Saturday, August 4, 2012

நான் அறிந்த சிலம்பு - 25

புகார்க்காண்டம் - 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

சிலம்பின் வரிகள் இங்கே: 47 - 57

கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகியின் துயரநிலை


கணவனைப் பிரிந்த கண்ணகி
இன்புற்றிருக்க வேண்டிய
வேனில் பருவமதனில்
துன்புற்றிருந்தனள்.


அழகிய சிறிய சிவந்த பாதங்களில்
சிலம்புகள் அணியாதிருந்தனள்.


மென் துகிலுடுத்த அல்குல் இடத்து
அணியது சேர்த்திடும்
மேகலை அணியாதிருந்தனள்.


மார்புகளில் அழகுசேர்க்கும் வண்ணம்
குங்குமக் கலவை பூசாதிருந்தனள்.
 

மங்கல அணியது தவிர
வேறொரு அழகணியும் அணியாதிருந்தனள்.


வளைவான குண்டலங்கள் துறந்திட்ட
அவள் காதுகள் தாமும்
வளைந்து தாழ்ந்திருந்தன.


மதிபோன்ற ஒளிமுகத்தில்
 கலவியால் அரும்பிடும்
சிறுவியர்வைத்துளிகள் இல்லாதிருந்தன.


சிவந்த கயல்போன்ற நெடுவிழிகள்
மையது தீட்டுவதைத்தான் மறந்திட்டன.


பவளம் போலும் சிவந்த
ஒளிபொருந்திய நெற்றியது
 திலகமது இழந்திட்டது.


முத்தின் ஒளியது பொருந்திய
முத்தான அவள் புன்னகையைக்
கோவலன் தான் இழந்திட்டான்.


மைபோன்ற கருமையான
அவள் கூந்தலது
நெய் பூச மறந்திட்டது.


செயலற்ற நெஞ்சத்துடன்
கவலையுற்ற மனத்துடன்
கையறு நிலையில்
கலங்கி நின்றனள் கண்ணகி.

18.06.12 வல்லமை இதழில் வெளிவந்தது.

5 comments:

கோமதி அரசு said...

கண்ணகியின் துயரத்தை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
கவிதை அருமை.

கோபிநாத் said...

நல்லாயிருக்கு அக்கா..எனக்கு ஒரு டவுட்டு...துயரநிலை என்பது உடல் அளவில் மட்டும் சொல்லப்பட்டு இருக்கா? மனதில் கண்ணகியின் சிந்தனைகளில் அது எவ்வாறு இருக்குன்னு ஏதாச்சும் இருந்தால் அதையும் பகிருங்கள் ;)

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கோமதி மேடம்....நன்றி

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி...கண்ணகியைப் பற்றி அனைவ்ரும் எப்போதும் கேட்கும் கேள்விதான்...கேள்வி கேட்காமல் மனம் வருந்தாமல் கோபப்படாமல் எப்படி கண்ணகியால் இருக்க முடிந்தது என்று..

உடலளவில் சொல்லப்பட்ட துயரங்கள் மனதளவு துயரின் வெளிப்பாடுதான்....அன்று கண்ணகி மனதின் துயரை வார்த்தைகளால் வெளிக்காட்டவில்லை....கணவனின் மீதிருந்த காதலால் பிரிவுத்துயர் வாட்டியது...பொதுவாகப் பெண்கள் அதிலும் குறிப்பாகக் கண்ணகி மனதின் உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்துவது பாண்டியனின் அவையில்தான்....

இன்னும் போகிற போக்கில் சிலம்பு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...