Wednesday, December 12, 2007

பாம்புகளுடன் பழகலாம் வாங்க..!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற வழக்கைப் பொய்யென்று நிரூபித்திருக்கிறார் ஒரு பேராசிரியை..தேனியைச் சேர்ந்த திருமதி அருணா, பாம்புப் பண்ணையே வீட்டில் வைத்திருக்கிறார். பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் வாங்கியுள்ளார். சிறு வயதிலிருந்தே பாம்புகள் பற்றிய செய்திகளால் ஈர்க்கப்பட்ட இவர் அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து,ப‌ல‌ உண்மைக‌ள் அறிந்து இன்று தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இவற்றைப் பற்றி விளக்கியும் வருகிறார்.

அவர் சொல்வது:

பாம்புகள்தான் நம்மைப் பார்த்துப் பயப்பட வேண்டும். அவற்றைப் பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை என்ற செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். அவற்றின் இடத்தில் நாம் வாழ்கிறோம். அதை உயிரினமாக நாம் மதிக்க வேண்டும். நம் வாழ்க்கை முறைக்கும், நம் மண்ணுக்கும் பாம்புகள் மிகவும் அவசியம் என்கிறார்.

நான்கு வ‌கைப் பாம்புக‌ள்தான் விஷ‌த்த‌ன்மை கொண்ட‌வை..ம‌ற்ற‌ எல்லாம் விஷ‌த்த‌ன்மையில்லாதவை..நாம் கெடுத‌ல் செய்தால்தான் அவை ந‌ம்மைக் க‌டிக்க‌ வ‌ரும். நாம்தான் அவ‌ற்றைத் தேவையில்லாமல் துன்புறுத்துகிறோம், ப‌ய‌ப்ப‌டுகிறோம் என்கிறார்.

இவ‌ருடைய‌ க‌ண‌வ‌ரும் இதைப் புரிந்து கொண்டு இவ‌ருக்கு உறுதுணையாக‌ நிற்கிறார்.இவ‌ருடைய‌ மாண‌விய‌ரும் இவ‌ரிட‌ம் ப‌யிற்சி மேற்கொண்ட‌ பின் பாம்புக‌ளோடு தோழிய‌ர் போல‌ப் ப‌ழ‌கி வ‌ருவ‌தாக‌வும், ஒரு ஆப‌த்தும் இல்லையென்றும் கூறுகின்ற‌ன‌ர். "ப‌ழ‌கலாம் வாங்க‌", என்று சிவாஜி ஸ்டைலில் ந‌ம்மையும் அழைக்கிறார்க‌ள்.

பாம்பு என்ற‌ பெய‌ரைக் கேட்டாலே குலை ந‌டுங்கும் என‌க்கு, திருமதி. அருணா மற்றும் மாணவியர் பாம்புக‌ளைக் க‌ழுத்து ம‌ட்டும் கைக‌ளில் விளையாட‌ விட்ட‌ காட்சி அச‌ர‌ வைத்தது.

தான் ம‌ட்டும‌ல்லாம‌ல், த‌ன் மாண‌வியரும் ச‌க‌ஜ‌மான‌ நிலையில் பாம்புக‌ளுட‌ன் ப‌ழ‌கி வ‌ரும் நிலைமையை உருவாக்கி, இன்னும் பலரையும் இது போல மாற்றக்கூடிய தன்மையும் உறுதியும் கொண்ட‌ திரும‌தி. அருணா உண்மையிலேயே பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்தான்.


ந‌ன்றி: ச‌ன் டிவி செய்திக‌ள்

17 comments:

நானானி said...

அருணா பற்றிய செய்தியை நானும் பார்த்தேன். அவள் என்னோடு பாளையங்கோட்டை பள்ளியில் படித்தவள். அவள் தந்தை விலங்கியல் பேராசிரியர். வீடெங்கும் பாம்புகளாக ஊர்ந்துகொண்டிருக்கும்
அவரிடமிருந்துதான் பாம்பென்றால் நடுங்காதவளாக வளர்ந்து இன்று ஒரு நாகதேவதையாக விளங்குகிறாள். அவளுக்கு என் வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

நானானிக்கு நன்றி..உண்மையிலேயே உங்கள் தோழியின் தைரியம் வியக்க வைக்கிறது..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது பழக்கம் சம்பந்தமான விடயம்..
நமது நாடுகளில் நம்மை வெகுவாகப்
பயப்படுத்திப் பழக்கி விட்டார்கள்.
ஆனால் ஐரோப்பிய,அமெரிக்க நகரங்களில் லட்சக்கணக்கானோர்
பாம்பை தங்கள் செல்லப் பிராணியாக
வளர்க்கிறார்கள். அவற்றில் இந்திய நாகங்களும் அடக்கம்.
அத்துடன் இங்கே தொலைக்காட்டி அரங்கில் சில நிகழ்சிகளில் இந்தச் செல்லப்பிராணிகள் காட்சி அரங்காக
மாறும்போது, சாதாரண பார்வையாளர்கள் அதைச் சர்வசாதாரணமாக தொட்டு தங்கள் உடலில் ஊரவிடுவதைக் கண்டுள்ளேன்.
ஏன் நம்நாட்டு குறவர் குடும்பத்துப் பிள்ளைகள் பாம்புடன் தான் விளையாடுகின்றன.
முதல் பாடசாலைகளில் உயிரியல் வகுப்பு ,சுற்றுச் சூழல் பற்றிய வகுப்பில் பாம்புகள் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும். பாட்டி கதைகளை மூட்டை கட்டி , இயல்புகளை விளக்கினால் வளரும் போது அவர்கள்
அனுசரிக்கப் பழகுவார்கள்.
அப்படியான வாய்ப்பு இருக்கா??இன்னும் நாக தேவதை, நாகம் பழிவாங்கும் போன்ற கதைகளைக் கூறினால் பயம் தான் வளரும்...
நீங்கள் முடிந்தால் யுருயூப் சென்று
பாம்பைச் செல்லப் பிராணியாக வளர்ப்
பவர்களைப் பாருங்கள்.
நம் நாட்டில் அருனாவின் துணிவு பாராட்டுக்குரியதே...
அவர் பெற்றோரின் தெளிவே இதற்குக் காரணம்...
என் பதிவில் பாம்பு தண்ணீர் குடிக்குமென்பதற்கு சாட்சியான காட்சி போட்டேன் பார்க்கலாம்.
http://johan-paris.blogspot.com/2007/10/blog-post_12.html

பாச மலர் / Paasa Malar said...

நீங்கள் சொல்வது சரிதான்...பழக்கமும் சூழலும் காரணம்..இந்த பயத்தைப் பிறரிடம் போக்க வேண்டும் என்று அருணா முயன்று வென்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது..

pudugaithendral said...

அருணாவிற்கு வாழ்த்துக்கள்.

Divya said...

அருணாவின் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்,
அதனை பதிவிட்ட உங்களுக்கு நன்றி பாச மலர்!!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி புதுகை, திவ்யா...

cheena (சீனா) said...

பேராசிரியர் அருணா - தேனி அருகே உள்ள தாமரைகுளத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பணியாற்றும் விலங்கியல் பேராசிரியரா ?? அவரைச் சந்த்தித்ததுண்டு.

G.Ragavan said...

பா பா பா பா பா பா பாம்பு..... பயம்மா இருக்கே. மலேசியால பாம்புக்கோயில்னு ஒரு புத்தரு கோயில் இருக்கு. பயந்துக்கிட்டேதான் போனேன். முந்தி அளவுக்குப் பாம்புக இல்லையாம். அப்பாடி தப்பிச்சேன்.

சிங்கப்பூர்ல ஒரு அக்கா பாம்பை மேல மாலையாப் போட்டு சிவபெருமானியா நின்னாங்க. தொடக்கூடப் பயம்.

இப்பிடி இருக்குறப்போ பாம்போட நெருங்கி நட்போடப் பழகுறாங்கன்னா..பாராட்டித்தான் ஆகனும். என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

பாச மலர் / Paasa Malar said...

சீனா சார்,

அதே அருணாதான்..

ராகவன்,

எனக்கும் பாம்பென்றாலே பயந்தான்..சினிமாவில் பார்த்தால் கூடக் காலை நாற்காலியில் தூக்கி வைத்துக் கொள்வேன்..

வருகைக்கு நன்றி...

PRABHU RAJADURAI said...

பேராசிரியை அருணாவைப் பற்றி குறிப்பிட்ட தாங்கள் அவரது தந்தையான பாளை சவேரியார் கல்லூரி பேராசிரியர் பாம்பு ராஜேந்திரனைப் பற்றி குறிப்பிடாமல் விடுவது உத்தமம் இல்லை!

நம் நாட்டு பாம்புகள் என்ற அருமையான் புத்தகம் எழுதியவர். அதிலுள்ள விபரங்கள் தேவையானவை என்றாலும், புகைப்படங்கள்தான் கறுப்பாக இருக்கும்...நல்ல அருமையான புகைப்படங்களுடன் அந்த புத்தகத்தை அருணா அவர்கள் மறுபதிப்பு செய்தால், பாம்புகளைப் பற்றிய தவறான தகவல்களை போக்குவத்ற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பள்ளி நாட்களில் பாளையில் அவர் அமைத்திருந்த பாம்பு பண்ணைக்கு நான் சென்ற நினைவு உள்ளது.

சென்னை பாம்பு பண்ணையிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார் என நினைக்கிறேன்...ரொமுலஸ் விட்டேகரும் இவரும் இணைந்து பணியாற்றினார்களா என்பது தெரியாது

PRABHU RAJADURAI said...

அருணாவின் சகோதரர் நல்ல ஹாக்கி வீரர். தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றிய இவர்தான்...அக்கம் பக்கம் பாம்பு என்றால் முதலில் நிற்பார்...

பாச மலர் / Paasa Malar said...

பிரபு ராஜதுரை சார்

அருணாவின் தகப்பனார் குறித்து அந்தச்செய்தியில்கூறப்படவில்லை..
குடும்பமே பாம்புகளுடன் பழகி வந்திருக்கிறார்கள்..விவரங்களுக்கு நன்றி..

வவ்வால் said...

எனக்கு ஒரு சந்தேகம் நீங்க பாசமலரா இல்லை பாம்பாட்டி மலரா? அது என்ன இப்படி ஒரு பதிவு, நல்லா கிளப்புறாங்கையா பீதிய.....

அவன் அவன் வவ்வாலுனு சொன்னாலே பீதில பேதியாகுறாங்க வலைப்பதிவுல நீங்க என்னடானா பாம்புக்கூட பழக வர சொல்றிங்க... ஆனாலும் ரொம்ப நக்கலு தான்....

எனக்கு ஒரு டவுட்டு... பாம்புக்கு பால் வார்த்தா அது திரும்ப வந்து கடிக்குமாம், உங்களுக்கு பின்னூட்டம் போட்ட திரும்ப வந்து பின்னூட்டம் போடுவிங்களா... (ஆத்தாடி அதுக்குனு பாம்ப எடுத்து வந்து கடிக்க விடப்புடாது சொல்லிட்டேன்)

பேச்சு பேச்சோட தான் இருக்கணும்!

பாச மலர் / Paasa Malar said...

வவ்வால் சார்,

வருகைக்கு நன்றி..எனக்கிருக்க பயத்துல நானாவது பாம்பை எடுத்து விடுறதாவது..

Tech Shankar said...

பாம்பென்றால் படையே நடங்கும். இதிலே நான் எங்கே? நீங்கள் எங்கே..
வாங்க பழகலாம் - சூப்பர்ஸ்டார் சொன்னாரு.
ஆனால் பாம்புடன் பழக அவரு சொல்லலையே

Unknown said...

மிகவும் சருயாகச் சொன்னீர்கள்
பேராசிரியர் இராஜேந்திரனின்
"நம் நாட்டு பாம்புகள்"புத்தகம் ஙைத்திருந்தேன் கானாமல் போய்விட்டது யாரோ நல்லவர்கள் எடுத்துவிட்டார்கள் இனையத்தில் தேடியும் கிடைக்கவில்லை!
பேராசிரியர் அருனா அம்மாவை அந்த புத்தகத்தை புதிப்பிக்க வேண்டுகிறேன்!