ஐந்து நாளில் தொடங்கி
ஒரு நாளாய்த் தொடர்ந்து
அரை நாளில் அடங்கி
அரிதார அவதாரத்தையும்
நெட்டித் தள்ளிய
மட்டை(ட)ப் பந்து!
அன்று
விளையாட்டு வினையாகி
விலை கொண்டது உயிர்தனை.
இன்று
வியாபார விகற்பமாய்
விசுவரூபமடுத்து
வீரனே
விலை பேசுகிறது உன்னை.
விலை போகச் சம்மதிக்கும்
வீரனே! நீயெல்லாம் உயர்திணை?
பிடித்த மட்டையும்
எறிந்த பந்தும்
ஏலம் போனது ஒரு காலம்!
மட்டை பிடிப்பவரும்
பந்து எறிபவரும்
ஏலம் போகும்
அவமான அவலம்!
காலத்தின் கோலம்!
காலம்! கலிகாலம்!
ராமி! அபிராமி!
ஒரு நாளாய்த் தொடர்ந்து
அரை நாளில் அடங்கி
அரிதார அவதாரத்தையும்
நெட்டித் தள்ளிய
மட்டை(ட)ப் பந்து!
அன்று
விளையாட்டு வினையாகி
விலை கொண்டது உயிர்தனை.
இன்று
வியாபார விகற்பமாய்
விசுவரூபமடுத்து
வீரனே
விலை பேசுகிறது உன்னை.
விலை போகச் சம்மதிக்கும்
வீரனே! நீயெல்லாம் உயர்திணை?
பிடித்த மட்டையும்
எறிந்த பந்தும்
ஏலம் போனது ஒரு காலம்!
மட்டை பிடிப்பவரும்
பந்து எறிபவரும்
ஏலம் போகும்
அவமான அவலம்!
காலத்தின் கோலம்!
காலம்! கலிகாலம்!
ராமி! அபிராமி!
30 comments:
கலி முத்திடுத்து...
பூமாதேவி சிரிக்கப்போறா...
என்னவோ போங்க பாசமலர் நாம பொலம்பத்தான் முடியும்...
நித்யகுமாரன்
கிரிக்கெட்டு தரிகெட்டுப்போய் வெகுகாலாமாச்சு.
11 முட்டாள்கள் விளையாடுவதை, கோடி முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று யாரோ எப்போதோ சொல்லக் கேள்வி.
அது உண்மைதான் என்று இப்போது தோன்றுகிறது.
என்ன பண்றது நித்யகுமாரன்..புலம்பத்தான் முடியும்..
கொஞ்சம் இந்த விளையாட்டை ஒரு காலத்தில் ரசிச்சிருக்கேனே..அதான் ஆதங்கம்..
11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள்(அவர் காலத்தில் அவ்வளவுதான்) பார்க்கும் விளையாட்டு என்று சொன்னவர் பெர்னார்ட் ஷா.
அவர்காலத்தில் அவ்வளவுதான் பாசமலர்.
நான் இப்ப இருக்கற நிலமைக்குச் சொன்னேன்.
பொடிபசங்க கூட கிரிக்கெட் பாக்குதுங்க.
:))))))))))))))))
நீங்க ரசிச்சிருக்கீங்க.
நான் சோறு தண்ணி இல்லாம பாத்திருக்கேன்.
இவங்க ஜெயிக்க நான் சாமியைக் கும்பிட்ட காலமெல்லாம் உண்டு.
காசே தான் கடவுளடா...:-))
உங்க கவிதை நல்லா இருக்கு. ஆனா மாற்றத்தை நம்மால அவ்வளவு சீக்கிரம் ஜீரணிக்க முடியலையோ.
ஒரு பொழுதுப் போக்கு ,இப்போது சூதாட்ட கேளிக்கூத்தாக்கி விட்டிருக்கிறது. அருமையா சொல்லியிருக்கிங்க..பாசமலர்..
தலைப்பு சற்று குழப்பமாக இருக்கே என்று பார்த்தேன். கவிதையப் படிச்ச பின் தான் புரிந்தது. நல்லா எழுதியிருக்கீங்க. :)
அக்கா எப்படி தான் இப்படி சூழ்நிலைக்கு தக்கபடி டக்குன்னு கவிதை எழுதுறிங்களோ!?...
கவிதை அருமை ;)
கிரிக்கெட் - ஒன்னும் சொல்லறதுக்குல்ல..;(
\\சின்ன அம்மிணி said...
உங்க கவிதை நல்லா இருக்கு. ஆனா மாற்றத்தை நம்மால அவ்வளவு சீக்கிரம் ஜீரணிக்க முடியலையோ.\\
அக்கா இது நல்ல மாற்றம்ன்னு நினைக்கிறிங்க.!!?
கோபி, நல்ல மாற்றமா கெட்ட மாற்றமான்னு உறுதியா சொல்ல முடியலை. ஆனால் வெளிநாட்டு வீரர்களை இந்தியா ஏலம் எடுக்க முடியுதுன்னா அது கிரிக்கெட்ட்ல தான். கிரிக்கெட்னா அது இந்தியாலங்கறமாதிரி ஒரு நிலைமை ஆயிடுச்சு. எதுல இந்தியா வல்லரசோ இல்லியோ 'கிரிக்கெட் அரசியல்ல' இந்தியா வல்லரசு ஆயிடுச்சு. விளையாடி ஜெயிக்க முடியலைன்னாலும்ம், இப்படி ஏலத்துல ஜெயிக்க முடியுது.
மலர் - அருமையான கவிதை - ஆதங்கம் ஆத்திரம் எல்லாம் புரிகிறது. என்ன செய்வது - கிரிக்கட் பார்ப்பதை நிறுத்தினால் தான் இது வெல்லாம் நிற்கும். ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆமாம் மங்கை..சகலமும் காசுதான்..
//ஆனா மாற்றத்தை நம்மால அவ்வளவு சீக்கிரம் ஜீரணிக்க முடியலையோ.//
என்னால் முடியவில்லைதான்..ஒரு காலத்தில் விடாமல் பார்த்த விளையாட்டு இன்று ஜெயித்தால் கூட மகிழ்ச்சி தருவதில்லை..
இத்தனை மாற்றங்கள் வேறு எந்த விளையட்டுக்காவது இருக்குமா? இந்த மாற்றங்கள் வீழ்ச்சிக்கான அறிகுறியே..மெல்ல மெல்ல இது தன் பெருமையை இழக்கும்..
நன்றி ரசிகன், சதங்கா, கோபி.
ஆமாம். சீனா சார், கூடிய சீக்கிரம் அனேகர் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு விடுவார்கள்..
//ஆனால் வெளிநாட்டு வீரர்களை இந்தியா ஏலம் எடுக்க முடியுதுன்னா அது கிரிக்கெட்ட்ல தான்//
இது நம் வீழ்ச்சியில்லையா..
இந்திய கிரிக்கெட் மிக கேவலமான திசையில் பயணிக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாயிடுச்சி.
நக்கீரனில் நக்கல் அடித்திருக்கிறார்கள் -
"அந்தக்கால பாக்தாத்தில் பேரழகிகளை
தெருவில் ஏலம் விடுவது போல" என்று.
இதைப் படிப்பதற்கு நெருடலாகத்தான் இருக்கிறது. இந்த ஆட்டங்களுக்குச்
செய்யப்போகிற விளம்பரங்கள் புது எல்லைகளைத் தொடும்போது இன்னும் கொஞ்சம் வருத்தப் படத் தோன்றும்.
அதோடு இந்த நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குப் போகும்போது இன்னும் ஒரு மாதிரியாக இருக்கும். இதைச் சுற்றிய சூதாட்டச் சந்தை பெருகும் போது மேலும் ஒரு மாதிரி இருக்கும்.
இந்த நிறுவனங்கள் மாநில அரசைப் பயன்படுத்தி இறுதிப் போட்டி போன்றவற்றிற்கு பள்ளி விடுமுறை
விடச்செய்யும் போது மேலும் ஒரு மாதிரி இருக்கும் :-)
எனக்கென்னவோ இந்த ஆட்டங்கள்
எதிர்பார்த்த வருமானத்தை ஈட்டாது
என்றே தோன்றுகிறது. நான் சொல்வது பொய்யாகிப் போகக்கூடும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
நான் இதை வேறொரு கோணத்தில் பார்க்க முயல்கிறேன். விளையாட்டை அதன் திறமையை ஏலம் விடுவதா?? வெளிநாட்டு வீரர்களை நாம் ஏலம் எடுப்பதா??? சொந்த மண்ணில் திறமைகளுக்கு பஞ்சமா???? இப்படி கேள்விகள் ஒருபக்கம் இருந்தாலும். அதை இப்படியும் காணலாம்.
01. க்ராஸ் கல்ட்சர் என்று சொல்வார்களே அது போன்று தோனியின் திறமைகளை சென்னை அணியும், மற்ற உலக அரங்கின் வீரர்களின் அனுபங்களை நம் வீரர்களும் கற்று நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள ஒரு வழி
02. இந்த பணம் அந்தந்த வீரர்களுக்கு செல்வதால் இது அவர்கள் விளையாடுவதற்கான் சம்பளம்தானே அவர்கள் ஒன்றும் இது வரை இலவசமாக விளையாடவில்லயே
03. நல்ல திறமையான இளம் வீரர்களுக்கு ஒரு உலக தரம் வாய்ந்த பயிற்சியை இதன் மூலம் நம்மால் தரமுடிகிறது.
04. கிரிகெட்டும் எல்லா விஷயங்களைப்போல் பணம் பண்ணும் தொழில் என்று ஆனபின்பு (வீரர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும், கிரிகெட் போடிற்கும், விளம்பரகம்பெனிகளுக்கும்) நாம் இதற்கென பெரிய முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.
என் தனி பாராட்டுக்கள் உங்களுக்கு பாசமலர், அன்றைய நிகழ்வுகளை எழுதுவதற்கு ஒரு பெரிய ப்ரெசென்ஸ் ஆப் மைண்ட் வேண்டும் அது உங்களிடம் அதிகம் உள்ளது. வாழ்த்துக்கள்
ஆமாம் நிஜமா நல்லவன்..உண்மைதான்..
//எனக்கென்னவோ இந்த ஆட்டங்கள்
எதிர்பார்த்த வருமானத்தை ஈட்டாது
என்றே தோன்றுகிறது.//
ஆமாம் இளங்கோவன் ஐயா..எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
கிருத்திகா,
திறமைகளுக்கும் அணித்தேர்வுக்கும்தான் நம் நாட்டில் சம்பந்தமே இருப்பதில்லையே.
இவர்களுக்கு இது சம்பளம்தான்..அதிக சம்பளம் கொடுப்பதால் இன்று மாநில அளவில் இருக்கும் மாற்றம் நாளை தேசிய அளவிலும் மாற ஆரம்பித்தால்..
நீங்கள் சொல்வது போல் இதைப் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்ற கட்டத்தில் நாம் இருக்கிறோம்தான்..மெல்ல கிரிக்கெட் இனி அழியும் என்ற நிலையின் முன்னுரையே
இது..இத்தனை விதிகள், விளையாட்டு முறைகள் மாறிய பெருமை வேறு எந்த விளையாட்டிற்காவது இருக்க முடியுமா?
மார்க்கெட் இழந்து வரும் மகாநடிகன் அதைத் தக்கவைத்துக் கொள்ளச் செய்யும் விபரீத முயற்சி போல விளையாட்டின் வியாபார பலத்தைப் பெருக்கச் செய்யும் உத்திகள் இவை..எவ்வளவு தூரம் பலிக்கிறது என்று பார்போம்.
ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க க்ள்ப் கால்பந்து விளையாட்டுகளில் இதைவிட பலமடங்கு பணம் புரள்கிறது....
அவர்களின் முறையை ஈயடிச்சான் காப்பியாக இங்கேயும் ஆரம்பித்திருக்கின்றனர். இந்த பணமுதலைகள் கொட்டும் பணமத்தனையும் நம்மை போன்ற பார்வையாளர்களிடம் இருந்துதான் கறக்க வேண்டும்.
நுகர்வு கலாச்சாரத்தின் மற்றுமொரு நீட்சியே இவை...இதை தடுக்க இயலாது...அதே நேரத்தில் நமது நாட்டில் மற்ற விளையாட்டுகள் அடிப்படை வசதி கூட இல்லாமல் திண்டாடுவதுதான் ரொம்பவே நெருடுகிறது....
ஆஹா.. நான் பொலம்பி முடிச்சதும் அக்காவா? இது என் பொலம்பலின் கவிதை வடிவம் போல.. :)
//விலை போகச் சம்மதிக்கும்
வீரனே! நீயெல்லாம் உயர்திணை?//
செம நச். :)
//11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள்(அவர் காலத்தில் அவ்வளவுதான்) பார்க்கும் விளையாட்டு என்று சொன்னவர் பெர்னார்ட் ஷா//
அவர் கால் பந்தாட்டத்தை தானே சொன்னார்? :(
//பொடிபசங்க கூட கிரிக்கெட் பாக்குதுங்க.
:))))))))))))))))//
யக்கா ..என்னை வம்புக்கு இழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதா? :(((((((((
\\ சின்ன அம்மிணி said...
எதுல இந்தியா வல்லரசோ இல்லியோ 'கிரிக்கெட் அரசியல்ல' இந்தியா வல்லரசு ஆயிடுச்சு. விளையாடி ஜெயிக்க முடியலைன்னாலும்ம், இப்படி ஏலத்துல ஜெயிக்க முடியுது.
\\
அக்கா...இந்த பயிண்டுக்கு உங்களுக்கு ஒரு "ஒ" போட்டுகிறேன். அரசியலில் நம்மளை அடிச்சிக்க ஆளே இல்லை..;))
மற்ற விளையாட்டுகள் நிலை கவலைக்கிடம்தான்..இன்னும் எத்தனை காலத்துக்கோ இப்பஎஇ?
சஞ்சய்..ரத்னேஷ் சாரும் இது பத்திப் பதிவு போட்டிருந்தார்...அங்கே பின்னூட்டத்தில் நானும் இதைப்பற்றி எழுதியிருக்கிறேன்னு ஒரு விளம்பரம் போட்டுட்டு வந்தா நீங்களும் எழுதிருந்தீங்க..அங்கயும் விளம்பரம் வேணான்னு சொல்லாம் கருத்து மட்டும் சொல்லிட்டு வந்தேன்...
ஒரே நேரமாப் புலம்பிருக்கோம்..சரி இப்போ சரியாயாச்சு..கொஞ்சம் நஞ்சம் இருந்த ஆர்வமும் சுத்தமாப் போயாச்சு..
அவர் கால் பந்தாட்டத்தை தானே சொன்னார்? :(
அப்படியா? கிரிக்கெட் என்று சொன்னதாக நினைவு..
அருமையான கவிதை!
பாச மலர் said...
அவர் கால் பந்தாட்டத்தை தானே சொன்னார்? :(
அப்படியா? கிரிக்கெட் என்று சொன்னதாக நினைவு..
கிரிக்கெட் பற்றி தான் சொன்னார்.
புதுகைத் தென்றல் said...
பொடிபசங்க கூட கிரிக்கெட் பாக்குதுங்க.
SanJai said...
யக்கா ..என்னை வம்புக்கு இழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதா? :(((((((((
நீங்க பொடியனா இருந்தப்ப பிராட்மேன் ஆட வந்துட்டாருன்னா மெய்மறந்து பார்ப்பீங்களாமே உண்மையா?
நன்றி திவ்யா..
Post a Comment