Wednesday, August 24, 2011

தங்க நிமிடங்கள்



காதல் கைகளின்
உயிர் தொடும் ஸ்பரிசம்

குழந்தைக்காய்த் தாய் மார்
பால் சுரக்கும் தருணம்

உலகத்து இயற்கையின்
மொத்த அழகும்
உச்சி முதல் பாதம்வரை
இட்டுச் செல்லும் பட்டு முத்தம்

வாழ்வின் சுகங்கள்
வழித்துத் தரும் வரம்

வாழ்வின் சோகங்கள்
துடைத்து எறியும் தவம்

சத்த யுத்தத்தின் இடையே
மௌன மோன மயான அமைதி....

சுகமோ சுகம்
இதமோ இதம்

குற்றாலச் சாரலில்
நனையும் தங்க நிமிடங்கள்..

9 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

குற்றாலச் சாரலில் நானும்..
நனைந்தேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

இயற்கையின் ஒவ்வொரு அசைவுமே அழகுதான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சத்த யுத்தத்தின் இடையே
மௌன மோன மயான அமைதி....//:)அப்படியே அந்த நிமிடத்துல இருக்கிறமாதிரி இருக்கு..

சிநேகிதன் அக்பர் said...

அருமை.

பாச மலர் / Paasa Malar said...

குணசீலன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....இயற்கையின் எல்லா அம்சங்களும் அழகுதான்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி, நன்றி கயல்...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி அக்பர்..

ராமலக்ஷ்மி said...

தங்க நிமிடங்களைப் புடம் போட்டுக் கொடுத்திருக்கிறது கவிதை. அருமை மலர்.

rajamelaiyur said...

//
உலகத்து இயற்கையின்
மொத்த அழகும்
உச்சி முதல் பாதம்வரை
இட்டுச் செல்லும் பட்டு முத்தம்

//

அருமையான வரிகள்