Tuesday, April 13, 2010

தெருக்காட்சியும் தொலைக்காட்சியும்

குப்பைத் தொட்டியில்
வாழ்க்கை தேடும்
அழுக்குப் பெண்,
கூலி வேலையில்
பள்ளிப் பருவம் தொலைத்த
பசித்த சிறுவன்,
நடுத்தெருவில் மனைவியை
நையப் புடைக்கும்
இந்தியத் திருக் 'குடி'மகன்

தெருக்காட்சியைப்
பார்த்துப் பரிதவித்து
இல்லம் நுழைய...

ஐபிஎல் அட்டவணை
சானியா திருமணம்
சந்தை நிலவரம்

மந்திரி அறிக்கை
கல்லூரிச் சேர்க்கை
புதுப்பட விமர்சனம்

மெய்யான கதைகள்
பொய்யான புனைவுகள்........

தொலைக்காட்சியைப்
பார்த்துப் பல்லிளித்துப்
பரவசமடைந்ததில்
தெருக்காட்சியது
தேய்ந்தே போனது.

11 comments:

கோபிநாத் said...

பழகிடுச்சி!

ஜீவி said...

தலைப்பும் யதார்த்த பார்வையும் அருமை, பாசமலர்!

ராமலக்ஷ்மி said...

தேய்ந்துதான் போய்விடுகின்றன பாசமலர்:(!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மங்கை said...

:(

அன்றாடம் இது போல பல நிகழ்வுகள் மனதை பிசையாமல் இல்லை... இயலாமையும், சலிப்பும் தான் மிஞ்சுகிறது...தொலைகாட்சி பெட்டியைப் போல வெறுக்கும் பொருள் இந்த உலகத்தில் இல்லை என்றாகிவிட்டது... நன்னெறி(ethics) என்ற ஒன்றை தூக்கி எரிந்து விட்டு டீவி சேனல்களை போட்டி கொண்டு தரம் தாழ்த்துகின்றனர்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் பாசமலர். எப்பவாவது கண்ணில் படும் காட்சிகளுக்கு நிலைகளம் கூட தொலைக் காட்சியாகிவிடுகிறது

பாச மலர் / Paasa Malar said...

ஆமாம் கோபி..என்ன பண்றது..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி...நன்றி www.bogy.in

பாச மலர் / Paasa Malar said...

நாமே இப்படி மாறிப் போயிடுறோம்...சில நிகழ்வுகளால் பல நிகழ்வுகள் பின் தள்ளப்பட்டு விடுகின்றன...ராமலக்ஷ்மி

பாச மலர் / Paasa Malar said...

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது மங்கை, வல்லிம்மா..

தமிழ் said...

அருமை