Monday, February 28, 2011

தேர்தல் தேர்வு

கொள்கை மறந்த
கொள்ளை
கூட்டுச்சதி மறந்த
கூட்டணிச்சதி...

மக்கள்நலம் மறந்த
பணநலம்
நியாய அநியாயம் மறந்த
லஞ்சலாவண்யம்...

இனப்படுகொலை மறந்த
மனப்படுகொலை
மொழிமாண்பு மறந்த
மாண்புமிகுக்கள்.....

நாளைய, நேற்றைய தவறுகள் மறந்த
இன்றைய நேசமணிகள்
கழகக் கலகங்களை மறந்த
கண்மணிகள்...

உடன்பட மறந்த
உடன்பிறப்புகள்
இரக்கம் மறந்த
இரத்தத்தின் இரத்தங்கள்...

தேர்தல் களங்களில்
தேர்வுகள் ஆரம்பம்!

வெற்றி பெற்றதும்
ஆட்சியமைப்பு!
கூட்டணி தேராவிட்டால்
ஆட்சிக்கலைப்பு!
குதிரைபேரத்தில் குளிர்காய்ந்து
மீண்டும் கைகோர்ப்பு!

தேர்தல் களங்களில்
தேர்வுகள் ஆரம்பம்!

இக்கழகமோ...
அக்கழகமோ...
அமோகமாய் வெற்றிதான்!

இதற்கு அது பரவாயில்லை!
அதற்கு இது பரவாயில்லை!
பாழாய்ப்போன நம்பிக்கையில்
மறுபடியும் மறுபடியும்
மறுதேர்வு எழுதினாலும்
பொதுமக்களுக்கு மட்டும்
பாரம்பரியத் தோல்விதான்!

3 comments:

கோபிநாத் said...

தேர்தல் கவிதை அருமை ;)

ராமலக்ஷ்மி said...

//இதற்கு அது பரவாயில்லை!
அதற்கு இது பரவாயில்லை!//

ஆமா..

//பாழாய்ப்போன நம்பிக்கையில்
மறுபடியும் மறுபடியும்
மறுதேர்வு எழுதினாலும்
பொதுமக்களுக்கு மட்டும்
பாரம்பரியத் தோல்விதான்!//

உண்மை:(!

நச் கவிதை நன்று.

அன்புடன் அருணா said...

ஆஹா!பூங்கொத்து!