மாற்றம் பலம்
நம்பிக்கை சேர்கையில்
மாற்றம் பலவீனம்
நம்பிக்கை சோர்கையில்
மாற்றம் மலைப்பு
வளரும் பிள்ளை பார்க்கையில்
மாற்றம் சலிப்பு
தோற்க நேர்கையில்
மாற்றம் பூரிப்பு
வெற்றிவாகை சூடுகையில்
மாற்றம் இயல்பு
மணவாழ்க்கை காண்கையில்
மாற்றம் கொடுமை
உறவொன்று மரிக்கையில்
மாற்றம்
செய்யாத தவறுக்கான
அனாவசிய தண்டனை
மொழியின் எழுத்துகள்
சிதையில் சிதைகையில்...
Wednesday, October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கவிதையை படிச்சி முடிச்சிட்டு அந்த படத்தை பார்க்கும் போது சிரிப்பு தான் வருது..;)
கவிதை நல்லாயிருக்கா ;)
சிறப்பான கவிதை.
இறுதியில் சொல்லியிருப்பது அழுத்தம்.
உண்மை
மாற்றம் கொடுமை
உறவொன்று மரிக்கையில்
அழுத்தமான வரிகள்!!
Post a Comment