என் வலைப்பூவிற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்த திவ்யாவுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
இவ்விருதினை நான் இவர்களுக்குக் கொடுக்க விரும்புகின்றேன்.
கிருத்திகா: இவரின் படைப்புகளில் உள்ள நேர்த்தி மற்றும் தனி அழகு என்னை மிகவும் கவர்ந்தது. கவிதை, கட்டுரை, புத்தக விமர்சனம், என்று பல தரப்பட்ட படைப்புகள் இவர் வலைப்பூவில் காணலாம். எல்லாமே அனுபவங்களை அழகாக வடித்துக் கொடுக்கும் படைப்புகள்.
ரத்னேஷ்: இவரின் வலைப்பூவில் இவர் அலசாத விஷயங்கள் மிகவும் குறைவு. அரசியல் முதல் இலக்கியம் வரை மிகவும் அனாயாசமாக இருக்கும் இவர் அலசல். எந்தவொரு கருத்தையும் தயங்காமல் முன்வைக்கும் இவரது பதிவுகள். அடிக்கடி பதிவிடும் இவரின் பதிவுகள் ஏனோ சமீபகாலமாகக் காணப்படவில்லை. வேலைப் பளு அதிகம் என்று நினைக்கிறேன்.
ராமலக்ஷ்மி: சமீபகாலமாகத்தான் இவரது பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன். இவரது கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவ்வப்போதைய செய்திகளைக் கவிதை வடிவில் தரும் இவர் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்.(இதில் இவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.) சிறுகதைகளில் தவழும் எதார்த்தமும், வட்டார வழக்கும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
திகழ்மிளிர்: இவரின் வலைப்பூவின் அமைப்பே மிகச் சிறப்பாக இருக்கும். இவரது கவிதைகளில் மிளிரும் தனியழகு கற்பனைச்செறிவு மற்றும் சுருக்கமான அழகான சொல்லடுக்கு எனக்கு மிகவும் பிடித்தவை.
என். கணேசன்: ஆனந்த விகடன் மற்றும் பல பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுதியுள்ளவர். இவரது கட்டுரைகள் படித்ததும் ஒரு புத்துணர்ச்சி பூத்துக் கிளம்பும். சிறுசிறு கதைகள் மூலம் இவர் கூறும் நல்ல கருத்துகளில் கற்றுக் கொள்ளும்படியான விஷயங்கள் ஏராளம் இருக்கும்.
இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
16 comments:
உங்களின் அன்பிற்கு
மிக்க நன்றிங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
அனைவருக்கும் வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
ஓஹோ..பார்த்தாச்சா திகழ்மிளிர்..இப்போதான் உங்களுக்குத் தெரிவித்தேன்..
பாசமலர் அக்காவிற்கு வாழ்த்துக்கள்!
விருது பெற்ற கிருத்திகா, ரத்னேஷ்,ராமலக்ஷ்மி அக்கா, திகழ்மிளிர் மற்றும் கணேசன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்!
பாசமலர் அக்காவிற்கு விருது வழங்கிய திவ்யா மாஸ்டருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!
\\"பட்டாம்பூச்சி பறக்குது பறக்குது"//
விருது வாங்கிய என் மனமும் பறக்குது பறக்குது. உண்மைதான், உங்க பாணியும் என் பாணியும் ஒன்று, அதுவே உங்கள் கவிதைகள் மேல் கூடுதல் ஈர்ப்பு:)! அன்புடன் தந்திருக்கும் விருதுக்கு மிக்க நன்றி பாசமலர்.
வாழ்த்துக்கள்ங்க....என்ன அடிக்கடி எழுதறதில்லே இப்போல்லாம்?
அன்புடன் அருணா
/என்ன அடிக்கடி எழுதறதில்லே இப்போல்லாம்?/
இதே என்
ஆதங்கமும்
வாழ்த்துக்கள்
நிஜமா நல்லவனின் பாசத்துக்கு நன்றி..
உங்கள் பதிவுகளுக்கு மீண்டும் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.
நன்றி அருணா..
கணினியுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவாகிவிட்டது..இன்னும் ஒரு மாதம் இப்படித்தான்...உங்கலுக்கும் பட்டாம்பூச்சி வாழ்த்துகள்
நன்றி திகழ்மிளிர்..
நன்றி சிவா..
வாழ்த்துக்கள் அக்கா ;)
கிருத்திகா,ரத்னேஷ்,ராமலக்ஷ்மி,திகழ்மிளிர்,என். கணேசன்..உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
நன்றி கோபி.
விருது தந்தமைக்கு மிக்க நன்றி பாச மலர் அவர்களே. பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
Post a Comment