சமீபத்தில் வங்காளதேசத்தில் சிதர் தரும் இடர் பார்க்கையில் பரிதவித்துப் போகின்றோம்...இயற்கையின் சீற்றம் குறித்து முன் நான் எழுதிய கவிதை ஒன்று.
ஆழி யலைகள் உயிர்பெற்று
ஆதி யந்தம் முடித்துவிடும்
நாழி யசைவில் எரிமலைதான்
நஞ்சை புஞ்சை எரித்துவிடும்
ஊழி யணிகள் பூண்டுவிடின்
உயிரும் குடிக்கும் இயற்கையுமே
தாழி யுடைந்த சிதறல்போல்
தழைக்கு மினங்கள் சிதைந்திடுமே...
அழிவின் கதைகள் இயற்கைக்கு
அழகா யெழுதும் மானுடமே!
பழியின் கணக்கு நீண்டுவிடின்
பலியின் கணக்கு முயர்ந்திடுமே
செழிவின் கழிவு அச்சுறுத்த
செத்துப் பிழைக்கும் வழக்குதான்
அழிவின் றிப்பேண் வனமெல்லாம்
அமிர்தம் சுரக்கும் பாலையெல்லாம்.
Tuesday, November 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
விருத்தக் கவிதை அழகாக வ்ருகிறது. ஆனால் நமக்கு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான விஷயம்.
//அழிவின் கதைகள் இயற்கைக்கு
அழகா யெழுதும் மானுடமே!
பழியின் கணக்கு நீண்டுவிடின்
பலியின் கணக்கு முயர்ந்திடுமே//
கவனத்துடன் படிக்க வேண்டிய வரிகள்.
நன்றி வித்யா...கொஞ்சம் தமிழ் இலக்கண விதிகள் கடைப்பிடிக்க வேண்டும்...அவ்வளவே..
Post a Comment