Wednesday, June 24, 2009

32 கேள்விகள் 32 பதில்கள்

32 கேள்விகள் தொடர் பதிவுக்கு என்னை அழைத்த கோமதிக்கு நன்றி.

எனது பதில்கள்:

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஜாதகப் பெயர் 'ஹே'யில் தான் வந்ததாம்..தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக மலர்ச்செல்வி என்று வைத்தார்கள் என் அப்பாவும் தாத்தாவும்.

மிகவும் பிடிக்கும். அதிலும் சுருக்கமாக 'மலர்' மிகவும் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அய்யோ..தொலைக்காட்சி, சினிமாக் காட்சிகளுக்காய் உணர்ச்சிவசப்பட்டு அடிக்கடி அழுவதுண்டு....கடைசியா Federer சமீபத்திய போட்டியில் ஜெயித்த போது, அவர் அழுத அழுகையில் எனக்கும் அழுகை வந்துவிட்டது..

உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளுக்காய் நான் அழுவது மிக அபூர்வம்...
அந்த வகையில் ஊரிலிருந்து ரியாத் திரும்பி வரும்போது கடைசியாகக் கொஞ்சமாக அழுதேன் என்று நினைக்கிறேன்.


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

நல்ல காய் போட்டு செய்த எந்த வகைக் குழம்பும் மிகவும் பிடிக்கும்..மற்றபடி வழக்கமான சாதம், பொரியல் எதுவாக இருந்தாலும் சரி..

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக வைத்துக் கொள்வேன்.


6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் குளிக்க மிகவும் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவர்கள் பழகும் விதம். அதற்கு ஏற்றாற் போல் பழக வேண்டும் என்பதற்காக..


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம்: எளிதில் அனைவரிடமும் பழகுவது;
பிடிக்காத விஷயம்: சோம்பேறித்தனம், கோபம்.


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம்: எந்தப் ப்ரச்னையையும் எளிதாக ஏற்றுக் கொண்டு, எதையும் சமாளிக்கும் பக்குவம்+தைரியம், தோழமையுணர்வு.

பிடிக்காத விஷயம்: சின்ன மற்றும் பெரிய விஷயங்களுக்குத் திட்டமிடாத தன்மை.

10. யார் பக்கத்திலே இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

மறைந்துவிட்ட என் அப்பா...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அட..எனக்குப் பிடித்த கத்தரிப்பூ வண்ணம்...


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

K Tv யில் காக்கிச்சட்டை படத்தில் கமல்...


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பேனா என்றால் கத்தரிப்பூ வண்ணம்....மை என்றால் கருப்பு அல்லது பச்சை.

14. பிடித்த மணம்?

மல்லிகைப்பூமணம், ஜாதிப்பூமணம், மண்வாசனை, விபூதி வாசனை.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கிருத்திகா - இன்னும் நேரில் பார்த்ததில்லை..பதிவுகளில்தான் அறிமுகம்...ஓரிரு முறை மட்டுமே chat பண்ணியுள்ளோம்..இருந்தாலும் ஏதோ நீண்ட காலம் பழகிய தோழி போன்ற ஓர் உணர்வு. என்னுடன் ஒத்துப் போகின்ற ஒற்றுமைகள் பிடித்த விஷயம்...இன்னும் கொஞ்சம் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை என்பதால்..அவரை அழைக்கப் போகிறேன்.

செல்வி ஷங்கர் - நம்ம சீனா சார் மனைவிதான். நேரில் சந்தித்தபோதும் சரி, எழுத்துகளில் சந்தித்த போதும் சரி, வியக்க வைக்கும் விஷயங்கள், கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இவரிடம் உண்டு...இவரைப் பற்றியும் இன்னும் சற்று அதிகமாக அறிந்து கொள்ள ஆசை..

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

நிலாக்குட்டி பற்றிய எல்லாப் பதிவுகளும்..கோமதி எழுதுவதிலிருந்து கொஞ்சமும் கூடாமல் குறையாமல் இருக்கும் நிலாவின் செயல்கள்...கோமதியின் விவரிப்புத் திறமை பாராட்டுக்குரியது...

17. பிடித்த விளையாட்டு?

உட்கார்ந்து விளையாடுவதில் ரம்மி, பல்லாங்குழி...ஓடி விளையாடுவதைப் பார்க்கப் பிடிக்கும்..குறிப்பாக டென்னிஸ் பார்க்கப் பிடிக்கும்.

18. கண்ணாடி அணிபவரா?

புத்தகம் படிக்கும் நேரம் பார்வைக் கோளாறுக்கான கண்ணாடி, சவுதி வெயிலுக்குக் கறுப்புக் கண்ணாடி.


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

மனதுக்குப் பாரமான முடிவுகள் இருக்கவே கூடாது...இலகுவான கதை..அழுத்தமான காட்சிகள் சில...பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருக்க வேண்டும்...

20. கடைசியாகப் பார்த்த படம்?

திரையரங்கில் 'தசாவதாரம்' (ஊரில்தான்..ரியாத்தில் ஏதுங்க திரையரங்கம்)
சிடி யில் 'யாவரும் நலம்'.


21. பிடித்த பருவ காலம் எது?

வசந்தம்...

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்போதைக்கு 'அடோன்' தமிழ் இலக்கணம்..என் பெண்ணுக்கு இலக்கணம் கற்றுக் கொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
நிறைய இருக்கிறது கைவசம்...நேரம் முழுமையாகக் கிடைக்க இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்...

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என் பெண்தான் அவ்வப்போது மாற்றுவாள்..

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: மென்மையான எந்த ஒரு பாடலும்
பிடிக்காதது: அதிரடியான எதுவும்..

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

எகிப்து, கென்யா

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சம் எழுதுவது.


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சந்தர்ப்பவாத நடிப்பு.


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்கோபம்


29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தளம்?

அயல்நாடுகளில் ..எகிப்து...நம் நாட்டில் ஜெய்ப்பூர்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னில் சில குணங்களை மற்றும் தவிர்த்து நான் நானாகவே இருக்க ஆசை.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி என்று ஒன்றுமே கிடையாது.


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

பலவகை அனுபவங்கள் ஏந்திய அழகான அட்சய பாத்திரம்...

23 comments:

ராமலக்ஷ்மி said...

எல்லாப் பதில்களும் அருமை.
மென்மையும் கூட உங்கள் பெயரிலிருக்கும் மலர் போலவே..:),
பாருங்கள்!

//மனதுக்குப் பாரமான முடிவுகள் இருக்கவே கூடாது...இலகுவான கதை..//

//பிடித்த சத்தம்: மென்மையான எந்த ஒரு பாடலும்
பிடிக்காதது: அதிரடியான எதுவும்..//

சென்ஷி said...

//
பலவகை அனுபவங்கள் ஏந்திய அழகான அட்சய பாத்திரம்...//

:)

அழகான பதில்!

ஆயில்யன் said...

/ராமலக்ஷ்மி said...

எல்லாப் பதில்களும் அருமை.
மென்மையும் கூட உங்கள் பெயரிலிருக்கும் மலர் போலவே..:),//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்! :)

ஆயில்யன் said...

//உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தளம்?

அயல்நாடுகளில் ..எகிப்து//


மீ டூ ஒரு ஆசை இங்கிருந்து ஓடிப்போய் பார்த்துட்டு ஓடியாந்துடணும்ன்னு பார்ப்போம் வாய்ப்பு கிடைச்சா :)

பாச மலர் said...

இசையில் மட்டும்தான் இந்த மென்மை..மற்றபடி அவ்வளவாக இல்லை...

பாச மலர் said...

ஆமாம் சென்ஷி..வாழ்க்கை அழகானதுதானே..

பாச மலர் said...

கண்டிப்பா எகிப்து மிஸ் பண்ணிராதீங்க ஆயில்யன்...இங்கே இருக்கும் போது மிகவும் சுலபமாகப் போய் வரலாம்..ஒரு வாரம் அல்லது 10 நாள் தேவைப்படும்...நைல் நதியில் cruise trip ல் போய் சுற்றிப் பாருங்கள்...

கோபிநாத் said...

லிஸ்டில் ஒன்னு காலி ;(

நல்ல வாசனை பதில்களில் ;)

அன்புடன் அருணா said...

//நம் நாட்டில் ஜெய்ப்பூர்//
ஹையா எங்க ஊர்....எப்போ வரப் போறீங்க??
ரொம்ப நாளா எழுதவே இல்லையே???

பாச மலர் said...

/லிஸ்டில் ஒன்னு காலி /

புரியவில்லையே கோபி..

பாச மலர் said...

வாங்க அருணா...ஜெய்ப்பூர் ஒரு முறை வந்த போது கொஞ்சம் அவசர அவசரமாகப் பார்த்து விட்டு வந்தோம்..மீண்டும் ஒரு முறை வர ஆசை...எப்போதென்று
தெரியவிலை.

வேலை காரணமாக இணையம் பக்கம் வருவது குறைந்து விட்டது..

புதுகைத் தென்றல் said...

அழகான பதில்கள்

கோபிநாத் said...

\\பாச மலர் said...
/லிஸ்டில் ஒன்னு காலி /

புரியவில்லையே கோபி..
\\

அக்கா நான் உங்களை கூப்பிட வேண்டுமுன்னு லிஸ்டு போட்டு வச்சிருந்தேன் அதான் ;))))

பாச மலர் said...

நன்றி கலா...

பாச மலர் said...

நன்றி கோபி...எனக்கும் அப்படித்தான்...நிறைய பேர் நினைத்தவர்கள் எல்லாம் லிஸ்டில் முந்திக்கொண்டு விட்டார்கள்...

திகழ்மிளிர் said...

/
பிடித்த விஷயம்: எளிதில் அனைவரிடமும் பழகுவது;
பிடிக்காத விஷயம்: சோம்பேறித்தனம், கோபம்./

/புத்தகம் படிக்கும் நேரம் பார்வைக் கோளாறுக்கான கண்ணாடி, சவுதி வெயிலுக்குக் கறுப்புக் கண்ணாடி./

இரசித்தேன்

திகழ்மிளிர் said...

/இப்போதைக்கு 'அடோன்' தமிழ் இலக்கணம்..என் பெண்ணுக்கு இலக்கணம் கற்றுக் கொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
நிறைய இருக்கிறது கைவசம்...நேரம் முழுமையாகக் கிடைக்க இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்.../

உண்மை தான்

திகழ்மிளிர் said...

/
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சம் எழுதுவது./


எங்களின் உள்ளம் தான்
கெஞ்சுகிறது இன்னும் நிறைய எழுத

பாச மலர் said...

நன்றி திகழ்மிளிர்..

காட்டாறு said...

மென்மையே உன் மறு பெயர்தான் மலரோ? நெசமாவே நீங்க மென்மையானவாரா? இல்ல....? ஏன் கேட்கிறேன் என்றால் கத்திரிப்பு கலரில் கத்திருப்பு இருக்கே. ;-)

பாச மலர் said...

காட்டாறு..மென்மையா..
அப்படியெல்லாம் பெரிசா ஒண்னும் இல்ல...

RATHNESH said...

கேள்விகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்; பதில்கள் அழகாக மென்மையாக இருந்தன.

RATHNESH said...

கேள்விகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்; பதில்கள் அழகாக மென்மையாக இருந்தன.