Monday, June 18, 2012

நிச்சலனமற்ற பொழுதுகளில்..

வரவு செலவுகள்
பார்த்தான பின்

இன்ப துன்பங்களில்
தோய்ந்தான பின்

களித்துக் களைத்து
ஓய்ந்தான பின்

மீதம் இருப்பது
நிச்சலனமற்ற
இன்றையப் பொழுதின்
இந்தக் கணம் மட்டுமே...

நிச்சலனமற்ற பொழுதுகளில்
கரைகின்ற வாழ்க்கை
சில சமயங்களில்
பிடித்துத்தான் போகிறது!

12 comments:

இராஜராஜேஸ்வரி said...

நிச்சலனமற்ற
இன்றையப் பொழுதின்
இந்தக் கணம் மட்டுமே..
நிச்சயமானது !

ராமலக்ஷ்மி said...

உண்மைதான் மலர். நல்ல கவிதை.

ஜீவி said...

அந்த நிச்சலனமும் பெயருக்கென்று ஆகி
அந்தக் கணமும் மற்ற நினைவுகள் நினைவில் புரண்டு சலனப்படுத்தாமல் இல்லை. இந்த நேரத்து இந்த சிந்தனை தான் என்று வரையறைப்படுத்தும் பயிற்சி பெற்றவர்கள்...

பாக்கியவான்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்று 20.06.2012 வலைச்சரத்தில் தங்களின் இந்தப் படைப்பைப்பற்றி, செல்வி நுண்மதி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

பாச மலர் / Paasa Malar said...

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...ஒரு கணம் நிஜமாகி மறுகணம் மறைந்து மீண்டும் சலனம்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ஜீவி..அந்தப் பயிற்சியும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டியது அவசியம்...அல்லவா?

பாச மலர் / Paasa Malar said...

வருகைக்கு நன்றி கோபி...

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி வை. கோ அவர்களுக்கு...நீங்கள் சொன்னதும்தான் நான் பார்த்தேன்..

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்...மின்னஞ்சல் subscription இணைத்துள்ளேன்..