போடச் சொன்ன கண்மணி தொடர் விளையாட்டுக்காக..
அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!
இலையில் சோறு போட்டு,
ஈயைத் தூர ஓட்டு!
நிலா நிலா ஓடி வா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேலே ஏறி வா!
மல்லிகைப்பூ கொண்டு வா!
கைவீசம்மா கைவீசு!
கடைக்குப் போகலாம் கைவீசு!
மிட்டாய் வாங்கலாம் கைவீசு!
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு!
பிஸ்கெட் பிஸ்கெட்
ஜாம் பிஸ்கெட்
என்ன ஜாம் கோஜாம்
என்ன கோ டிகோ
என்ன டி பன்ரொட்டி!
கீரை விதைப்போம்
கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை விதைத்தால்
கோழி கிளறும்
போடா வர மாட்டேன்!
Tuesday, March 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
கீரை விதைப்போம் புதுசா இருக்கு... இதுவரை கேட்டதில்லை, முழு பாட்டும் போட்டிருக்கலாம்.. வாழ்த்துக்கள்
ஆஹா,
நல்ல பாட்டுக்கள்
நானும் போட்டுட்டேன்
வந்து பாருங்க
கிருத்திகா,
முழுப் பாட்டும் போடுட்டேன்..என் பொண்ணு தமிழ் புத்தகத்தில் சுட்டது..
கோழி கிளறினால் வேலி போடலாம்
வாடா கண்ணா வா!
வேலியை ஆடு தாண்டிவிடுமே
போடா வரமாட்டேன்!
கீரை விதைப்போம் கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை வளரத் தண்ணீர் வேண்டுமே
போடா வரமாட்டேன்!
கேணி நீரை இறத்துக் கொள்ளலாம்
வாடா கண்ணா வா!
கீரை வளர்ந்தபின் என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!
கீழைத் தெருவில் விற்றுவிடலாம்
வாடா கண்ணா வா!
விற்ற பணத்தை என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!
வீணாக்காமல் வங்கியில் சேர்ப்போம்
வாடா கண்ணா வா!
வீடும் நாடும் வாழ்த்த வாழ்வோம்
வா வா அண்ணா வா!
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நன்றி மலர்
கீரை விதைப்போம் பாட்டு நல்லா இருக்கு பாசமலர். நேரம் இருந்தா அப்படியே இங்க கொஞ்சம் போய் பாருங்க.
http://nejamanallavan.blogspot.com/
பாசமலர் அருமை.
இதை இதைத் தான் எதிர்பார்த்தேன்.
படங்களுடன் பாட்டும் சேர்த்து அரும்புகள் பக்கத்தில் போடப் போறேன்.சரியா?
இன்னும் இருந்தாலும் சொல்லுங்கள்
பார்க்கிறேன் நிஜமா நல்லவன்..
கிடைத்தால் அனுப்புகிறேன் கண்மணி
Really beautiful!
Good luck.
மகளிர் தின வாழ்த்துக்கள்...
\\Collapse comments
கிருத்திகா said...
கீரை விதைப்போம் புதுசா இருக்கு... இதுவரை கேட்டதில்லை, முழு பாட்டும் போட்டிருக்கலாம்.. வாழ்த்துக்கள்
\\
ரீப்பிட்டு ;))
//கிருத்திகா said...
கீரை விதைப்போம் புதுசா இருக்கு... இதுவரை கேட்டதில்லை, முழு பாட்டும் போட்டிருக்கலாம்.. வாழ்த்துக்கள்//
கிருத்திகாக்கா, அஜீத்,லைலா கூட ஒரு படத்துல இந்த பாட்டுக்கு ஆடுவாங்க,புஸ்பவனம் குப்புசாமி பாடியிருப்பார்.
அதை டிவியிலே போடும் போதல்லாம் அபிபாப்பா எல்லா வேலையும் விட்டுட்டு வந்து பார்க்கும். ஏன்னா அது அப்போ அவளுக்கு சிலபஸ்:-))
பாட்டேல்லாம் சூப்பர். எனக்கு தான் ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. மண்டபத்துல யாரும் எழுதி தர மாட்டேங்குறாங்கப்பா....
ஆமாம் அபி அப்பா..அந்தப் பாட்டு பத்திப் பேச மறந்துட்டேன்..கீரை விதைபோம்..வாடா கோமாளி..அப்டின்னு வரும்..பரமசிவன் படம்னு நினைக்கிறேன்..
காட்டாறு,
இப்போதானே உங்க பதிவில் பாட்டு படிச்சுட்டு வரேன்..சூப்பர் சூப்பராப் போட்டுட்டு..கதை விடுறீங்களா?
Post a Comment