Monday, May 23, 2011

அவரும் இவரும்


நம் எதிர்பார்ப்பு:
2+2 = 4

அவர் சொன்னார்:
3+2 = 5

இவர் சொல்கிறார்:
2+3 = 5

அவர் குடும்பம்
அசல் ஆலமரம்
விழுதுகளாய் வியாபித்து
விண்ணளவு வளர்ந்து
நீள அகலம்
உயரம் ஆழம்
முடியுமட்டும் அளந்து
ஆர்ப்பரித்தது...

இவர் தோழி நட்பு
போன்சாய் ஆலமரம்
வரவேற்பறையில்
படு சமர்த்தாய்த்
தொட்டிக்குள் அமர்ந்து
எண்பது அடி பலத்தை
எட்டங்குலத்துள் அடக்கி
ஆர்ப்பரிக்கும்...

இருவரிடத்தும்
சமமாய்ச் சீரழியும்
சமச்சீர் கல்வி..

புதிய கோட்டையா
பழைய கோட்டையா
கோட்டைக்கான சர்ச்சையில்
கோட்டைவிடப்படும்
ஆக்கப்பூர்வ திட்டங்கள்..

அவர் எதுகை
இவர் மோனை

அவர் ஏணி என்பார்
இவர் கோணி என்பார்

கட்சி
கொள்கை
மக்கள்

அவருக்கும்
இவருக்கும்
விளையாட்டு பொம்மை...

நாம் மட்டும்
என்றும் மாறாத
சகிப்புத்தன்மையுடன்..

அவரையும் சகிப்போம்
இவரையும் சகிப்போம்...

ஐந்து வருடம்
கழித்து..
இன்னமும்
சகிப்போம்!

3 comments:

ராமலக்ஷ்மி said...

//நாம் மட்டும்
என்றும் மாறாத
சகிப்புத்தன்மையுடன்..//

ஆம்:(!

மக்களின் கையாலாகா நிலையை, அதில் அழகாய் குளிர்காயும் கட்சிகளை அப்படியே காட்சிப் படுத்தியுள்ளீர்கள்.

கோபிநாத் said...

ராமலட்சுமி அக்காவுக்கு ஒரு ரீப்பிட்டேய் ;)

ஹுஸைனம்மா said...

கவிதை புன்னகை பூக்க வைக்கிறது - விரக்திப் புன்னகை. கோமாளி வெளியே சிரித்தாலும், உள்ளே அழுவதுபோல, நாமும் எந்த ஆட்சி வந்தாலும்!!