Thursday, February 26, 2009

உட்கார்ந்து யோசித்த போது

திடீர்ச்செயல் முனைதல்

ஒரு செயலுக்காக திடீரென்று முனைகையில் சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அந்தச் செயல் தொடர்கையில் சரி, இது நிரந்தரமல்லவே கொஞ்ச காலம்தானே என்ற சமாதானம் தானாகத் தேடி வரும். கஷ்டங்களை அனுசரிக்கப் பழகிப் போகும். முக்கியமான செயல் என்பதால் செம்மையாக வேறு செய்ய வேண்டும்.

தொடரும் அசௌகரியங்கள்

இவ்வாறு தொடரும் போது முக்கியமான செயல் தடைபடாமல் நடைபெறுமே ஒழிய, பல அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும். என்னதான் மெனக்கெட்டுச் சமாளித்தாலும் இதுதொடர்ச்சியான அல்லலாகத் தோன்ற, செயலைக் கைவிட எண்ணம் தோன்றும்.

செயல் கைமாற்றம்

செயலைக் கைவிடச் சரியான சந்தர்ப்பத்தை மனம் எதிர்பார்க்கும். செயலைக் கைவிடவும் முடிவு ஏற்படும். செயலைக் கைமாற்ற சரியான நபரைத் தேடவேண்டியிருக்கும்.மனம் இச்செயல் புரியத் தேவையில்லாத, அது தரக்கூடிய அல்லல்கள் களையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும்.

ஊக்கம்

செயலைச் செவ்வனே செய்தமைக்காகப் பாராட்டுகள் மற்றும் மேலும் சிறப்பாகச் செயலாற்ற ஊக்கமளிப்பும், கைமாற்ற ஆளில்லாத காரணத்தால் செயலை மீண்டும் தொடரவேண்டிய நிலைமையும் ஏற்படும் சிலநேரம். 'நல்லவரே வல்லவரே' ரீதியிலான பாராட்டுகளுக்கு மனம் சற்றே கிறக்கப்படும். கிடைத்த ஊக்கத்தால் அசௌகரியங்கள் சமாளிக்கும் நிலைமை ஏற்படும் என்ற நம்பிக்கையும் தைரியமும் எங்கிருந்தோ வரும்.

செயல் தொடர்ச்சி

மீண்டும் மனம் மாறிச் செயலுடன் ஒன்றிப் போகும். முன்னிருந்த நிலை மாறி மீண்டும் பல புதுத் தீர்மானங்கள் பிறக்கும். வாழ்க்கை மீண்டும் விட்டு விடவேண்டும் என்று நினைத்த இடத்தில் தொடரும்.

இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் மேற்கூறிய அனைத்தும் மீண்டும்............... Money கணக்கு Vs மணிக்கணக்கு Vs (இப்போது கூடவே) மனக்கணக்கும் சேர்ந்து கொள்ளமீண்டும் அவள் ஒரு தொடர்கதை ஆகிப் போனாள்.

(புரியவில்லையென்றால் படிக்க: Money கணக்கு Vs மணிக்கணக்கு)

15 comments:

கோவி.கண்ணன் said...

சாமியார் ரேஞ்சிக்கு எழுதி இருக்கிங்க, இப்ப எனக்கு காவி கட்டிக்கொண்டு காசி யாத்திரை போகனும் என்று தோன்றுது !
:))))))

தமிழ் பிரியன் said...

நிறைய யோசிக்கிறீங்க..:)

பாச மலர் said...

கோவி கண்ணன்,

அச்சசோ வாழ்க்கையில் ஒரு சாதாரண விஷயத்துக்காக யோசிச்சதுங்க இது...காவியாவது சாமியாராவது...

திகழ்மிளிர் said...

இந்த மனக்கணக்கு வருவதற்கு
மணிக்கணக்காக சிந்தனை செய்ய வேண்டும்


:)))))))))))))))

பாச மலர் said...

தமிழ் பிரியன்

வாங்க ஊருக்கு வந்துட்டீங்க போலருக்கே..சொந்தக் கதை சோகக் கதை யோசிச்சத நண்பர்கள்கிட்டப் பகிர்ந்துக்கிறதுக்காக இது..

பாச மலர் said...

ஆமாம் திகழ்மிளிர்...அதான் உட்கார்ந்து யோசிச்சேன்...வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் தொடர் இன்னும் நினைவில் இருக்கிறது..சீக்கிரம் எழுதுகிறேன்..

கிருத்திகா said...

அய்யோ மலர், இங்கயும் சிச்சுவேஷன் ரொம்பவே ஒத்துபோகுது...ஆனா இன்னும் முடிவு பண்ணல.....

பாச மலர் said...

அதான் கிருத்திகா

உட்கார்ந்து யோசிங்க...வாழ்த்துகள் ..All the best

புதுகைத் தென்றல் said...

சாமியார் ரேஞ்சிக்கு எழுதி இருக்கிங்க, இப்ப எனக்கு காவி கட்டிக்கொண்டு காசி யாத்திரை போகனும் என்று தோன்றுது !//


:))))))

பாச மலர் said...

வாங்க கலா,

அர்த்தமுள்ள புன்னகைதான்..

sury said...

உங்களது பதிவு எங்களுக்கு ஒரு டானிக்காக இருக்கிறது.

கடந்த 67 வருட வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் எழுதியது
போலவே நடந்தது.

நடப்பது எல்லாம் நாராயணன் செயலெனக் கடமைகளை மட்டும் தொடர்ந்து
செய்துவரின், மனக் கணக்கு என்று ஒன்று தனியாக இருக்குமா என்ன ?

மனிக் கணக்கு, மணிக்கணக்கு மட்டுமல்ல, மனக்கணக்கு கூட மாயைதான்.
இட் இஸ் எ ஃபார்ம் ஆஃப் இல்லூஷன்.

வாழ்க்கைக்கு ஒரு லட்சியம் ஒரு ஃபோகல் பாயின்ட் இருக்கிற பட்சத்தில்
தெளிவான பாதையில் அமைதியாக போக இயலும்.

இதையும் பார்க்கவும்:
I decide to water my garden.

As I turn on the hose in the driveway,

I look over at my car and decide it needs washing.

As I start toward the garage,

I notice mail on the hall table,

I decide to go through the mail before I wash the car.

I lay my car keys on the table,

Put the junk mail in the waste bin under the table,

And notice that the bin is full.

So, I decide to put the bills back on the table and take out the rubbish first.

But then I think,

Since I'm going to be near the post box

When I take out the rubbish anyway,

I may as well pay the bills first.

I take my cheque book off the table,

And see that there is only one cheque left.

My extra cheques are in my desk in the study,

So I go to my desk where I find the cup of tea I'd been drinking.

I'm going to look for my cheques,

But first I need to push the tea aside, so that I don't accidentally knock it over.

The tea is getting cold, so I decide to put it in the kitchen to wash up.

As I head toward the kitchen with the tea,

A vase of flowers on the worktop catches my eye -- they need water.

I put the tea on the worktop and

Discover my reading glasses that

I've been searching for all morning.

I decide I'd better put them back on my desk,

But first I'm going to water the flowers.

I set the glasses back down on the worktop,

Fill a container with water and suddenly spot the TV remote.

Someone left it on the kitchen table.

I realize that tonight when we go to watch TV,

I'll be looking for the remote,

But I won't remember that it's on the kitchen table,

So I decide to put it back in the sitting room where it belongs,

But first I'll water the flowers.

I go to pour some water in the flowers, but most of it spills on the floor;

So, I set the remote back on the table,

Get some towels and wipe up the spill.

Then, I head down the hall trying to Remember what I was planning to do.

At the end of the day:

The car isn't washed

The bills aren't paid

There is a cold cup of tea sitting on the worktop

The flowers don't have enough water,

There is still only 1 cheque in my cheque book,

I can't find the remote,

I can't find my glasses,

And I don't remember what I did with the car keys.

Then, when I try to figure out why nothing got done today,

I'm really baffled because I know I was busy all damn day,

And I'm really tired.

I realize this is a serious problem,

And I'll try to get some help for it,

But first I'll check my e-mail....

Do me a favour: Forward this message to anyone you know,

Because I don't remember who the hell I've sent it to.

Don't laugh -- if this isn't you yet, your day is coming!!


சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட், யூஎஸ்.ஏ.

கோபிநாத் said...

கண்ண கட்டுதுடா சாமி :)

பாச மலர் said...

நன்றி சூரி அவர்களே..

//உங்களது பதிவு எங்களுக்கு ஒரு டானிக்காக இருக்கிறது. //

அனுபவ அறிவு அதிகம் வாய்ந்தவர்கள்..உங்களிடம் இவ்வார்த்தைகளைக் கேட்பது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி தருகிறது.

பாச மலர் said...

கோபி,

கண்ணைக் கட்டிருச்சா....மீண்டும் வேலைக்குப் போக முடிவு செய்துவிட்டேன் என்பதைக் கொஞ்சம் நேராகவே சொல்லியிருக்கலாமே என்று தோன்றுகிறது இப்போது..

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.