மயிலைப் பார்த்து
'வான்கோழியே'
என்று விளிக்குமாம்
வான்கோழி.
வானவில்லைப் பார்த்து
'மயக்கும் மஞ்சள்''
என்று வர்ணிக்குமாம்
காமாலை பூத்த கண்கள்.
மணவீட்டில் மணமகனை
'உயிரில்லாப் பிணம்'
என்று கூறுமாம்
பொறாமையில் குமுறுகின்ற மனம்...
மனித மனங்களை
விமர்சிக்கும் பரிகசிக்கும்
அன்றாடம் ஆயிரம்
மனித நாக்குகள்...
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு பாதையிலும்
வேகத்தடைகள்...
விமர்சனத்தை விழாவாக்கிப்
பரிகாசத்தைப் பரிசாக்கிக்
குதூகலத்துடன் கொண்டாடு...
தடைகளைப் படிகளாக்கி
வெற்றியோடு முன்னேறு....
வானம் என்ன
பிரபஞ்சமே வசப்படும்!
Monday, October 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு பாதையிலும்
வேகத்தடைகள்...
விமர்சனத்தை விழாவாக்கிப்
பரிகாசத்தைப் பரிசாக்கிக்
குதூகலத்துடன் கொண்டாடு...
தடைகளைப் படிகளாக்கி
வெற்றியோடு முன்னேறு....
வானம் என்ன
அண்டமே வசப்படும்!//
அருமை பாசமலர்.
அட அட தூள் போங்க ;))
வரிகளும்...அதைவிட லேபிளும் ;))
ஆமா எங்கிட்டு போயிருந்திங்க !?
//விமர்சனத்தை விழாவாக்கிப்
பரிகாசத்தைப் பரிசாக்கிக்
குதூகலத்துடன் கொண்டாடு..//
புத்துணர்ச்சி தரும் வரிகள் மலர்..
எங்கே காணாம போயிடறீங்க... அடிக்கடி எழுதுங்க
அழகான வார்த்தை ஜாலங்களுடன் வந்திருக்கிற அற்புதமான கவிதை
வாழ்த்துக்கள்
நன்றி ராமலக்ஷ்மி....விடுமுறையில் இந்தியா வந்திருந்தபோது இந்த முறை தொடர்பு கொள்ளமுடியாமல் போய்விட்டது...
நன்றி கோபி, மங்கை....
ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தேன்...'சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல் வருமா' என்று நம் ஊரை மலைத்து மலைத்து ரசிக்கையில்...
பயணங்களுக்கு மத்தியில்........வலைப்பக்கத்துக்கு வர முடியாமல் போய்விட்டது......உங்கள் பாராட்டுக்கு நன்றி...
நன்றி சுந்தர்...
வரும் முன் ஒரு மடல் இட்டிருந்தால் நானே நினைவாக அழைத்திருப்பேனே! சரி அடுத்தமுறை பேசலாம்:)!
Post a Comment