Wednesday, March 24, 2010

ஆ! சிரமம்! ஆசிரமம்!

ஆசிரமங்களில்
ஆசிகள் வழங்கும்
ஆதி பகவன்கள்
ஆண்டவா!

ஆண்டவனைத் தேடி
ஆசிரமம் ஓடி
ஆனந்தலாஹிரியில்
ஆடித் திளைத்து
ஆர்ப்பரிக்கும்
ஆயிரமாயிரம்
ஆண்கள் பெண்கள்..

ஆசை போதையில்
ஆசிரமம் தேடி
அசல் போதையில்
அந்நிய நாட்டவரும்
அமிழ்ந்து திளைக்க..

அலுப்புடன் வியர்வை
அனுதினம் சிந்தி
அன்றாடம்
அல்லலுற்றுப் பிழைக்கும்
அங்கமுத்து தங்கமுத்துவின்
ஆயிரம் கோடி வரிப்பணமும்
ஆசிரம அழகுக் கட்டடங்களின்
அலங்காரச் சுவர்களில்
அல்லவா இழைக்கப்பட்டுள்ளன?

ஆத்திரப்படுவதா?
ஆச்சரியப்படுவதா?
ஆயாசப்படுவதா?
ஆதங்கப்படுவதா?

ஆண்டவா!
ஆண்டவா!

7 comments:

கோபிநாத் said...

\\ஆத்திரப்படுவதா?
ஆச்சரியப்படுவதா?
ஆயாசப்படுவதா?
ஆதங்கப்படுவதா?\\

ஒன்னும் பட முடியாது...எல்லாம் ஒரு செய்தி அம்புட்டு தான்...;)

அ ஆ வச்சே கலக்கியிருக்கிங்க...;)

பாச மலர் / Paasa Malar said...

ஆமாம் கோபி. ஒண்ணும் பண்ண முடியாது.

ராமலக்ஷ்மி said...

ஆ..சிரமம்தான் இவர்கள் திருந்துவது.

மங்கை said...

அ டேங்கப்பா சொல்லிகிறேன் முதல்ல


ஆகாத காரியம் - திருந்துவது

ஆண்டவா ஆண்டவா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் said...
\\ஆத்திரப்படுவதா?
ஆச்சரியப்படுவதா?
ஆயாசப்படுவதா?
ஆதங்கப்படுவதா?\\

ஒன்னும் பட முடியாது...எல்லாம் ஒரு செய்தி அம்புட்டு தான்...;)

அ ஆ வச்சே கலக்கியிருக்கிங்க..
/
ரிப்பீட்டேய் :)

பாச மலர் / Paasa Malar said...

வாங்க ராமலக்ஷ்மி, மங்கை, முத்து..

இவங்க மட்டும் இல்ல...இவங்களைப் போய்ப் பாக்கறவங்களும் திருந்த மாட்டாங்க போலருக்கே..

கிருத்திகா ஸ்ரீதர் said...

பாத்ததும் பத்திகிட்டு வருது மலர் இந்த அக்கிரமங்களை கேள்வி கேட்கக்கூட ஆளில்லையான்னு கேள்வி மட்டும் தான் மிஞ்சுது..