Sunday, January 25, 2009

குடியரசு.....வல்லரசு


பிறப்பு
கல்வி
உழைப்பு
திருமணம்
இனப்பெருக்கு
பிள்ளை வளர்ப்பு
இறப்பு
-தனிமனிதப் பெருங்கவலை.

நதி நிலம்
சாதி மதம்
இனம் பணம்
மொழி மாநிலம்
முரண்பாடுகள்
வன்முறைகள்
-பொது வாழ்க்கைப் பெருந்தொல்லை.

ஈடேற்ற நேரமில்லா
இல்லத்தரசு.
குடியுரிமையே
கேள்விக்குறியாய்
குடியரசு.

மாற்றுக் கட்சிக்கு
மறுமொழி புகன்றே
மலைத்துக் களைக்கும்
மாநில அரசு.
நலம் பல நல்கவியலா
நடுவண் அரசு.

இதில்..
எங்கே
எப்போது
என்று
எப்படி
யார் காண முடியும்
வல்லரசு?!

என்றாலும்
இதுவும் க(ந)டந்து போம்
என்று
நம்பிக்கையுடன் நம்புவோம்!

குடியரசு தின வாழ்த்துகள்!

21 comments:

ராமலக்ஷ்மி said...

//தனிமனிதப் பெருங்கவலை//

//பொது வாழ்க்கைப் பெருந்தொல்லை//

//எங்கே
எப்போது
என்று
எப்படி
யார் காண முடியும்
வல்லரசு?!//

குடியரசு தினத்தில் எல்லார் மனதிலும்
எழக் கூடிய கேள்வியை முன் வைத்து..

//என்றாலும்
இதுவும் க(ந)டந்து போம்
என்று
நம்பிக்கையுடன் நம்புவோம்!//

என நம்பிக்கை தரும் நல் வார்த்தைகளும் தந்து விட்டீர்கள் பாசமலர்.

குடியரசு தின வாழ்த்துகள்!

Unknown said...

பாச மலர்,

அவரவர்களுக்கு அவர்கள் கவலை.இதுதான் நடை முறை என்று
கொட்டு முரசு.

சென்ஷி said...

கவிதை அருமை..

மங்கை said...

நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது...

இருந்தாலும் பெருமிதத்துடன் எதிர்கொள்வோம்... குடியரசு தின வாழ்த்துக்கள்

நல்லா இருக்கு மலர்..

இப்னு ஹம்துன் said...

இலக்கு தேடும் பயணத்தில்
இன்னொரு மைல்கல்.
இங்கே
நாற்சந்திகள் தோறும்
நடக்கின்றன
பாதைகள் குறித்த
பட்டிமன்றங்கள்.
கவலைச்சுமைகள்
கூடுகிறதன்றி
குறைவதாயில்லை கடுகளவும்.
தொலைநோக்குவதாய்ச் சொல்லும் தலைமைக்கும் தெரியவில்லை
தூர அளவுகளின் துல்லியம்.
திசைத் திருப்பும்
சுயநல அரசியல்
குழப்பவாதிகள்.
இத்தனைக்கும் ஊடே
நம்பிக்'கைக் காட்டி'கள்
நகர்த்துகின்றன பாதங்களை.
வாழ்த்துகள் சம்பிரதாயமே
வெற்றியைத் தொடும்வரைக்கும்.

கோபிநாத் said...

கவிதை நல்லாயிருக்கு..!

ராமலக்ஷ்மி said...

இப்னு ஹம்துன் அவர்களின் கவிதையும் வெகு அருமை.

பாச மலர் / Paasa Malar said...

ராமலக்ஷ்மி, மங்கை,

நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது.

பாச மலர் / Paasa Malar said...

சென்ஷி, கோபி,

நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

இம்னுஹம்துன்,

கவிதை அருமையான வரிகளில் அழகான படைப்பு. அதிலும் 'கைகாட்டி' அழகான சொல்லாடல்.

பாச மலர் / Paasa Malar said...

ரவிஷங்கர்,

ஆமா..இதுதான் நடைமுறை..அதையும் தாண்டி நம்பிக்கை மட்டும் இருக்கிறது இன்னும்..

நாகை சிவா said...

எதை கடந்து போவோம்.

வல்லரசாக வேண்டாம்! நல்லரசாக மாறினாலே போதும்.

குடியரசு தின வாழ்த்துக்கள் !

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

\\என்றாலும் இதுவும் க(ந)டந்து போம் என்று நம்பிக்கையுடன் நம்புவோம்!\\

நம்புவோம்.

பாச மலர் / Paasa Malar said...

//எதை கடந்து போவோம்.//

இதுவும் கடந்து போ(கு)ம்..எந்த நிலையும் நிரந்தரமல்ல..

//வல்லரசாக வேண்டாம்! நல்லரசாக மாறினாலே போதும்.//

அதுவும் சரிதான்.

வாழ்த்துகள் ஜமால்.

கபீஷ் said...

Good one, reflects the present situation as it is

சாந்தி நேசக்கரம் said...

குடியரசு தினத்தை நினைந்த கவிதை சுதந்திரத்துக்குப் பின்னாலும் சுதநதிரமயமாகாத சூழலை விளக்கியிருக்கிறது கவிதை.
பாராட்டுக்கள் பாசமலர்.

சாந்தி

sury siva said...

//எங்கே
எப்போது
என்று
எப்படி
யார் காண முடியும்
வல்லரசு?!//


தருமம் சீர்குலைந்து அதர்மம் தலை தூக்கும்போது பாரத நாட்டிற்குத் துயருறும்பொழுது
நான் தோன்றுவேன் என்று கீதை சொல்லிகிறது.

இந்தியா வல்லரசு ஆகவேண்டும் எனின் ஒரு வல்லவன் வரவேண்டும், ஒரு நல்லவன் வரவேண்டும்.

சாத்தியமா எனத்தோன்றவில்லை. அதற்குக் காரணம் அந்த அளவுக்கு இந்தியாவில்
அதர்மம் முற்றிப்போகவில்லை போலிருக்கிறது.

சைக்கிள் சக்கிரத்தின் ஆரம் கீழே முற்றிலும் சென்றபின்பு தான் மேல் நோக்கி வருகிறது. ஆயினும், இது தான் கீழ் என்று வந்தபின் மேல் நோக்கி வரும்.

இவ்விதிக்கு நாடு, அதை வழி நடத்துவோர், புறமபல்ல.

இப்போதைக்கு, குடியரசு தினத்திற்கு சாக்லேட் வினியோகம் செய்து, சற்று நேரம்
நிம்மதியாக இருப்போம்.

சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, அமெரிக்கா.
வருக்:
http://arthamullavalaipathivugal.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கபீஷ், சாந்தி.

பாச மலர் / Paasa Malar said...

//இப்போதைக்கு, குடியரசு தினத்திற்கு சாக்லேட் வினியோகம் செய்து, சற்று நேரம்
நிம்மதியாக இருப்போம்.//

அதே..அதே.

தேவன் மாயம் said...

இதில்..
எங்கே
எப்போது
என்று
எப்படி
யார் காண முடியும்
வல்லரசு?!//

ஏதோ குறைந்த பட்ச வாழ்க்கைக்கு
உத்தரவாதம் இருந்தா சரி

பாச மலர் / Paasa Malar said...

தேவன்மயம்,

//ஏதோ குறைந்த பட்ச வாழ்க்கைக்கு
உத்தரவாதம் இருந்தா சரி//

நிலைமை இந்த அளவுக்கு மோசமாகிவிடவில்லை பலருக்கு இன்னும் என்றும் நம்புவோம்..