கலைஞர் டிவியில் காலை 12 மணி முதல்(சவுதி நேரம்) இந்த அறிவிப்பு கீழே ஓடிக் கொண்டிருந்தது..மதியம் 1.30க்கு பேட்டி..முடியும் போது 3.40..(நடுநடுவில் நல்லவேளை பாடல்கள்,விளம்பரம்) எப்போது போடும் குட்டித் தூக்கத்தைத் தியாகம் செய்து கேட்ட சில விஷயங்கள்:
1. இதுவரை பேட்டி கொடுக்காதது குறித்து..
பொதுவாக outspoken person நான்..யாரும் எதையும் misunderstand பண்ணக்கூடாது...தமிழ் மொழியில் முதலில்அவ்வளவு சரியாகப் பேச வராது என்பதால்..யாரும் நான் கூற வந்ததைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது..So let me shut up and mind my own business என்று இருந்து விட்டேன்...சில கேள்விகளுக்குப் பதில் சொன்ன போது industryக்கு வந்து 2 வருடம்
ஆகவில்லை..ஏன் இப்படி frank ஆப் பேசுகிறார்னு கேட்டவர்கள் அதிகம்...பொய் பேச முடியாது..உண்மை பேசாமல் இருந்துவிட்டேன்..எனக்காக argue பண்ண ஒரு கூட்டம் அப்போது இல்லாததால் silent ஆக இருந்துவிட்டேன்.
சமீப காலம் என்று எடுத்துக் கொண்டால் என் race ஈடுபாடு குறித்த விமர்சனங்கள்..தோல்விப் படங்கள் குறித்த விமர்சனங்கள்
.இதில் எல்லாம் சொல்கிற அளவுக்கு positive விஷயங்கள் கம்மி....negativeபற்றிப்பேசினால் cry baby யாக நேரிடும்.அதனால் பேசாமல் இருந்து விட்டேன்.
பேசுவதற்கான சமுதாய நல விஷயங்கள் எத்தனையோ இருக்கையில் நாட்டுக்கு அஜீத் பேட்டி தேவையா? என்பது ஒரு புறம்.அப்படியே சமுதாய நலன் பற்றிப் பேசினால் அரசியல் ஈடுபாடு என்பார்கள் என்பது ஒரு புறம்..தன்னைப் பற்றியே புகழும் Narcistic approach நடிகனுக்கு இருக்கிறது என்ற பேச்சு ஒரு புறம்..exposure disastrous ஆகி விடுமோ என்ற பயம் ஒருபுறம்..
2. இப்போது கொடுப்பதற்குக் காரணம்?
என்னுடைய ரசிகர்களின் பல நாள் வேண்டுகோளுக்காக..எல்லா நடிகர்களின் படங்களின் செய்திகள் பேட்டிகள் வரும்போது என்னுடையதும் வரவேண்டும் என்று விரும்பினார்கள்..அவர்கள் ஆர்வம் காரணமாய்..எனக்கும் ரசிகர்களுக்குமிடையே ஒரு
link இல்லாமல் இருந்ததைச் சரி செய்ய..
3. பில்லா பற்றி..
இப்போது பேசக் கிடைத்த ஒரு காரணம் இந்தப் படம்.."தொட்டால் பூ மலரும்" என்ற பாடல், ஹிந்திப்பட ரீமேக் ஷான் -ஹிட்டானபோது ரீமேக் செய்யத் தோன்றியது..சிறு வயது முதல் கமல்,ரஜினி fan..பில்லா படத்தை நான் அந்த வயதில் ரசித்தது போல இந்த இளைய தலைமுறையினர் ரசிக்க வேண்டுமென்று தோன்றியது...ரஜினி சார் "வரலாறு" படம் பார்த்துவிட்டு
என்னைப் பாராட்டிய போது அவரும் ஓ.கே சொல்லிவிட்டார்..
பில்லா success பொறுத்து "தீ" படத்திலும் ரஜினி,சுமன் 2 வேடத்திலும் செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது.
My name is Billa, மற்றும் வெத்தலையப் போட்டேண்டி என்ற 2 பாடல்கள் மட்டும் remix ..வேறு எல்லாம் புதுப் பாடல்கள்
variety ஆக stylish ஆக costumes போட முடியவில்லையே என்ற ஆசையை இந்தப் படம் நிறைவேற்றியுள்ளது..
(Trailor காண்பித்தார்கள்..இந்த வசனத்துடன்: "சரித்திரத்தை ஒரு நிமிஷம் பாருங்க. அது நமக்குக் கத்துக் கொடுத்தது ஒண்ணுதான்.நாம வாழணுமின்னா யாரை வேணாலும் எத்தனை பேரை வேணாலும் கொல்லலாம்")
4. Fans பற்றி..
இந்தக் கொடுப்பினை எல்லாருக்கும் கிடைக்காது..I am very grateful to them..எத்தனை ஜென்மம் எடுத்தாலும் etc.,etc.,
இனிமேல் experiments பண்ண மாட்டேன்...பில்லா, வில்லன், வரலாறு மாதிரி entertaining commercial படங்களில்தான் நடிப்பேன்.
5. Heroines பற்றி..
நான் தயாரிப்பபளரிடம் choice சொல்லுவதில்லை..இப்போது வரும் படங்களில் பெண் பாத்திரங்களுக்கு perform பண்ணும் வாய்ப்புகள் heroes ஐ விடக்குறைவுதான்..
6. சமூகப் பணிகள் பற்றி..
எக்ஸ்னோரா மூலம் மரக்கன்றுகள் நடுதல் பிறந்த நாளன்றும், பட ரிலீஸ் அன்றும் ரசிகர்கள் செய்கிறார்கள்..கூட்டம் கூடுவதால் நேரடியாகக் கலந்து கொள்ள முடிவதில்லை..
7. குடும்பம் பற்றி..
அப்பா தமிழ்..அவருடைய forefathers கேரளாவில் போய் settle ஆனவர்கள்..அம்மா Karachi யில் பிறந்து Calcuttaவில் வாழ்ந்தவர்கள்..Secunderabad இல் பிறந்து சென்னையில் வளர்ந்தேன்...ஒரு அண்ணன் ஒரு தம்பி..
8. ஷாலினி பற்றி..
very intelligent..not interfering in my decision making...கருத்துக்கள் சொல்வாங்க..
9. தமிழக அரசு விருது விழாவில் கலந்து கொண்டது பற்றி:
commercial shows, commercial benefits க்கான விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை அநேகர் தவறாகப் புரிந்து கொண்டார்கள்..அரசு விழாவுக்கு ஆட்சேபமில்லை..
I am not comfortable in appearing in public...யார் comfortable ஆக feel செய்கிறார்களோ அவர்கள் போகட்டும்..இதையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்..
10. உங்கள் படங்கள் பற்றிக் கலைஞர் பேசினாரா?
இல்லை. ஷாலினி பற்றிக் கேட்டார்...We should be proud to be in the industry during his period...
Race சம்பந்தப்பட்ட காட்சிகளையும் இடையே காட்டினார்கள்..பேட்டி முழுவதும் தற்காப்பு மற்றும் சின்னதாக இழையோடும் tension கொஞ்சம் தெரிந்தது...பேட்டியெடுத்த பிரியதர்ஷினியும் அவ்வாறே..சில சம்பவங்கள் அவர் சொல்கையில் இவர் இப்படி வெளிப்படையாகப் பேசியது பிறர் விமர்சனத்துக்குக் காரணம் என்று
அப்பட்டமாகத் தெரிந்தது..சின்ன மெலிதான அடிக்குரலில் அவர் பேசிய போது கொஞ்சம் பாவம் look, கொஞ்சம் தைரிய look, I fear no one look கலப்படமாய்த் தெரிந்தது...
நிறைய ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்றைக் கலைஞர் தொலைக்காட்சி செய்துவிட்டது.
(பி.கு: பிழைகள்,சொற்குற்றமிருப்பின் படிப்பவர்கள் பொறுத்துக் கொள்க, பொருட்குற்றமிருப்பின்
அஜீத் பொறுத்துக் கொள்க)
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
Sucess has many fathers; Failure is an orphan னு சொன்னாரே...
Class!
அஜீத்குமாரை எனக்குப் பிடிக்கும் என்றால் அவருடைய வெளிப்படையான பேச்சுக்குத்தான். (மலேசிய கலைவிழாவுக்கு ஒரு நடிகர் இவ்வளவு தரணும்னு கட்டாயப்படுத்தப்பட்ட போது, மாட்டேன், பூகம்பநிதிக்குத்தான் கொடுப்பேன்னார்)
ஆனா, நடிப்பெல்லாம் பிடிக்காது. ஆனா இப்பல்லாம் பேச்சுலயும் காம்ப்ரமைஸ் செஞ்சுக்கறாரோன்னு தோணுது!
அப்டின்னா தப்பில்ல, பொழைக்கத் தெரிஞ்சிக்கிட்டார்னு தான் அர்த்தம்.
வாசகன் சொல்வது சரிதான்..பிழைக்கத் தெரிந்து கொண்டுவிட்டார்..லேட் ஆனாலும் லேட்டஸ்ட்!!
வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.
இது குறித்தான எனது பதிவு இதோ.
http://blog.nandhaonline.com/?p=40
பேட்டியை நீங்களும் ரசித்தீர்கள் என்பது தெரிகிறது. நான் மிகவுமே ரசித்தேன்.
This is not Ajith's first television interview.Already he has given an interview in DD long back .
நந்தா,
உங்கள் இந்தப் பதிவு முன்னே படித்து மறுமொழியும்இட்டிருக்கிறேன்...உங்கள் பதிவில் குறிப்பிட்டது போல் கமல் பேட்டிக்கு அப்புறம் அஜீத் பேட்டி நன்றாக இருந்தது என்பதுதான் என் கருத்தும்.
நன்றி வருகைக்கு..
magesh waran
Oh! That is new information..Thanks for ur visit
ஒரு நடிகனின் பேட்டியை பிரசுரம் செய்வது இப்போது பெண்ணியத்தில் சேர்ந்து விட்டதோ? :P
பேட்டியில் குறையில்லை. அது இந்த வலைப்பூவில் வருவது பிழையாகத் தெரிகிறது. :)
மகேஷ் சொன்னது போல் இது அஜித்தின் முதல் TV பேட்டியல்ல.
//ஒரு நடிகனின் பேட்டியை பிரசுரம் செய்வது இப்போது பெண்ணியத்தில் சேர்ந்து விட்டதோ//
ஏதேது..சினிமாவே பாக்கக் கூடாதுன்னு சொல்வீங்க போலருக்கே...
(பி.கு: நான் பெண்ணியம் பேசுபவள் அல்ல...)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//ஒரு நடிகனின் பேட்டியை பிரசுரம் செய்வது இப்போது பெண்ணியத்தில் சேர்ந்து விட்டதோ
ஏதேது..சினிமாவே பாக்கக் கூடாதுன்னு சொல்வீங்க போலருக்கே...
(பி.கு: நான் பெண்ணியம் பேசுபவள் அல்ல...)//
அப்போ உங்களுக்கு பெண்ணியம் பிடிக்காது, அப்படிதானே?
(கொளுத்தி போடுவோம்ல!)
எனக்கும் மிகவும் பிடித்த பேட்டி அது. நல்லதொரு பதிவு!
வருகைக்கு நன்றி நரேஷ்குமார்..
//அப்போ உங்களுக்கு பெண்ணியம் பிடிக்காது, அப்படிதானே?//
அதைச் சரியான முறையில் செயலாற்றப் பிடிக்கும்..வெறும் பேச்சு பிடிக்காது..
//(கொளுத்தி போடுவோம்ல!)//
பத்திக்க மாட்டோம்ல..
//அப்போ உங்களுக்கு பெண்ணியம் பிடிக்காது, அப்படிதானே?
அதைச் சரியான முறையில் செயலாற்றப் பிடிக்கும்..வெறும் பேச்சு பிடிக்காது..
(கொளுத்தி போடுவோம்ல!)
பத்திக்க மாட்டோம்ல..//
Well said
:) I missed some part of the interview...
Thanks for the post ;)
Post a Comment