ஒருங்குறியில் (Unicode) ஏற்கனவே உள்ள கிரந்த /சமஸ்கிருத எழுத்துகள் அனைவரும் அறிந்தவையே. ஓரளவு பலராலும் உபயோகப்படுத்தக்கூடிய எழுத்துகளான ஜ, ஷ, ஸ போன்றவை தவிர இன்னும் நாம் பார்த்தே அறியாத சில எழுத்துகளை ஒருங்குறியில் சேர்க்கும் முயற்சி முழுமை பெற்று இன்னும் இரண்டு நாட்களில் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. சத்தமில்லாமல் ஓர் அநியாயம் நடக்கவிருக்கிறது...
திரு. சர்மாவின் இது குறித்த பரிந்துரை இந்தச் சுட்டியில் காணவும்....
http://www.filefactory.com/file/b3h848d/n/Extended_Tamil_proposal_-_Sharma_1_.pdf
இந்தச் சுட்டி சொடுக்கினால் இதற்கான ஆதாரங்கள் உங்களுக்குப் புரிய வரும்.
http://www.archive.org/stream/bhojacharitrama00sastgoog#page/n30/mode/1up
http://www.infitt.org/pressrelease/UTC_Gantha_Indic_Characters_draft1.pdf
http://www.infitt.org/pressrelease/UTC_Unicode_Grantha_Letters_SMP.pdf
இதைத் தடுத்து நிறுத்த நம்மால் ஆன முயற்சி..நம்முடைய
எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான்...
மேலும் பல கிரந்த எழுத்துக்களைத் தமிழ் அட்டவணையில் இணைக்கக் கோரும் கோரிக்கையை, ஏற்க மறுக்கக் கோரும் தமிழ் அறிஞர் / இந்திய அறிஞர் பட்டியலில் இடம் பெற கீழ்க்கண்ட முகவரிகளில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அஞ்சல் அனுப்பவும்.
unicore@unicode.org,
x3l2@unicode.org
rick@unicode.org
ed@infitt.org
kaviarasan@yahoo.com
smaniam@pacific.net.sg
உடனடியாக அஞ்சல் அனுப்பவும்...
Sunday, October 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
சரியாப் புரியலைங்க. :(
வாசிச்ச வரையில் சில கிரந்த எழுத்துக்களை தமிழ் யுனிகோடில் இணைத்தல் என்ற அறிவிப்பு தவிர்த்து, தமிழுக்காக வழங்கப்பட்ட யுனிகோடின் இடங்களை நிரப்புதலுக்கான முயற்சியா இது... அல்லது கிரந்த எழுத்துக்கள் தமிழென்று நிறுவும் முயற்சியென்று சொல்கிறீர்களா?
இதன் சாதக பாதகங்கள் என்ன.. விளக்கவியலுமா?
மன்னிக்கவும் சென்ஷி...
எழுதிய அவசரத்தில் சில குறிப்புகள் தெளிவின்றி இருக்கின்றன...
இது தொடர்பாக நான் நேற்றிரவு படித்த அஞ்சலின் சில வரிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்....
எனக்குத் தெரிந்து இதில் எந்தச் சாதகமும் இருக்க வாய்ப்பில்லை....
பாதகம்..எதற்கான முயற்சி என்றாலும் இது தேவையற்ற ஒன்று...இன்னும் குழப்பத்துக்குதான் வழிவகுக்கும்...மேலும் மேலும் புதிய எழுத்துகள் சேர்வது, அதிலும் நாமே அறியாத எழுத்துகள் சேர்வது பாதகம் என்பது என் எண்ணம்...
*************************************************
...மிகப்பயங்கரமான மோசடி நாம் அனைவரும் இணையத்தில்
பயன்படுத்தும் யுனிகோடுவை சமசுக்கிருதமயமாக்கும் மோசடி. சிறீரமண சர்மா
என்பவர், தற்போது இருக்கும் தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற சமசுக்கிருத எழுத்துக்களையும்
சேர்க்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று குழம்புகிறீர்களா?
அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே யுனிகோடுவில் சேர்த்தாயிற்று. தற்போது சேர்க்கப்பட
இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட இருக்காத பிற சமசுக்கிருத எழுத்துக்களாகும்.
யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக யாரும் அறியாமல் எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும்
தமிழோடு சேர்த்து விட்டு, அதனை "Extended Tamil" என்று ஆக்கிவிட்டால் தமிழர்களும், “ஆகா தமிழ் என்று இருந்தது
இப்போது Extended என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வதால் தமிழ் வளர்ச்சியைத்தானே காட்டுகிறது” என்று
மகிழ்வார்கள் அல்லது மயக்கிவிடலாம் என்ற குறிக்கோளோடு இந்தப் படுகொலை திட்டமிடப்பட்டுள்ளது
தமிழ் யுனிகோடுவை இப்பொழுதுதான் தமிழக அரசு அங்கீகரித்தது
என்பது கவனிக்கத்தக்கது. அணிமைய செம்மொழி மாநாட்டின் போதுதான் தமிழக அரசு அங்கீகரிப்பை
வெளியிட்டது. ஆனால் அது முடிந்த 3 மாதங்களிலேயே யுனிகோடுவை சமசுக்கிருதமயமாக்கும்
முயற்சிகள் ஏறத்தாழ வெற்றிபெற்ற நிலையில் இருக்கின்றது கவலைப்பட வைக்கும் விதயமாகும்.
யுனிகோடு சேர்த்தியத்திற்கு மறுப்பினை தமிழக அரசாங்கம் சொல்லக் கடைசி நாள் 25 அக்டோபர் 2010.
அதற்குள் மறுப்பு போய்ச் சேரவில்லை என்றால் தமிழ், நீள்தமிழ் ஆகி, Ja Jaa Ju Juu போன்ற எழுத்துக்கள்
இருந்தால் மட்டும் பற்றாது என்று எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் உள்வாங்கி அழியத் தொடங்கும்
அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்.
.............
தமிழக அரசால் வளர்க்கப்பட்ட யுனிகோடு, அரசு அறியாமலேயே அழியத் துவங்குதற்கு இன்னும் இருக்கின்ற நாள்கள் இரண்டு மட்டுமே.
********************************
இது உங்களுக்கு வந்த தொடர் மின்னஞ்சல் என்றே நினைக்கிறேன்
இது குறித்து முழு விபரங்களும் தர வேண்டுகிறேன்
//யுனிகோடு சேர்த்தியத்திற்கு மறுப்பினை தமிழக அரசாங்கம் சொல்லக் கடைசி நாள் 25 அக்டோபர் 2010.//
இப்படி யார் சொன்னார்கள். எங்கு வாசித்தீர்கள்
நன்றி புருனோ
தமிழ் உலகம் குழுமத்தின் மூலமே இவ்விபரங்கள் அறியப் பெற்றேன்...17 பக்கங்கள் கொண்ட pdf கோப்பு ஒன்றும் உள்ளது....சர்மா அவர்களின் proposal பற்றிய குறிப்புகள் கொண்டது...
அதை இங்கே இணைக்க முடியவில்லை...சுட்டியும் அக்குழும உறுப்பினராக இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்.
என்வே அந்த pdf கோப்பை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளேன்...
அதை தரவிறக்கி வேறு ஏதாவது ஒரு இலவச file share(like esnip,googledocs) தளங்களில் ஏற்றி சுட்டி தரலாமே... உங்களுக்கு அதை செய்வது எப்படி என்று தெரியாவிட்டால் என்னுடைய மின்னஞலுக்கு அனுப்புங்க நான் அதை ஏற்றி சுட்டி தருகிறேன்...என்னுடைய மின்னஞ்சல் முகவரி sjsanthose@gmail.com
நன்றி சந்தோஷ்...உங்களுக்கு அனுப்பியுள்ளேன்..தயாரானதும் சுட்டி அனுப்பி வைக்கவும்...
மீண்டும் நன்றி சந்தோஷ்...நீங்கள் தந்த சுட்டியைப் பதிவில் இணைத்துவிட்டேன்..
Post a Comment