Sunday, November 25, 2007

ஒன்றுக்கொன்று துணை


அண்ணன் தம்பி
அக்கா தங்கை
பாசமிகு பந்தங்கள்
பல அடி தள்ளி வை
பத்திரமாய் இருப்பாய்
என்ற
பத்தினித் தங்கம்..

தன்
தமக்கை தமையன்
தயக்கமின்றிப்
பத்தடி தள்ளி வைத்த
இனிய இல்லாள்...

அடுத்த வீட்டுப் பெண்ணிடம்
அழகாய்ச் சொல்கிறாள்
"ஒரு குழந்தை போதுமா?
இன்னுமொன்று வேண்டும்
இனி வருங்காலத்தில்
ஒன்றுக்கொன்று துணை வேண்டாமா?"

தன் மகனிடம்
சொல்கிறாள்
"பாவம் தங்கச்சிப் பாப்பா
பகிர்ந்து சாப்பிடு
பாங்காய்க் கவனி
அண்ணனல்லவா நீ?"

?!

9 comments:

வித்யா கலைவாணி said...

அனுபவக்கவிதையோ! :)

cheena (சீனா) said...

கவிதை சொல்லும் செய்தி கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

பாச மலர் / Paasa Malar said...

வித்யா,

அனுபவந்தான்..என் பாத்திரம்..அடுத்த வீட்டுப் பெண்.

சீனா சார்,

இடுகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

ஹா ஹாஹா

கலக்கல்.

//
cheena (சீனா) said...
கவிதை சொல்லும் செய்தி கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.
//
ரிப்பீட்டேய்

பாச மலர் / Paasa Malar said...

மங்களூர் சிவா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

இரண்டாம் சொக்கன்...! said...

நல்ல கருத்து...நயமாய் சொல்லியிருக்கிறீர்கள்..

சொந்த கதையா...

ஹி..ஹி...

pudugaithendral said...

எப்படீங்க இப்படி?!!!!

ஒரே ஃப்லிங்காயிடுச்சு.

நல்லாச் சொல்லியிருக்கீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\புதுகைத் தென்றல் said...
எப்படீங்க இப்படி?!!!!//
அதானே எப்படிங்க இப்படி எல்லாம்.. :))))

கோபிநாத் said...

அழகான கவிதை..தலைப்பே கவிதை போல இருக்கு ;))