Sunday, March 2, 2008

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஐன்ஸ்ட்டின்:

ஒருவர் தான் தவறுகளே செய்யவில்லை என்று நம்புவாராயின், அவர் தன் வாழ்வில் புதிய முயற்சி எதுவுமே மேற்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

சுவாமி விவேகானந்தர்:

பிரச்னைகளை எதிர்கொள்ளாத நாள் என்று ஒன்று இருந்தால், நீங்கள் தவறான பாதையில்
செல்கிறீர்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.

ஆப்ரஹாம் லிங்க்கன்:

எல்லோரையும் நம்பும் குணம் ஆபத்தானது. ஒருவரையுமே நம்பாத குணம் அதைவிட
ஆபத்தானது.

அடால்ஃப் ஹிட்லர்:

நீ பெற்ற வெற்றியை விவரிக்க வேண்டிய அவசியமில்லை..உன் தோல்வியை விவரிக்க நீ இருப்பதே அவசியமில்லை.

தாமஸ் எடிசன்:

ஆயிரம் முறை தோற்றுவிட்டதாக நான் சொல்லமாட்டேன். தோல்வியை ஏற்படுத்தும்
ஆயிரம் வழிகளைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றுதான் சொல்வேன்.

ஆலன் ஸ்ட்ரைக்:

இந்த உலகத்தில் ஒருவரோடும் உன்னை ஒப்பிட்டுப் பேசாதே. அப்படி ஒப்பிடுவது உன்னையே நீ அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்.

அன்னை தெரசா:

பிறரை ஆராய முற்பட்டால், அவர்களிடம் அன்பு செலுத்த நேரமில்லாமல் போய்விடும்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வெற்றிக்கான மூன்று வாக்கியங்கள்:
  • அடுத்தவரை விட அதிகம் தெரிந்து கொள்வது.
  • அடுத்தவரை விட அதிகம் உழைப்பது.
  • அடுத்தவரை விடக் குறைவாக எதிர்பார்ப்பது.

போனி(Bonnie) ப்ளேர்:

வெற்றி என்பது முதலிடம் என்று எப்போதும் அர்த்தம் ஆகாது. வெற்றி என்பது, முன் நீ செய்ததை விடச் சிறப்பாகச் செய்திருக்கிறாய் என்றும் பொருள்படும்.

சார்லஸ்:

உடைக்கக் கூடாத நான்கு விஷயங்கள் - நம்பிக்கை, சத்தியம், உறவு மற்றும் இதயம்(அன்பு). இவை உடைந்தால் அதிகம் சத்தம் உண்டாவதில்லை, ஆனால் அதிகம் வலிகள் உண்டாகும்.

லியோ டால்ஸ்டாய்:

உலகத்தை மாற்ற வேண்டும் என்று அனைவரும் எண்ணுகிறார்கள். தங்களை மாற்றிக் கொள்ள எண்ணுவதில்லை.

(மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்தது..என் மொழிபெயர்ப்புப் பயிற்சிக்கு உதவியது)

18 comments:

கோபிநாத் said...

அருமை...அருமை ;))

உங்களின் மொழிபெயர்ப்புக்கு என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள் ;)))

cheena (சீனா) said...

மொழி பெயர்ப்பு அருமை மலர். நல் வாழ்த்துகள் - வலைச்சர ஆசிரியராவதற்கும். கலக்குக - ஆவல் அதிகரிக்கிறது.

மீண்டும் நல் வாழ்த்துகள்.

sury said...

ஏதாவது ஒரு துறையில் எல்லோர் கண்படவும் இருந்தபின்னே அவர்கள் பொன்மொழி உதிர்ப்பதும்
அதை நம்மைப் போன்ற ஆம் ஆத்மி (சாதாரணங்கள்)மேற்கோள் காட்டுவதும் மரபாக மாறிவிட்டது.
தவறெனச் சொல்லவில்லை.
ஆயினும், இது மாதிரி ஏன் நினைத்துப்பார்க்கக்கூடாது ? என் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்.
"என்னுடைய கருத்து இதுதான். பாருங்கள்..அவர்கூட நான் நினைத்த மாதிரி தான்
நினைக்கிறேன் என்று."
இது ஆணவம் அல்ல. இது தன்னம்பிக்கை. தன்னாலும் செய்யமுடியும் என்ற
வைராக்கியம்.
இன்னொரு பழமொழி. (புதுமொழி சேர்ந்தது)
"செய் அல்லது செத்து மடி. ( Do or die )
இன்னொருவர் போர்வையில் குளிர் காயாதே."
இன்னொரு போர்வை என்பது பழமொழியைச் சொல்கிறதோ ? தெரியவில்லை.

பெட்டகத்தில் பணம் இருக்கும் என நினைத்தேன்.
புதையல் இருக்கிறது.

சுப்புரத்தினம்.
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com

பாச மலர் said...

நன்றி கோபி..

சீனா சார்..வலைச்சரம்..ஓ முதல் பக்கத்தைப் பார்த்து விட்டீர்க்ளா? நன்றாகச் செய்ய வேண்டும் என்று ஆசைதான்..பார்ப்போம்..

சூரி/சுப்பு அவர்களுக்கு,

ஆங்கிலத்தில் பார்த்தபோது தமிழில் சிந்திக்கத் தோன்றியது..உடனே சரியாக மொழிபெயர்க்க வருகிறதா என்று சோதனை செய்யவும் தோன்றியது.. படிக்கும் யாரேனும் இன்னும் சரியான வார்த்தைகளில் சொல்வார்கள் என்ற எண்ணமும் உண்டு..

நிஜமா நல்லவன் said...

//sury said...
பெட்டகத்தில் பணம் இருக்கும் என நினைத்தேன்.
புதையல் இருக்கிறது.///
அள்ள அள்ள குறையாத புதையல்.

PAISAPOWER said...

ஹிட்லரும், அலன் ஸ்ட்ரைக்கும் நம்ம ஜாதி போல...

எல்லாரும் நல்லாத்தான் சொல்லீருக்காங்க....

நானும் இப்படி ஏதாச்சும் சொல்லனும்...ஹி..ஹி...பார்ப்போம்!

மங்களூர் சிவா said...

//
ஆயிரம் முறை தோற்றுவிட்டதாக நான் சொல்லமாட்டேன். தோல்வியை ஏற்படுத்தும்
ஆயிரம் வழிகளைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றுதான் சொல்வேன்.
//

இது நல்லா இருக்கே!!

மங்களூர் சிவா said...

மொழி பெயர்ப்பு மிக அருமை .

பாச மலர் said...

நிஜமா நல்லவன், பைசா பவர், சிவா,

கருத்துக்கு நன்றி..

கிருத்திகா said...

ரீச்சர்... கலக்கிட்டீங்க.... வாழ்த்துக்கள்....

சென்ஷி said...

கலக்கலான சிந்தனை தூண்டும் பதிவு..

வலைச்சரத்துல இந்த வாரம் நீங்களா...
அங்கயும் வந்து ஆஜர் போட்டுடறேன்

:))

புதுகைத் தென்றல் said...

மிக மிக அருமை.

வாழ்த்துக்கள்

கண்மணி said...

http://kouthami.blogspot.com/2008/03/blog-post_04.html

புது தொடர் விளையாட்டு வாங்க

Dreamzz said...

nice quotes

ILA(a)இளா said...

Nice One

ILA(a)இளா said...

Nice One

காட்டாறு said...

நீங்களா மொழிபெயர்த்தீங்க? பயிற்சி எடுக்குறீங்களா? நல்லாயிருக்கே.

எனக்கு ரொம்ப பிடித்தது
//வெற்றி என்பது முதலிடம் என்று எப்போதும் அர்த்தம் ஆகாது. வெற்றி என்பது, முன் நீ செய்ததை விடச் சிறப்பாகச் செய்திருக்கிறாய் என்றும் பொருள்படும்//

//லியோ டால்ஸ்டாய்:உலகத்தை மாற்ற வேண்டும் என்று அனைவரும் எண்ணுகிறார்கள். தங்களை மாற்றிக் கொள்ள எண்ணுவதில்லை.//

பாச மலர் said...

கிருத்திகா, சென்ஷி,ட்ரீம்ஸ்,இளா,

நன்றி..

காட்டாறு,

சுய பயிற்சிதான்..கொஞ்சம் அப்போ ஆன்கிலக் கவிதைகலில் எனக்குப் பிடித்ததை மொழிபெயர்க்கலாம் என்றிருக்கிறேன்..கவிதைகளைச் சரியாக மொழிபெயர்க்க இது போல் அவ்வபோது பயிற்சி..