
உன்னிடம்
கற்றதும் பெற்றதும்
ஏராளம்!
உன் எண்ணங்கள்
என் கைப்பிடித்துச் சென்று
காட்டிய வழியெல்லாம்
பூத்துச் சிரிக்கின்றது
பூபாளம்!
கதைகள் மீது
காதல் பிறக்கச் செய்தாய்!
எழுத்தினாலே
என்னுள் புரட்சி செய்தாய்!
கண்ணில் கண்ட
உலகங்கள் மட்டுமல்ல
காணா உலகங்களையும்
கவின்மிகு காட்சி செய்தாய்!
அறிவில் கண்ட
அறிவியல் ஆழம்,
அண்ட சராசரத்தின்
அகலம் நீளம் சகலம்
அறிந்து வைத்திருந்தாய்!
உறவில் ஒன்று
உயிர் நீத்தது போல்
குருவில் ஒருவர்
குறைந்து விட்டது போல்
தோழமை ஒன்றைத்
தொலைத்து விட்டது போல்
துடிக்கிறது என் மனம்!
இனி உன்
எழுத்து மட்டும்தானே
எம்முடன் தங்கும்!
கலைகளுக்குதான் மரணமில்லை..
கலைஞனுக்குதான் உண்டே..
10 comments:
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
:( aazhantha anuthaapangal
ஆழ்ந்த அனுதாபங்கள் :(
//உறவில் ஒன்று
உயிர் நீத்தது போல்
குருவில் ஒருவர்
குறைந்து விட்டது போல்
தோழமை ஒன்றைத்
தொலைத்து விட்டது போல்
துடிக்கிறது என் மனம்!//
ஆழ்ந்த அனுதாபங்கள் - ஆன்மா சாந்தி அடைவதாக
//அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்//
ஆண்டவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
அவரில்லாத எழுத்துலகம் வெறுமையாகத் தான் இருக்கும்.
உண்மையிலேயே உறவில் ஒருவரைத்தொலைத்தது போலவே உணர்கிறோம். ஆனால் சிறிது நாள்களாகவே உடல்நிலை மிகவும் சரியில்லாமல் அவதிப்பட்டதாக கேள்வி. ஒரு தனித்த எழுத்து நடையை தமிழ் உலகிற்கு தந்தவர் என்பதின் பெருமை இவரையே சாரும். எழுத்தில் மட்டுமல்ல கதை தலைப்பில் கூட (ஆதலினால் காதல் செய்வீர், அபி அபி குட்டியை எவராலாவது மறக்க முடியுமா???? வாய்மையே வெல்லும் (சிலசமயம்)... இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்)
//இனி உன்
எழுத்து மட்டும்தானே
எம்முடன் தங்கும்!//
மலரின் மணம்போலே
பாசமோடு, பரிவோடு,
சுஜாதா
சுற்றிடுவான் = இணைந்திடுவான்,
இனித் தங்கள்
எழுத்தோடு.
சுப்புரத்தினம்.
தஞ்சை.
பி.கு: இந்த வாரம் தங்க மகுடம் யாருக்கு?
ஞாயிறன்று வருக.
http://arthamullaValaipathivugal.blogspot.com
//அறிவில் கண்ட
அறிவியல் ஆழம்,
அண்ட சராசரத்தின்
அகலம் நீளம் சகலம்
அறிந்து வைத்திருந்தாய்!/
உண்மை.. அவரின் மறைவிற்க்கு
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்:)
Post a Comment