Friday, November 23, 2007

முடமாக்கும் மூடநம்பிக்கைதான் பேய்

முருங்கை மரத்துல பேய், வீட்டில் பேய், காட்டில் பேய், மரம் வெட்ட முடியவில்லை, ஏதோ தடுக்கிறது, கட்டிய பாலம் இடிகிறது..ஏதோ தடுக்கிறது...இன்னும் எத்தனை எத்தனை கதைகள், வதந்திகள் இந்த அறிவியல் உலகில் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்...

இதற்கெல்லாம் சற்று மேலே போய் சென்னை புதிய வண்ணாரப்பேட்டையில் ஒரு பள்ளியில் பேய் உலாவுகிறது, பக்கத்திலுள்ள சுனாமிக் குடியிருப்பில் பேய் உலாவுகிறது (அதுவும் சுனாமி ஏற்பட்டு இவ்வளவு காலம் கழித்து..) என்று கதை கட்டியிருக்கிறார்கள்... மற்ற கதைகளை எல்லாம் ஓரங்கட்டி முன்னால் நிற்கும் முட்டாள்தனம்...அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியை சொல்கிறார்...கதவு அடிக்கிறதாம், சன்னல் அடிக்கிறதாம்...திறந்து பார்த்தால் யாரும் இல்லையாம்...என்னத்த சொல்றது போங்க..

பள்ளிக்குத் தற்காலிகமாக விடுமுறை விடப்பட்டுள்ளது...திரும்பவும் திறக்கும் போது எத்தனை மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கப்போகிறார்களோ..எத்தனை பேர் பயந்து கொண்டே வரப்போகிறார்களோ..பாவம் அந்தக் குழந்தைகள்..என்னதான் வதந்தி உண்மையில்லை என்று கூறினாலும் எத்தனை பேர் இதை நம்பப் போகிறார்கள்?

"வேப்பமர உச்சியில் நின்று பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க
உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே..."

என்று கூறவேண்டியவர்களே பயந்து போனால் மாணவர்கள் நிலைதான் என்ன?

முன்னேற்றத்தை முடமாக்கும் மூடநம்பிக்கைதான் விரட்ட வேண்டிய பேய் என்று உணர இன்னும் எவ்வளவு காலந்தான் ஆகும்?

7 comments:

Baby Pavan said...

முன்னேற்றத்தை முடமாக்கும் மூடநம்பிக்கைதான் விரட்ட வேண்டிய பேய் என்று உணர இன்னும் எவ்வளவு காலந்தான் ஆகும்?

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்.....

Baby Pavan said...

அக்கா இன்னைக்கும் நான் தான் 1ச்ட்

வித்யா கலைவாணி said...

ஆகா, அக்கா பேய்க் கதையெல்லாம் சொல்றாங்க. பயமா இருக்கு. ஆனாலும் நல்லா தான் இருக்கு.

Ungalranga said...

நீங்கள் சொல்வது சரிதான்.
இனி அந்த பள்ளியில் மாணவர்கள் எப்படி படிக்க வருவார்கள்?
இப்படி படித்த ஆசிரியர்களே பயந்தால் ...(பயமுறுத்தினால்)அந்த மாணவர்கள் எப்படி படிப்பார்கள் ..
இன்னும் சீக்கிரத்தில் அங்கு நிலைமையை சரி செய்ய வேண்டும் என்பது என் ஆவல்.

குட்டிபிசாசு said...

பேய் எல்லாம் சும்மா பொய்! நம்பாதீங்க. ஆனால் பிசாசு இருக்கு, இப்ப நான் இல்ல...!!

RATHNESH said...

"பேய் இருக்கிறதோ இல்லையோ பயம் இருக்கிறது" என்று புதுமைப்பித்தன் ஒரு கதையில் சொல்லி இருப்பார். அது தான் ஞாபகம் வருகிறது. கடவுள் நம்பிக்கை இருக்கும் வரை பேய் நம்பிக்கையும் இருந்தே தீரும்.

பாச மலர் / Paasa Malar said...

Baby Pavan ने कहा…
//அக்கா இன்னைக்கும் நான் தான் 1ச்ட்//

நீங்க எப்பவும் 1ஸ்ட் தான்

வித்யா கலைவாணி ने कहा…
//ஆகா, அக்கா பேய்க் கதையெல்லாம் சொல்றாங்க. //

கதையா மட்டும் இருந்தா நல்லாருக்குமே..

ரங்கன் ने कहा…
//இன்னும் சீக்கிரத்தில் அங்கு நிலைமையை சரி செய்ய வேண்டும் என்பது என் ஆவல்.//

தற்போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சமாதானப் படுத்தப்பட்டு..பள்ளி திறக்கப் போகிறார்கள்..இத்தகைய வதந்தி பரப்புவோருக்குக் கடுந்தண்டனை என்று காவல்துறை எச்சரித்துள்ளது..

குட்டிபிசாசு ने कहा…
//ஆனால் பிசாசு இருக்கு, இப்ப நான் இல்ல...!!//

பெயரளவில்தானே?

RATHNESH ने कहा…
//"பேய் இருக்கிறதோ இல்லையோ பயம் இருக்கிறது" என்று புதுமைப்பித்தன் ஒரு கதையில் சொல்லி இருப்பார்.

நீங்கள் சொல்வது உண்மைதான்..

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி..//