Saturday, November 17, 2007

மாறி வரும் மதுரை மாநகர் - 2



மதுரையின் சிறப்புகள் பல அனைவரும் அறிந்ததே...தென் தமிழ்நாட்டின் தலைநகரம், தூங்கா நகரம், கிழக்குப் பகுதியின் ஏதென்ஸ், கோவில் நகரம் என்ற பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற நகரம்.


இரண்டாவது தலைநகரம் என்பது தேவையில்லை என்று தற்சமயம் வாதிட்டாலும், நிர்வாக சவுகரியங்களுக்காகவும், செயலாக்கத் திட்டங்களை விரிவு மற்றும் விரைவு படுத்துவதற்காகவும் என்று பல காரணங்களுக்காக இன்னொரு தலைமையகம் தேவை என்ற நிலை குறுகிய காலகட்டத்துக்குள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் ஏராளமாய் உள்ளன. அந்த நிலை ஏற்படும்போது மதுரை நகரின் பெயர் முன்னிலை வகிக்கும்.


இராமர் சேது முனையல், உள்மாநில, வெளிமாநில அளவில் அநேகப் பெரு நகரங்களை இலகுவாகச் சென்று சேரும் வண்ணம் புவியியல் அமைப்பு மற்றும் போதுமான போக்குவரத்து வசதிகள்,(இதனால்தானே அரசியல் முதல் சினிமா வரை அனைத்து மாநாடுகளுக்கும் மதுரை தமுக்கம் மைதானம் களமாகிறது..) கூப்பிடு தூரத்தில் கவின்மிகு சுற்றுலா மையங்கள்,வழிபாட்டுத் தலங்கள், தரமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உயர்நீதிமன்றக் கிளை, விரைவில் அமையவிருக்கும் மண்டலக் கடவுச் சீட்டு அலுவலகம்..சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரின் தேவைகளும் பூர்த்தியாக்கும் விலைவாசி நிலவரம், இன்னும் இன்னும்...


முத்தாய்ப்பாக ஒரு செய்தி...JNNURM - Jawaharlal Nehru National Urban Renewal Mission மதுரைக்கு அளிக்கவிருக்கும் பல ஆயிரம் கோடிகள் ...


மதுரைவாசி என்பதால் மட்டுமல்ல நியாயமான பல காரணங்களுக்காகவும் மதுரை மாநகர் இரண்டாவது தலைநகரமாகும் நன்னாளை ஆவலுடன்

எதிர்பார்க்கிறேன்..

- மலர்.













9 comments:

Baby Pavan said...

வாங்க வாங்க...கலக்குங்க...வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி Baby Pavan..

வித்யா கலைவாணி said...

அக்கா வாங்க, தமிழ்மணத்திற்கு நல்வரவாகட்டும்.,

வித்யா கலைவாணி said...

//Baby Pavan said...வாங்க வாங்க...கலக்குங்க...வாழ்த்துக்கள்//
ஆகா இந்த குட்டி இம்சை எங்க போனாலும் வருதே? ஆகா இப்பவே கண்ணைக் கட்டுதே!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கலைவாணி..

TBCD said...

மதுரையா...வாங்க..வாங்க...

நம்ம ஊர் மாறுதா....எங்கங்க..இப்பவே போக்குவரத்து நெரிசல்..கண்ணைக் கட்டுதுன்னு எங்க அப்பா புலம்புறாரு.....

பாச மலர் / Paasa Malar said...

tcbd sir..வாகனங்கள் அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது உண்மைதான்...கோவிலைச் சுற்றித்தான் சாலைகளை அகலப்படுத்தும் வாய்ப்பே இல்லையே..மற்ற பகுதிகளில் முன்னை விட முன்னேறித்தான் உள்ளது...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி

இராம்/Raam said...

ஓ... நீங்களும் மதுரைதானா... :)

சூப்பர்

பாச மலர் / Paasa Malar said...

இராம்,

தங்கள் வருகைக்கு நன்றி