Sunday, November 11, 2007

மெகா சீரியலும் தாய்க்குலமும்

மெகா சீரியல் குறித்துப் பல வித விமர்சனங்கள் அவ்வப்போது பலர் வாயிலாகக் கேட்டறிகிறோம்...பலவிதமான நகைச்சுவைத்துணுக்குகள், பல கொடூரமான தாக்குதல்கள் படித்திருக்கிறோம்...

இத்தனை தாக்குதல் தேவையா என்பது என் எண்ணம்..தாக்குவது என்பது இன்றைய fashion என்றாகிவிட்டது..அதுவும் தாய்க்குலங்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்களே..ஏதோ தந்தைக்குலங்கள் அதைப் பார்க்கவே பார்க்காதது மாதிரி...பதவி ஓய்வுபெற்ற தந்தைக்குலங்களின் முக்கிய பொழுதுபோக்கே இதுதான்..

இத்தொடர்கள் சில மாற்றங்களை நம் பெண்களிடம் கொண்டு வந்துள்ளன..தொடர்கள் ஆரம்பிக்கும் முன் சமையல் முதல் சகல வேலைகளையும் சுறுசுறுப்பாய் முடித்து...2 அல்லது 3 சானல்களில் ஒரே நேரம் மாறி மாறிப்பார்த்து...நடுவில் வரும் தலைப்புச் செய்திகளையும் பார்த்து நாட்டு நடப்பு அறிந்து கொள்கின்றனர்...சீரியல் வம்புகளில் நாட்டம் அதிகமாக ரியல் வம்புகள் தானாகவே இல்லாமல் போகின்றன...
பாமரத்தனம் சற்றே குறைந்து சில நல்ல விஷயங்களைப் புதிதாகக் கற்றுக் கொள்கிறார்கள்.

நான் சமீப காலத்தில் கண்டது..விரும்பிப் பார்த்தாலும் விழுந்தடித்துக் கொண்டு யாரும் பார்ப்பதில்லை ...முன்பெல்லாம் ஒன்றிரண்டு பகுதிகள் கூடத் தவறவிடாமல் பார்த்தவர்கள் இன்று வாரம் ஒரு முறை பார்த்தால் கூட மீதிக் கதை புரிந்துவிடும் என்று இயக்குநர் பார்வை பெற்றுவிட்டார்கள்..

எனவே தாக்கும் வேகத்தைக் கொஞ்சம் மட்டுப் படுத்துவோமே!

4 comments:

Baby Pavan said...

வாங்க வாங்க...கலக்குங்க...வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

பழையபடி வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் வருவது ஒழுங்காகிவிட்டது என்று சொல்லுங்கள்

இம்சை said...

முன்பெல்லாம் ஒன்றிரண்டு பகுதிகள் கூடத் தவறவிடாமல் பார்த்தவர்கள் இன்று வாரம் ஒரு முறை பார்த்தால் கூட மீதிக் கதை புரிந்துவிடும் என்று இயக்குநர் பார்வை பெற்றுவிட்டார்கள்..

நாங்க எல்லாம் 6 மாசம்த்துக்கு ஒரு தடவை பாத்து கதையை தெடிஞ்சிக்கறோம்.

பாச மலர் / Paasa Malar said...

கோவி கண்ணன் சார்...கண்ணீரே இப்போது வருவதில்லை என்றுதான் சொல்கிறேன்...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி..

இம்சைக்கு,

6 மாதம் கழித்துப் பார்த்தால் இப்பொதெல்லாம் தொடரின் தலைப்பு மட்டுந்தான் மாறாமல் இருக்கும்..இவருக்குப் பதில் இவர் என்று கதாபாத்திரங்கள் மாறி..சில சமயம் கதையே வேறாகி விடுகிறது..

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி