Thursday, March 5, 2009

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்/ வ(ப)ழக்கமாகிப் போன ஆங்கிலச் சொற்கள்

திகழ்மிளிர் இத்தொடரை எழுதச் சொல்லி நாட்கள் பலவாகிவிட்டன. சரி, பொதுவாக வழக்கில் ஒழிந்து நிற்கும் சொற்களைப் பற்றி எழுதலாம் என்று முதலில் நினைத்தேன். என் வழக்கிலேயே ஒழிந்து போய்விட்ட சொற்களைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது.

கடந்த வருடம், ஒரு நண்பர் பொதுவாக நாம் உபயோகிக்க மறந்த தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டு, (கிட்டத்தட்ட 100க்கும் மேல்..மேலோட்டமாகப் பட்டியலிட்ட போது)அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் ஆங்கிலச் சொற்கள் இவை என்று சுட்டினார்.

  • பழகிப் போய்விட்டது.
  • மாற்றிக் கொள்ள முடியாது,
  • சமமான தமிழ் வார்த்தை இல்லை,
  • சமமான தமிழ் வார்த்தை இருந்தாலும் உபயோகிப்பது எளிதாக இல்லை,
  • இவ்வார்த்தைகளைப் பேசினால் எல்லோரும் கேலியாகப் பார்க்கிறார்கள்
  • வேற்று மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில் தவறில்லை என்று தொல்காப்பியரே சொல்லிவிட்டார்
  • தற்போது செந்தமிழ், சுத்தத் தமிழ் என்று பேசுவது நாகரிகமாகிவிட்டது

இப்படி பல சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டாலும் நிறைய வார்த்தைகள் காணாமல் போய்விட்டதுதான் உண்மையான உண்மை.

என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்த முயற்சி செய்யத் தவறவில்லைதான். என்றாலும் முழுமையான முயற்சி செய்யவில்லை. அப்படி ஓர் அலட்சியப் போக்கு இந்த விஷயத்தில். என்ன முயன்றாலும் ஆங்கிலம் கலந்து நிற்கும் வாழ்க்கையாகிப் போய்விட்டது.

ஓர் ஆங்கில ஆசிரியை என்ற முறையில் ஆங்கிலம் பேசும் போது தமிழ் கலக்காமல் இருக்க முடிகிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவள் என்ற முறையில் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச முடியாமல் போனது வெட்கம், துக்கம்....

அப்படிச் சில வார்த்தைகளை இதோ பட்டியலிடுகிறேன்.

பாத்ரூம், சோப், டவல், மக், பைப், ப்ரஷ், பேஸ்ட், ப்ர்ட், ஆம்லெட், பட்டர், ஜாம், ப்ரெக்ஃபாஸ்ட், ஸ்கூல் பஸ், கேண்டீன், க்ளாஸ், ப்ளேட், டம்ளர், ரோடு, ஸ்டாப், வெய்ட், லஞ்ச் பாக்ஸ், புக், நோட்புக், பென், பென்சில், பேப்பர், க்வஸ்டின், ஆன்ஸர், ப்ளாக், பாஸ்போர்ட், விஸா, குட்மார்னிங், குட் ஈவ்னிங், குட் நைட், இன்டர்வெல், சினிமா, டிவி, ரேடியோ, பெட்ரோல்...........

அம்மாடி..இப்போதைக்கு முடியாது போலிருக்கிறதே..

இதை எழுதும் போது முரண்கள் பலவிதம் ..இதில் எழுதிய என் வரிகள் நினைவுக்கு வருகின்றன..

ஆங்கிலப் பேச்சில்

பிழையென்றால் வெட்கம்.'

டேமில் பேசவே தெரியாது'

சொல்வதற்குப் பெருமிதம்!

தமிழை 'டேமில்' என்று சொல்லுமளவு இன்னும் மோசமாகவில்லைதான்..என்றாலும் இத்தனை சதவிகிதம் தமிழ் பேசுகிறோம் என்ற நிலையில் இருக்கின்றேனே ஒழிய..முழுமையாகப் பேச என்றுதான் முழு முயற்சி செய்யப் போகிறேன்?

13 comments:

ராமலக்ஷ்மி said...

பழக்கமாகிப் போனச் சொற்களும்
சாக்குப் போக்கு பட்டியலும்
பலருக்கும் பொருந்துமென்றே
நினைக்கிறேன் நான் உட்பட:(!

நல்லவேளை நானும் 'டமில்’ எனும் சொல்லு அளவுக்கு ஆகவில்லை. முயற்சித்து சில வார்த்தைகளைத் தமிழிலேயே கூற பழகுவோம் இனி எனத் தோன்றுகிறது.

சந்தனமுல்லை said...

//ஆங்கிலப் பேச்சில்

பிழையென்றால் வெட்கம்.'

டேமில் பேசவே தெரியாது'

சொல்வதற்குப் பெருமிதம்!//

செம! (செம என்பது தமிழ்தானே!) :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

இதெல்லாம் பழக்கமாகி பின்ன வழக்கமாகிடுச்சு.. :)

திகழ்மிளிர் said...

முதலில் பதிவிற்கு நன்றிங்க

விரிவாக என்னுடைய கருத்தைப் பிறகு
இடுகிறேன்

அன்புடன்
திகழ்

திகழ்மிளிர் said...

/ * பழகிப் போய்விட்டது.
* மாற்றிக் கொள்ள முடியாது,
* சமமான தமிழ் வார்த்தை இல்லை,
* சமமான தமிழ் வார்த்தை இருந்தாலும் உபயோகிப்பது எளிதாக இல்லை,
* இவ்வார்த்தைகளைப் பேசினால் எல்லோரும் கேலியாகப் பார்க்கிறார்கள்
* வேற்று மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில் தவறில்லை என்று தொல்காப்பியரே சொல்லிவிட்டார்
* தற்போது செந்தமிழ், சுத்தத் தமிழ் என்று பேசுவது நாகரிகமாகிவிட்டது

இப்படி பல சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டாலும் நிறைய வார்த்தைகள் காணாமல் போய்விட்டதுதான் உண்மையான உண்மை./

சரியாகச் சொன்னீர்கள்

திகழ்மிளிர் said...

/ஓர் ஆங்கில ஆசிரியை என்ற முறையில் ஆங்கிலம் பேசும் போது தமிழ் கலக்காமல் இருக்க முடிகிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவள் என்ற முறையில் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச முடியாமல் போனது வெட்கம், துக்கம்.../

உண்மை தான்

கோபிநாத் said...

;)

கே.ரவிஷங்கர் said...

//என் வழக்கிலேயே ஒழிந்து போய்விட்ட சொற்களைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது//

இது நல்லா இருக்கு.

//சோப்,மக்,ப்ரஷ்,பேஸ்ட் ப்ர்ட், ஆம்லெட்,ஜாம்,ப்ரெக்ஃபாஸ்ட்,பஸ், , ப்ளேட், டம்ளர், ஸ்டாப்,பென்சில், பேப்பர், ப்ளாக், பாஸ்போர்ட், விஸா,சினிமா, டிவி, ரேடியோ, பெட்ரோல்//

மேல் உள்ள சொற்களை சொல்வதற்கு
வெட்கப் பட வேண்டாம்.ஏன்னெனில் அவையெல்லாமே இறக்குமதி ஆனவை.

மக்கள் தொ.காட்சியில் தமிழ்:

ஆட்டோ- தானி, கார்-மகிழ் உந்து(pleasure), சைக்கிள்:இரு சக்கர
உருளை, காப்பி-கொட்டை வடி நீர்


இது எப்படி இருக்கு?

பாச மலர் said...

உண்மையில் அப்படித்தான் தோன்றுகிரது ராமலக்ஷ்மி..

பாச மலர் said...

வாங்க சந்தனமுல்லை.

செம என்பது செமத்தியா இருக்கு என்றும் செம்மையாக இருக்கிறது என்றும் கொள்ளலாமோ..

பாச மலர் said...

ஆமா முத்து..இப்போ அதுவே விதியாகவும்(rule) ஆய்ருச்சு..

பாச மலர் said...

திகழ்மிளிர்,

நன்றி.

கோபி,

என்ன இது?!

பாச மலர் said...

ரவிஷங்கர்,

இறக்குமதி ஆன சொற்கள்..ஆனாலும் தமிழில் பல சொற்களுக்கு ஈடு இருக்கிற போது அவ்வாறு பேச நாம் பழகவில்லையே..

மக்கள் தொலைக்காட்சி இந்த விஷயத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று..