Monday, November 12, 2007

மதம்




அன்று
மனிதனைக் காக்க
வகுத்த நியதி..
இன்று
மனிதன் இதனைக்
காக்க வேண்டிய(து) விதி.

மக்களை நெறிப்படுத்தி
மிதவாதம் மீட்பது நோக்கம்..
அவரை மாக்களாக்கி
உயிர் போக்கித்
திசை திருப்பும் தீவிரவாதம்!

இறை போதிக்க வந்தது
இவர்தம் நிறை குறை
சோதித்து நிற்கிறது.

நற்புவியில் நல்லிணக்கம்
நல்க வந்தது
பிணக்கம் பெருக்கிப்
பிணங்கள் நிறைக்கிறது.

கலையாய் வந்தது
கலைத்து நிற்கிறது.
செதுக்க வந்தது
சிதைத்து நிற்கிறது.

பூக்களின் பொய்கை
இதுவென நினைக்க..
பொய்களே இங்கு
பூக்களாய்ப் பூக்க..

குளிர வேண்டிய மனங்கள்
கனத்துக் கிடக்கின்றன.
நிமிர வேண்டிய தலைகள்
குனிந்து கிடக்கின்றன.

மனிதம் மருவி
மதம் என்று ஆனதோ?
இன்று மதம் பிடித்து ஆ(ட்)டுதோ?

5 comments:

Ungalranga said...

// கலையாய் வந்தது
கலைத்து நிற்கிறது.
செதுக்க வந்தது
சிதைத்து நிற்கிறது //

!!!......சூப்பர் கவிதை ....!!!
இது போல மேலும் பல எழுத வேண்டுகிறேன்.
இப்படிக்கு
உங்கள் ரங்கா
(பி.கு)namakkal shibi-in ஒரே சிஷ்யன்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ரங்கன்..

Unknown said...

அலசல் பார்வையோடு ஓர் அருமையான கவிதை!

இரண்டாம் சொக்கன்...! said...

பிணக்கம் பெருக்கிப்
பிணங்கள் நிறைக்கிறது.
கலையாய் வந்தது
கலைத்து நிற்கிறது.
செதுக்க வந்தது
சிதைத்து நிற்கிறது.

....நைஸ்....

pudugaithendral said...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த
மதுரைக்காரவுங்க வாயில(கையில்) தமிழ் விளையாடறது அதிசயமில்லை.

நல்லா இருக்குங்க.